என் மலர்
நீங்கள் தேடியது "Senthil Balajiஅமைச்சர் செந்தில் பாலாஜி"
- உலக பொருளாதாரம் தொய்வு அடைந்துள்ள நிலையில் இந்தியா உலகில் 5-வது மிகப்பெரிய வளர்ந்து வரும் பொருளாதார நாடாக முன்னேறியுள்ளது.
- ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது மக்கள் திட்டத்துக்கு ரூ.100 ஒதுக்கினால் ரூ.15 மட்டுமே சென்று சேர்வதாக கூறியிருந்தார்.
புதுச்சேரி:
புதுவை கம்பன் கலையரங்கில் பா.ஜனதா சார்பில் நடந்த பிரதமரின் 9 ஆண்டுகால சாதனை விளக்க மாநாட்டில் மத்திய மந்திரி எல்.முருகன் பேசியதாவது:-
2014-க்கு முன் நாட்டை ஆண்டவர்கள், ஊழலை பிரத்யேகமாக கொண்டு ஆட்சி செய்தனர். மக்கள் விடிவுக்காக காத்திருந்தபோது பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தார். ஏழைகளின் நலன், மக்கள் சேவை ஆகியவற்றை தாரக மந்திரமாக கொண்டு ஆட்சி செய்து வருகிறார். அரசின் மானியம் மக்களை நேரடியாக சென்றடைய மக்களுக்கு இலவச வங்கி கணக்கு தொடங்கினார்.
ஏழை மக்கள் வீடு கட்டும் திட்டம், சுகாதாரமான குடிநீர் வழங்க ஜல்ஜீவன் திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டம், உஜ்வாலா திட்டத்தில் கியாஸ் இணைப்பு, விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை உட்பட பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். உலக நாடுகளின் பார்வை இந்தியா மீது அதிகளவில் உள்ளதற்கு பிரதமர் மோடிதான் காரணம்.
உலக பொருளாதாரம் தொய்வு அடைந்துள்ள நிலையில் இந்தியா உலகில் 5-வது மிகப்பெரிய வளர்ந்து வரும் பொருளாதார நாடாக முன்னேறியுள்ளது. ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது மக்கள் திட்டத்துக்கு ரூ.100 ஒதுக்கினால் ரூ.15 மட்டுமே சென்று சேர்வதாக கூறியிருந்தார். தற்போது பிரதமர் மோடி ஆட்சியில் 100 சதவீதமும் மக்களை நேரடியாக சென்றடைகிறது.
சமூகநீதி பற்றி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நாராயணசாமி ஆகியோர் பேசுகின்றனர். உண்மையில் சமூகநீதிக்கு உதாரணம் பிரதமர் மோடிதான். புதுவையில் பா.ஜனதா அமைச்சர் வசம் உள்ள உள்துறை மூலம் 700 போலீசார் எந்த முறைகேடும் இன்றி பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுவைக்கு ரூ.ஆயிரத்து 500 கோடி சிறப்பு நிதி வழங்கியுள்ளோம். பிரதமர் கூறியபடி பெஸ்ட் புதுவையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் கோவிலுக்குக்கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இளைஞர்களை திருமாவளவன் திசை திருப்புவதாக சிலர் கூறுகின்றனர். இளைஞர்கள் வளர்ச்சிப்பாதையை நோக்கி திரும்ப வேண்டும்.
வரும் 2047-ல் இந்தியா வல்லரசாக மாற பாடுபடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து நிருபர்கள் கேட்டபோது, அமலாக்கத்துறை என்பது ஒரு தனி அதிகாரம் கொண்ட விசாரணை அமைப்பு. அதை யாரும் ஏவிவிடவில்லை. அமலாக்கத்துறையினர் தங்களுக்கு வந்த புகார்கள், ஆதாரங்களின் அடிப்படையில் அவர்களின் கடமையை செய்கின்றனர் என்றார்.