என் மலர்
நீங்கள் தேடியது "கமல்"
- மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன்-2 படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
- இதில் சிறப்பு விருந்தினர்களாக கமல், சிம்பு, அமைச்சர் துரை முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், சிம்பு, விக்ரம்பிரபு, ரகுமான், துருவ் விக்ரம், நடிகைகள் ஐஸ்வர்யாராய், திரிஷா, குஷ்பு, சுகாசினி, ஜெயசித்ரா, சோபிதா துலிபாலா, ஐஸ்வர்ய லட்சுமி, இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர்கள் லைகா புரொடக்சன்ஸ் சுபாஷ்கரன், இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான், அம்ரேஷ், தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி, அமைச்சர் துரைமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பொன்னியின் செல்வன் பட விழா
இவ்விழாவில் படத்தின் டிரைலரை கமல்ஹாசன் வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து அவர் பேசியதாவது, நல்ல படங்களை கொடுப்பது எங்களின் கடமை ஆகிவிட்டது. இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு நழுவி போய்விட்டது. கல்கியை பார்த்து எழுத்தாளர்கள் பொறாமைப்பட்டது போல, மணிரத்னத்தை பார்த்து எழுத்தாளர்களும், இயக்குனர்களும் பொறாமைப்பட்டு வருகிறார்கள். அதில் நானும் ஒருவன்.

கலைஞர்கள் அனைவரும் ஒன்றாக இருந்து செயல்பட வேண்டும். பொறாமை தேவையில்லை. பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க தைரியம் வேண்டும். அது மணிரத்னத்துக்கு இருந்தது. பணத்தை செலவு செய்யும் தைரியம் தயாரிப்பாளர் சுபாஷ்கரனுக்கு இருந்தது. அதனால்தான் இந்த படம் பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது. நடிகர்-நடிகைகள் அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சோழர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் திரையுலகுக்கும் இது பொற்காலம். அதனை போற்றி பாதுகாக்க வேண்டும். பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படம் இரட்டிப்பு வெற்றிபெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
- கமல் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் -2 படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் பணிகள் முடிந்த பிறகு கமல், மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
கமல்ஹாசன் விக்ரம் படத்துக்கு பிறகு தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு பிறகு கமல், மணிரத்னம் இயக்கத்தில் 'கேஎச்234' படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் கமல் ஜோடியாக நடிக்க திரிஷா பெயர் அடிபட்டது. ஏற்கனவே மன்மதன் அம்பு படத்தில் கமலுடன் திரிஷா நடித்து இருந்தார். எனவே திரிஷாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா, ஆர்யா, ஜெயம் ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தில் கமல்ஹாசனுடன் நயன்தாரா நடிப்பது உறுதியானல் இதன் மூலம் நயன்தாரா முதல் முறையாக கமலுடன் இணைவார்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது.
- இப்படத்தை பார்த்த பிறகு நடிகர் கமல் செய்தியாளர்களை சந்தித்தார்.
கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் 500 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

பொன்னியின் செல்வன்
இதைத் தொடர்ந்து 'பொன்னியின் செல்வன்' 2-ம் பாகம் கடந்த ஏப்ரல் 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் வெளியாகி 4 நாட்களில் ரூ.200 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மணிரத்னம் - கமல்
அதே சமயம் இந்த படத்தில் கல்கி எழுதிய கதையில் மணிரத்னம் சில மாற்றங்களைச் செய்திருப்பது குறித்து நாவல் வாசகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். சினிமாவிற்கு தேவையான திரைக்கதையை உருவாக்கவே அந்த மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக படக்குழு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் 'பொன்னியின் செல்வன்-2' திரைப்படத்தை பார்த்த பிறகு செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர், "கருத்து வேறுபாடுகள் அனைத்து படைப்புகளிலும் இருக்கும். எல்லா படங்களுக்கும் மாற்று கருத்துக்கள் வரும். அது இந்த படத்தில் இருந்தாலும் கூட, மக்கள் இதனை பெருமளவில் ஆதரிக்கிறார்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் சினிமாவின் பெருமையையும், தமிழரின் பெருமையையும் போற்றும் ஒரு படத்தை எடுப்பதற்கே ஒரு தனி துணிச்சல் வேண்டும். அதை எடுத்து முடித்திருக்கும் வீரனாக இருக்கும் மணிரத்னத்தையும், அவருக்கு உறுதுணையாக இருந்த நட்சத்திர பட்டாளத்தயும் பாராட்ட வேண்டும்" என்று தெரிவித்தார்.
- மடோன் அஷ்வின் இயக்கி வரும் மாவீரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி படத்தில் நடிக்கவுள்ளார்.
- இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், தற்போது மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார்.

ராஜ்குமார் பெரியசாமி - கமல் - சிவகார்த்திகேயன்
இந்த நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜிவி பிரகாஷ் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் மூலம் சிவார்த்திகேயன் படத்திற்கு முதல் முறையாக ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Welcome onboard @gvprakash for mission #SK21#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SK21JoiningForces #RKFIProductionNo_51
— Raaj Kamal Films International (@RKFI) May 3, 2023
@ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Rajkumar_KP @gvprakash @Sai_Pallavi92 @RKFI @ladasingh pic.twitter.com/FcXKff98jS
- இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் மனோபாலா.
- மனோபாலா இன்று உடல்நலக் குறைவால் காலமானார்.
சினிமா இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக தன்மை கொண்டவர் நடிகர் மனோபாலா (69). தமிழில் கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேலாக குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். இவர் தனது யூடியூப் சேனல் மூலம் பிரபலங்களை பேட்டியெடுத்து வந்தார்.

மனோபாலா
மனோபாலா 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் 3 தொலைக்காட்சித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவர் கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சிகிச்சைக்கு மத்தியில் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு திரையுலகினரை மட்டுமல்லாது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மனோபாலா
இந்நிலையில் மனோபாலாவின் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதிமையத்தின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. சினிமாவின் ஆர்வலர் என்பதே அவரது முதன்மையான அடையாளமாக இருந்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கமல் பதிவிட்டுள்ளார்.
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. சினிமாவின் ஆர்வலர் என்பதே அவரது முதன்மையான அடையாளமாக இருந்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத்…
— Kamal Haasan (@ikamalhaasan) May 3, 2023
- ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் 'எஸ்கே21' படத்தில் நடிக்கிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. தற்காலிகமாக 'எஸ்கே21' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

எஸ்கே21
இந்நிலையில் 'எஸ்கே21' படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு 55 நாட்கள் காஷ்மீரில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இப்படம் உணர்வுகளையும் தேசபற்றையும் மையப்படுத்தி உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 'எஸ்கே21' திரைப்படம் சிவாகார்த்திகேயனின் புதிய பரிமாணமாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
- மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'.
- இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த மாமன்னன் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

மாமன்னன்
நாளுக்கு நாள் 'மாமன்னன்' படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'மாமன்னன்' படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாகவும், இதில் ரஜினி மற்றும் கமல் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
- இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு 'எஸ்.டி.ஆர். 48' படத்தில் நடிக்கிறார்.
- இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிம்பு, பத்து தல படத்தின் வெற்றிக்கு பிறகு 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்.டி.ஆர். 48' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

சிம்பு - கமல்
இந்நிலையில் கமலுடன் சிம்பு மற்றும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
? #STR48
— Raaj Kamal Films International (@RKFI) May 22, 2023
#Ulaganayagan #KamalHaasan #Atman #SilambarasanTR #RKFI56_STR48 #BLOODandBATTLE @ikamalhaasan @SilambarasanTR_ @desingh_dp#Mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/RW0CUw6lFy
- நெல்சன் திலிப்குமார் தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார்.
- இப்படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலிப்குமார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தை இயக்கியிருந்தார்.
அதன்பின்னர் விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது ரஜினி இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தனுஷ் - கமல் - நெல்சன்
இந்நிலையில் நெல்சன் திலிப்குமார் இயக்கவுள்ள அடுத்த படத்தின் தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படத்தை நெல்சன் இயக்கவுள்ளதாகவும், இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. நெல்சன்-தனுஷ்-கமல் கூட்டணி இணையவுள்ளதாக வெளியான தகவலால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
- கமல் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான படம் வேட்டையாடு விளையாடு.
- இதில் டிஜிபி ராகவன் என்ற கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார்.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2006ம் வெளியான படம் வேட்டையாடு விளையாடு. இதில் டிஜிபி ராகவன் என்ற கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். இதில் ஜோதிகா, கமலினி முக்கர்ஜி, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரவி வர்மன் ஒளிப்பதிவில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இப்படம் அன்றைய சினிமா சூழலில் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது.

வேட்டையாடு விளையாடு
இந்நிலையில் வேட்டையாடு விளையாடு படம் ஜூன் மாதம் திரையரங்குகளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.
- அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச இந்தியா திரைப்பட விழாவில் நடிகர் கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
- கமலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்த ஆண்டுக்கான சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது (IIFA 2023) வழங்கும் விழா அபுதாபியில் நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் பல்வேறு திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்த பிரமாண்ட விழாவில், தமிழ் சினிமாவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தனது அசாத்திய திறமையால் மக்களை மகிழ்வித்து வரும் நடிகர் கமல்ஹாசனின் சாதனையை பாராட்டும் விதமாக சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி, நடிகர் கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
நடிகர் கமலுக்கு இந்த விருதை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வழங்கினார். கமல் விருதை பெற்றவுடன் அரங்கத்தில் இருந்த நடிகர் சல்மான் கான் உட்பட அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி ஆரவாரப்படுத்தினர்.
Iconic, Visionary, Unstoppable!#KamalHaasan's indomitable talent shines bright as he wins the IIFA trophy for "Outstanding Achievement in Indian Cinema.''#IIFA2023 #IIFAONYAS #YasIsland #InAbuDhabi #NEXA #CreateInspire #SobhaRealty #EaseMyTrip@yasisland @VisitAbuDhabi pic.twitter.com/BvGwBJPhFr
— IIFA (@IIFA) May 27, 2023
- அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச இந்தியா திரைப்பட விழாவில் நடிகர் கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
- இவ்விழாவில் தனது 234வது படம் குறித்து கமல் பேசியுள்ளார்.
இந்த ஆண்டுக்கான சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது (IIFA 2023) வழங்கும் விழா அபுதாபியில் நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் பல்வேறு திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.

இந்த பிரமாண்ட விழாவில், தமிழ் சினிமாவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தனது அசாத்திய திறமையால் மக்களை மகிழ்வித்து வரும் நடிகர் கமல்ஹாசனின் சாதனையை பாராட்டும் விதமாக சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி, நடிகர் கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது. நடிகர் கமலுக்கு இந்த விருதை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வழங்கினார்.

இந்நிகழ்வில் நடிகர் கமல், மணிரத்னம் இயக்கும் தனது 234வது படம் குறித்து பேசியுள்ளார். தனது 234வது படத்தின் மீது ரசிகர்கள் கொண்டுள்ள எதிர்பார்ப்பு சற்று பதற்றமடைய வைப்பதாகவும், படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். மேலும், எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தாலும், எங்களது கூட்டணியின் முதல் படமான நாயகன் படத்தில் பணியாற்றியதை போன்று கூலாக உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.