என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமன்னா"

    • தமன்னா தற்போது ஒடேலா 2 என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • திரைப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தமன்னா இந்திப் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

    தமன்னா தற்போது ஒடேலா 2 என்ற படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    திரைப்படத்தின் 4 நாள் வசூல் விவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வெளியான 4 நாட்களில் உலகளவில் 8.88 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் இன்னும் அதிக வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • மும்பையில் உள்ள பாபுல்நாத் சிவன் கோயிலில் நடிகை தமன்னா சாமி தரிசனம் செய்தார்.
    • இப்படம் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தமன்னா இந்திப் படங்களிலும் தொடர்ந்து நடிக்கிறார்.

    தமன்னா தற்போது ஒடேலா 2 என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், ஒடேலா 2 படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது . இப்படம் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    டிரெய்லரில் இடம் பெற்றுள்ள ''நாம் நிற்பதற்கு தேவை பூமிமாதா, நாம் வாழ்வதற்கு தேவை கோமாதா; இதில் நீங்கள் வாழ கோமாதாவை கொல்ல வேண்டும் என்றில்லை, அதன் சிறுநீரை விற்றுகூட வாழலாம்" என்ற வசனம் பேசுபொருளாகியுள்ளது.

    ஒடேலா 2 படத்தின் டிரெய்லர் வெளியீட்டை முன்னிட்டு மும்பையில் உள்ள பாபுல்நாத் சிவன் கோயிலில் நடிகை தமன்னா சாமி தரிசனம் செய்தார்.

    • ஹோலி பண்டிகையில் தனித்தனியாக கலந்து கொண்டார்கள்.
    • காதல் தோல்வி வேதனையில் இருந்து நீங்கள் மீளவேண்டும் என்று அவரது ரசிகர்கள் பதில் பதிவு வெளியிட்டு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

    தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தமன்னா இந்திப் படங்களிலும் தொடர்ந்து நடிக்கிறார்.

    இவருக்கும், இந்தி நடிகர் விஜய் வர்மாவுக்கும் காதல் மலர்ந்த நிலையில், சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். ஹோலி பண்டிகையில் தனித்தனியாக கலந்து கொண்டார்கள்.

    இருவருமே நண்பர்களுக்கு காதல் முறிவு விருந்து கொடுத்ததாகவும் பேசப்பட்டது. இந்த நிலையில், தமன்னா தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பாக பேசுபொருளாக மாறி உள்ளது.

    அந்த பதிவில், ''வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம். நாம்தான் அற்புதங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும்'' என்று குறிப்பிட்டு உள்ளார்.

    காதல் தோல்வி வேதனையில் இருந்து மீள்வதற்காக இந்த பதிவை அவர் வெளியிட்டு இருப்பதாக பேசுகிறார்கள். தைரியமாக இருங்கள். காதல் தோல்வி வேதனையில் இருந்து நீங்கள் மீளவேண்டும் என்று அவரது ரசிகர்கள் பதில் பதிவு வெளியிட்டு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கமல்ஹாசனுடன் ஆளவந்தான் என்ற படத்தில் நடித்தவர் ரவீனா டாண்டன்.
    • ராஷா ததானியின் 20வது பிறந்த நாள் விழா நேற்று மாலை மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது.

    கமல்ஹாசனுடன் ஆளவந்தான் என்ற படத்தில் நடித்தவர் ரவீனா டாண்டன். தொடர்ந்து இந்தி மொழியில் பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தார். சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த போதே ரவீனா டாண்டன் திருமணமாகி தற்பொழுது மும்பையில் வசித்து வருகிறார்.

    அவருக்கு ராஷா ததானி என்ற மகள் இருக்கிறார். இவரும் திரை உலகில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து வருகிறார். ராஷா ததானியும் தமன்னாவும் மிக நெருங்கிய தோழிகள். அவரது வீட்டில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சியிலும் தமன்னா தவறாமல் பங்கேற்று வருகிறார்.

    சில தினங்களுக்கு முன்பு ராஷா ததானி வீட்டில் நடந்த ஹோலி பண்டிகையில் தமன்னா பங்கேற்று மகிழ்ச்சியாக ஹோலியை கொண்டாடினார்.

    நிகழ்ச்சியில் அவரது முன்னாள் காதலரான விஜய் வர்மாவும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்  ராஷா ததானியின் 20வது பிறந்த நாள் விழா நேற்று மாலை மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது.

    விழாவில் பங்கேற்பதற்காக தமன்னா, ரவீனா டாண்டன், இப்ராகிம் அலிகான், மனிஷ் மல்கோத்ரா, ஆமன் தேவ்கன் உள்பட பலர் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்க வந்த தமன்னா ஆடை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்திழுத்தது. ரூ.46 ஆயிரம் மதிப்பிலான கருப்பு நிற பாடிகான் உடையில் அவரது அழகான நடை, அங்கு குவிந்து இருந்த மொத்த கேமரா கண்களிலும் பளிச்சென மின்ன தொடங்கியது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளவர் தமன்னா.
    • தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

    தமிழில் விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ள தமன்னா தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திருப்புமுனை படமாக அமைந்தது. இந்த நிலையில் தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஏற்கனவே இதுபோல் திருமண கிசுகிசு வந்தபோது தமன்னா உடனடியாக மறுத்தார். திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்று கூறினார். ஆனால் தற்போது திருமண ஏற்பாடுகள் நடப்பதாக வலைத்தளத்தில் மீண்டும் பரவி வரும் தகவலுக்கு தமன்னா மறுப்பு எதுவும் சொல்லவில்லை.

    தமன்னா

    தமன்னா

     

    திருமண முடிவை பெற்றோரிடம் விட்டு விட்டேன். அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை மணப்பேன் என்று முன்பு கூறியிருந்தார். தற்போது பெற்றோர்தான் மாப்பிள்ளையை பார்த்து முடிவு செய்து இருப்பதாகவும், மணமகன் மும்பையை சேர்ந்த பெரிய தொழில் அதிபர் என்றும், அவரை மணக்க தமன்னாவும் சம்மதித்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. 

    • முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து பிரபலமடைந்தவர் தமன்னா.
    • இவர் தொழிலதிபரை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

    தமிழில் விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ள தமன்னா தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திருப்புமுனை படமாக அமைந்தது. இந்த நிலையில் தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.


    தமன்னா

    இதற்கு முன்பு திருமண முடிவை பெற்றோரிடம் விட்டு விட்டேன். அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை மணப்பேன் என்று தமன்னா கூறியிருந்தார். தற்போது பெற்றோர் மாப்பிள்ளையை பார்த்து முடிவு செய்து இருப்பதாகவும், மணமகன் மும்பையை சேர்ந்த பெரிய தொழில் அதிபர் என்றும், அவரை மணக்க தமன்னாவும் சம்மதித்துவிட்டார் என்றும் கூறப்பட்டது. இதற்கு தமன்னா மறுப்பு தெரிவிக்காமல் இருந்ததால் தகவல் உண்மையாக இருக்கலாம் என்று ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர்.


    தமன்னா பதிவு

    இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக தமன்னா தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், தனது தொழில் அதிபர் கணவரை அறிமுகப்படுத்துவதாக குறிப்பிட்டு அவரே ஆண் வேடத்தில் இருப்பது போன்று தோன்றுகிறார். மேலும், #திருமண வதந்திகள் #எனது வாழ்க்கை பற்றி கதை எழுதும் ஒவ்வொருவருக்கும் என்று ஆங்கிலத்தில் ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.

    • ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தில் மோகன்லால் மற்றும் சுனில் இணைந்துள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

    நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    ஜெயிலர்

    ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் இணைந்துள்ளதாக சமீபத்தில் படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜெயிலர் திரைப்படத்தில் நடிகை தமன்னா இணைந்துள்ளார். இதனை படக்குழு புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் சுனில் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர்.

    நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    ஜாக்கி ஷெராஃப்

    ஜாக்கி ஷெராஃப்

    இந்நிலையில் இப்படத்தில் பாலிவுட் பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்கள் இணைந்து வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

    இதற்குமுன்பு ஆரண்யகாண்டம், விஜய்யின் பிகில் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் ஜாக்கி ஷெராஃப் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • நடிகை ஜமுனா சமீபத்தில் உடல்நலக் குறைவால் காலமானார்.
    • இவரின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஜமுனா. சிவாஜி, ஜெய்சங்கர் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாகவும், தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் நடிகர் கமலுக்கு தாயாகவும் நடித்துள்ளார்.


    ஜமுனா

    மிஸ்ஸியம்மா, தெனாலிராமன், தங்கமலை ரகசியம் போன்ற பல தமிழ் படங்களில் நடித்து மிகவும் பிரபலமடைந்த ஜமுனா, தங்கமலை ரகசியம் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவருக்கு 1999-ல் தமிழக அரசின் எம்ஜிஆர் விருது வழங்கப்பட்டது. நடிகை ஜமுனா 1980ம் ஆண்டு தேர்தலில் ஆந்திராவின் ராஜமுந்திரி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வானவர். பின் 1990-களில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.


    தமன்னா

    சமீபத்தில் இவர் உடல்நலக் குறைவால் காலமானார். இந்நிலையில், ஜமுனாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க முயற்சிகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜமுனா உயிரோடு இருந்தபோதே திரைக்கதை முழுவதும் எழுதி முடிக்கப்பட்டு விட்டதாகவும் ஜமுனா கதாபாத்திரத்தில் தமன்னாவை நடிக்க வைக்க படக்குழுவினர் பேசி வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • நடிகை தமன்னா தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
    • சமீபகாலமாக இவர் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் பரவி வருகின்றன.

    தமிழில் விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ள தமன்னா தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திருப்புமுனை படமாக அமைந்தது. இவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    தமன்னா

    சமீபகாலமாக தமன்னா குறித்து காதல் கிசுகிசுக்கள் அதிகம் பரவி வருகின்றன. இதுதொடர்பாக நடிகை தமன்னா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, "எனக்கு எதிராக நிறைய வதந்திகள் பரவுகின்றன. இதை எல்லாம் யார் கிளப்பி விடுகிறார்கள் என்று தெரியவில்லை. அதை படிக்கும்போது சிரிப்புதான் வருகிறது. ஒவ்வொருவருக்கும் சொந்த வாழ்க்கை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார்.


    தமன்னா

    இதற்கு முன்பு தமன்னாவிற்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளையை பார்த்து முடிவு செய்து இருப்பதாகவும், மணமகன் மும்பையை சேர்ந்த பெரிய தொழில் அதிபர் என்றும், அவரை மணக்க தமன்னாவும் சம்மதித்துவிட்டார் என்றும் தகவல் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா.
    • இவர் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

    தமிழில் விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ள தமன்னா தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திருப்புமுனை படமாக அமைந்தது. இவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பாலிவுட்டில் இவர் நடித்துள்ள 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' விரைவில் வெளியாகவுள்ளது.


    தமன்னா

    நடிகை தமன்னா பாலிவுட் பிரபலம் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக சமீப காலமாக சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவி வந்தது. இந்நிலையில், நடிகை தமன்னா தற்போது இதை உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "லஸ்ட் ஸ்டோரிஸ் 2-வில் தான் நாங்கள் பழகினோம். விஜய் வர்மாவிடம் என்னால் இயல்பாக பழக முடிந்தது. இவர் தான் நான் எதிர்பார்த்த நபர்.


    தமன்னா -விஜய் வர்மா

    நான் எனக்கான ஒரு உலகத்தை உருவாக்கி வைத்துள்ளேன். பொதுவாக ஒரு பெண் அவரது வாழ்க்கை துணைக்காக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். எனது உலகத்தை புரிந்து கொண்ட ஒருவர் எனக்கு கிடைத்துள்ளார். அவரை நான் காதலிக்கிறேன். விஜய் வர்மா எனது மகிழ்ச்சியான இடம்" என்று பேசினார்.

    • வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், அயன், பையா, சுறா, சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் தமன்னா.
    • தமன்னாவின் கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

    கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தமன்னா. அதன்பின்னர் வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், அயன், பையா, சுறா, சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.


    தமன்னா

    தமன்னா

    மேலும் பாலிவுட்டில் இவர் நடித்துள்ள 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' விரைவில் வெளியாகவுள்ளது. தமன்னா தற்போது இந்தியில் நடித்துள்ள "ஜீ கர்தா" என்ற சீரிஸில் படுகவர்ச்சியாக நடித்திருந்தார். இந்நிலையில் தமன்னா கருப்பு நிற உடையில் கவர்ச்சி காட்டும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

    ×