search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இம்ரான்கான்"

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைமையில் தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி நேற்று பேரணி நடைபெற்றது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பாராளுமன்றத்தில் கடந்த மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

    தனது ஆட்சி கவிழ்ந்ததில் வெளிநாட்டு சதி இருக்கிறது எனக்கூறிய இம்ரான் கான், ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பொறுப்பேற்றதை ஏற்க மறுத்து வருகிறார். பாகிஸ்தான் தெஹ்ரிக்-ஐ-இன்சாப் கட்சியின் ஆதரவாளர்களை திரட்டி இம்ரான்கான் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இதற்கிடையே, பாகிஸ்தான் தெஹ்ரிக் - ஐ - இன்சாஃப் கட்சி ஆதரவாளர்களுடன் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி நேற்று பேரணியாகச் சென்றார். பேரணியை தடுத்து நிறுத்த இஸ்லாமாபாத்தில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். 

    தடுப்புகளை மீறி இம்ரான்கான் ஆதரவாளர்கள் தலைநகர் நோக்கி பேரணியாகச் செல்ல முற்பட்டதால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இம்ரான்கான் ஆதரவாளர்கள் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் பாகிஸ்தானில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவியது.

    இந்நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சட்டம் ஒழுங்கைக் காக்கும் வகையில் ராணுவ படைகளை நிலைநிறுத்துவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

    இம்ரான்கான் கட்சியினர் சென்ற பேரணி வன்முறையாக மாறியதை அடுத்து, பாகிஸ்தான் அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பாகிஸ்தானில் பெட்ரோல் விலை ரூ.179.86க்கும், டீசல் ரூ.174.15க்கும், மண்ணெண்ணெய் விலை ரூ.155.56க்கும் விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இம்ரான்கான் பிரதமராக இருந்தபோது பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவதாக கடந்த 2019-ம் ஆண்டு சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்.) அறிவித்தது. ஆனால், இந்த ஆண்டு தொடக்கத்தில், இம்ரான்கான் பெட்ரோல், டீசல் விலையை குறைத்தார். அதனால் அவற்றுக்கான மானியமாக அரசுக்கு மாதத்துக்கு 60 கோடி டாலர் செலவானது. இதனால், சர்வதேச நிதியம், கடன் திட்டத்தில் மீதி தொகையான 300 கோடி டாலரை நிறுத்தி வைத்து விட்டது.

    தற்போதைய சூழலில் சர்வதேச நிதியத்தின் நிபந்தனையால் பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.30 அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக நாட்டு மக்களுக்கு ஷபாஸ் ஷெரீப் உரையாற்றினார். அப்போது, பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் விலை உயர்த்தப்பட்டது குறித்து பேசியதாவது:

    நாட்டிற்கு மிகப் பெரிய கடனை வைத்ததுடன் சர்வதேச நாணய நிதியத்துடன் பாதகமான உடன்படிக்கையையும் இம்ரான் கான் அரசு மேற்கொண்டது. உண்மைகளை அப்பட்டமாகப் புறந்தள்ளிவிட்டு இம்ரான் கான் அரசு செயல்பட்டது.

    நாட்டின் பொருளாதார நலன் கருதி பெட்ரோலியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டன. கனத்த இதயத்துடன் வேறு வழியின்றியே இந்த உயர்வு அமல்படுத்தப்பட்டது.

    எரிபொருட்கள் மீதான விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அதை சரிகட்ட வரும் பட்ஜெட் அறிக்கையில் அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.2,000 வழங்குவதற்கு ஏற்ப ரூ.7,211 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார்.
    ×