search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி"

    • டெல்லியில் பல வாரங்களாக நிலவும் கடுமையான வெப்ப அலைக்கு மத்தியில் இன்று சில பகுதிகளில் மழை பெய்தது.
    • அரியானா மாநிலம் குருகிராமில் மழை பெய்துள்ளது.

    புதுடெல்லி:

    வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சமீப காலமாக கடும் வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் வெப்ப அலையின் தாக்கம் மிகத் தீவிரமாக உள்ளது.

    பல இடங்களில் நேற்று இயல்பு நிலையை விட 5 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பநிலை பதிவாகி இருந்து. இரவு நேரங்களிலும் வெப்பக் காற்று வீசி வருவதால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

    கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் ஜூன் 18-ம் தேதி வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு இதுவரை 114 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில் டெல்லியில் பல வாரங்களாக நிலவும் கடுமையான வெப்ப அலைக்கு மத்தியில் இன்று சில பகுதிகளில் மழை பெய்தது. ஆர்.கே.புரம் பகுதியில் மழை பெய்தது. அரியானா மாநிலம் குருகிராமிலும் மழை பெய்துள்ளது.

    டெல்லியில் இன்று காலை முதலே ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குறைந்தபட்ச வெப்பநிலை 28.4 டிகிரி செல்சியஸாக இருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிற்பகலில் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


    பலத்த காற்றுடன் கனமழை தொடரும் என்பதால் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு டெல்லி மக்களை, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை பல்வேறு பகுதிகளில்  இடியுடன் கூடிய கனமழை பெய்தது.  இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பலத்த காற்று மற்றும் கனமழையால் டெல்லியின் சில பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து முடங்கியது.

    டெல்லி என்சிஆர் அதை ஒட்டிய பகுதிகளில் மணிக்கு 60-90 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கவும், பயணத்தைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

    விமான புறப்பாடு மற்றும் வருகை குறித்த தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களை தொடர்பு கொள்ளுமாறு பயணிகளை விமான நிலைய அதிகாரிகள்  கேட்டுக் கொண்டுள்ளனர்.

    டெல்லி முதல் - மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் 150 இ- பேருந்துகளை இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் காற்று மாசுபடுதலை குறைக்கும் வகையில் 150 இ- பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.  டெல்லியில் அடுத்த பத்து ஆண்டுகளில் மின்சார பேருந்தை பெறுவதற்காக டெல்லி அரசு ரூ. 1,862 கோடி ஒதுக்கியுள்ள நிலையில் மத்திய அரசு ரூ. 150 கோடி வழங்கியுள்ளது.

    இந்நிலையில், டெல்லி  முதல் -மந்திரி  அரவிந்த் கெஜ்ரிவால் இன்று இந்திர பிரஸ்தா டிப்போவில் இருந்து 150 இ - பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.  இதையடுத்து போக்குவரத்து துறை மந்திரி கைலாஷ் கெலாட் உடன் ஒரு பேருந்தில் ஏறிய முதல் மந்திரி ராஜ்காட் கிளஸ்டர் பேருந்து நிலையம் வரை பயணித்தார்.

    மேலும், ஒரு வருடத்தில் இரண்டாயிரம் இ- பேருந்துகளை பெறுவதே இலக்கு என்று அரவிந்த் ஜெக்ரிவால் தெரிவித்தார்.

    இது குறித்து டெல்லி முதல்- மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “ இ- பேருந்துகள் டெல்லியில் மாசுப்பாட்டை குறைக்கும். இது உங்கள் பேருந்து. அதனால் மக்கள் பேருந்தை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.

    ஆண்டோலன் நாட்களில் நான் குளிரூட்டப்பட்ட பேருந்துகளில் பயணம் செய்தேன். ஆனால், ஏர்கண்டிசன் அவ்வளவு வலுவாக இல்லை. இன்று இ- பேருந்தில் பயணம் செய்தபோது மக்கள் அதிகமாக இருந்தும் ஏர்கண்டிசன் அதிகமாகவே இருந்தது. இன்றிலிருந்து மே 26-ந் தேதி வரை மக்கள் இ- பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று கூறினார்.

    மேலும், அவரது டுவிட்டர் பதிவில், “ மாசுபாடுக்கு எதிரான போராட்டத்தில் டெல்லி இன்று ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது. இன்று 150 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. நான் ஒரு பேருந்தில் பயணித்தேன். இந்த பேருந்தில் நவீன வசதிகள் உள்ளன. நீங்கள் அனைவரும் கண்டிப்பாக பிரம்மாண்டமான இ - பேருந்தில் பயணம் செய்ய வேண்டு” என்று பதிவிட்டிருந்தார்.

    இதையும் படியுங்கள்.. பகவந்த் மானின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை கண்ணீரை வரவழைத்தது- அரவிந்த் கெஜ்ரிவால் நெகிழ்ச்சி
    கபுதார் மார்க்கெட் பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழையில் சிக்கிய 65 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது  பலத்த காற்று வீசியதால், பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    இடியுடன் கூடிய மழையால் டெல்லியின் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. கார் மீது மரம் விழுந்ததில், அதில் சிக்கிய குழந்தை உட்பட 3 பேர் கொண்ட குடும்பம் மீட்கப்பட்டதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. கபுதார் மார்க்கெட் பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழையால் 65 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    வடக்கு டெல்லியின் பல பகுதிகளில் 40 மின் கம்பங்கள் சேதம் அடைந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.  மேலும் பலத்த காற்று காரணமாக டெல்லி ஜூம்மா மசூதியில் மாட பகுதி உடைந்து விழுந்தது. இதில் மூன்று  பேர் காயம் அடைந்ததாக டெல்லி இமாம் சையது அகமது புகாரி தெரிவித்துள்ளார்.  

    கனமழையால் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.


    ×