search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை"

    புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களில் இருக்கும் அணிகள் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெறும்.
    துபாய்:

    வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த வாரம் டிராவில் முடிந்தது.

    இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்று தொடரை 1-0 என கைப்பற்றியது.

    இந்நிலையில், வங்காளதேசம், இலங்கை டெஸ்ட் தொடருக்கு பிறகான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியல் இன்று  வெளியானது. 

    இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணியை பின்னுக்குத் தள்ளி இலங்கை அணி 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. 55 சதவீத வெற்றியுடன் இந்தப் பட்டியலில் இலங்கை 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

    இந்தப் பட்டியலில் 75 சதவீதத்துடன் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்திலும், 71.43 சதவீதத்துடன் தென் ஆப்பிரிக்க அணி 2-வது இடத்திலும் உள்ளது. 58.33 சதவீத வெற்றியுடன் இந்திய அணி 3-வது இடத்தில் உள்ளது.
    இந்தியா-இலங்கை இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதை தாம் எதிர்நோக்கி உள்ளதாகவும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே குறிப்பிட்டுள்ளார்.
    கொழும்பு:

    அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த மந்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக மேலாளர்  கிரிசலினா ஜோர்ஜீவாவுடனான சந்திப்பின்போது, நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ஐஎம்எப்,  நிதி உதவியை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

    இந்நிலையில்  நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே  தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். 

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதவில், இந்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் தொலைபேசி மூலம் உரையாடியதாக குறிப்பிட்டுள்ளார்.

    தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இந்த கடினமான காலகட்டத்தில் இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் ஆதரவிற்கு  பாராட்டு தெரிவித்ததாகவும்,  மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்புடன் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மற்றொரு டுவீட்டில், இலங்கைக்கு உதவ வெளிநாட்டு உதவி கூட்டமைப்பை அமைப்பதில் குவாட் உறுப்பு நாடுகள் முன்மொழிந்துள்ளதற்காக இந்தியா மற்றும் ஜப்பானுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.


    பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வரி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. வரி உயர்வுக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதையடுத்து அமலுக்கு வந்துள்ளது.

    கொழும்பு:

    இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல், டீசல், உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    இதனால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். இதற்கிடையே புதிய பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கே, பொருளாதார நெருக்கடி பிரச்சினைகளுக்கு தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வரி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. வரி உயர்வுக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதையடுத்து அமலுக்கு வந்துள்ளது.

    அதன்படி மதிப்பு கூட்டு வரி (வாட்) 8 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், தொலைத் தொடர்பு வரி 11.25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

    பெரு நிறுவன வரி 24 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தனிப்பட்ட வரி செலுத்துவோருக்கு விலக்குகள் குறைக்கப்பட்டு இருக்கிறது. தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு ஆண்டுக்கு 30 லட்சத்தில் இருந்து 18 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2019-ம் ஆண்டின் பிற்பகுதியில் இலங்கையில் குறைந்த வரி விதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டு வரி சலுகைகள் அறிவித்ததையடுத்து ஆண்டுக்கு 600 கோடி ரூபாய் வரி வருவாயில் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

    2020-21-ம் ஆண்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதால், வரி சீர்திருத்தங்கள் அரசாங்க வருவாயில் குறிப்பிடத்தக்க இழப்புக்கு வழி வகுத்த கொள்கைகளாக கருதப்படுகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்திற்கான வருவாய் 2021-ம் ஆண்டில் 8.7 சதவீதமாக குறைந்து மோசமடைந்துள்ளது.

    இந்த நிதி ஏற்றத்தாழ்வு பொருளாதாரத்தின் மீது பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவே வருவாயை மேம்படுத்துதல், நாட்டின் நடுத்தர மற்றும் நீண்ட கால பொருளாதார வளர்ச்சி நோக்கங்களை நிறைவேற்றுவதில் வரி உயர்வை செயல்படுத்துவது அவசியம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இலங்கையில் நெல் சாகுபடிக்கு 65 ஆயிரம் டன் யூரியா வழங்க இந்தியா ஒப்புக் கொண்டிருந்தது.
    கொழும்பு:

    கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் உணவு பொருள் உற்பத்தி மற்றும் விநியோகத்தை சீரமைக்க புதிதாக பொறுப்பேற்று ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

    இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று இலங்கை விவசாயத்துறை அமைச்சர்  மகிந்த அமரவீரா, இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லேவை சந்தித்து பேசினார். 

    அப்போது உணவுப் பாதுகாப்பு மற்றம்  சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா-இலங்கை இடையிலான ஒத்துழைப்பின் அவசியம் குறித்து இருவரும் விவாதித்ததாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. 

    இலங்கைக்கு கடன் உதவித் திட்டத்தின் கீழ் இந்தியா உரம் கொடுத்து உதவுமாறு அப்போது மகிந்த அமரவீரா கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. 

    இலங்கையில் நெல் சாகுபடிக்கு 65 ஆயிரம் டன் யூரியா வழங்க இந்தியா கடந்த மாதம் ஒப்புக்கொண்டிருந்த நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. 

    ×