என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tai tzu ying
நீங்கள் தேடியது "Tai Tzu Ying"
மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் லின் டான் மற்றும் தாய் சூ யிங் ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர். #MalaysiaOpen
மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சீனாவைச் சேர்ந்த லின் டான் - சென் லாங் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.
முதல் செட்டை லின் டான் 9-21 என எளிதில் இழந்தார். அதன்பின் சிறப்பாக விளையாடி ஆட்டத்தை தன்பக்கம் இழுத்தார். 2-வது செட்டை 21-7 எனவும், 3-வது செட்டை 21-11 எனவும் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார். கடந்த 2017-ம் ஆண்டுக்குப்பின் லின் டான் தற்போதுதான் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் தைவானின் தாய் சூ யிங் ஜப்பானின் அகானே யமாகுச்சியை எதிர்கொண்டார். இதில் சூ யிங் 21-16, 21-19 என வெற்றி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரில் நம்பர் ஒன் வீராங்கனையை 2-1 என பிவி சிந்து தோற்கடித்து 2-வது வெற்றியை ருசித்துள்ளார். #PVSindhu
குவாங்சோவ்:
‘டாப்-8’ வீரர்- வீராங்கனைகள் மட்டும் கலந்து கொள்ளும் உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடர் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான உலக பேட்மிண்டன் பைனல்ஸ் சீனாவில் உள்ள குவாங்சோவ் நகரில் நேற்று தொடங்கியது. வரும் 16-ந்தேதி வரை இத்தொடர் நடக்கிறது.
இந்தியாவைச் சேர்ந்த பிவி சிந்து ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ளார். இதே பிரிவில் நடப்பு சாம்பியன் அகானே யமாகுச்சி (ஜப்பான்), நம்பர் ஒன் வீராங்கனை தாய் ஜூ யிங் (சீனதைபே), தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் ஷாங் பீவென் (அமெரிக்கா) ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
நேற்றைய முதல் ஆட்டத்தில் பிவி சிந்து நடப்பு சாம்பியனான அகானே யமாகுச்சியை எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 24-22, 21-15 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இன்று நம்பர் ஒன் வீராங்கனையான சீனதைபேயின் தாய் ஜூ யிங்கை எதிர்கொண்டார். முதல் செட்டை 14-21 என பிவி சிந்து இழந்தார். பின்னர் சுதாரித்துக் கொண்ட அவர், ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2-வது செட்டை 21-16 என கைப்பற்றிய பிவி சிந்து, 3-வது செட்டை 21-18 எனக் கைப்பற்றி வெற்றி பெற்றார்.
தாய் ஜூ யிங்கிற்கு எதிராக பிவி சிந்து 7 முறை மோதியுள்ளார். இதில் தற்போதுதான் வெற்றியை ருசித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தாய் ஜூ யிங், சாய்னாவை வீழ்த்தி மகுடம் சூடினார். #DenmarkOpen #SainaNehwal #TaiTzuYing
ஒடென்சி:
டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஒடென்சி நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 10-வது இடம் வகிக்கும் சாய்னா நேவால் (இந்தியா), ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் தாய் ஜூ யிங்குடன் (சீனதைபே) மல்லுகட்டினார். முதல் செட்டை தாய் ஜூ யிங் வசப்படுத்த, 2-வது செட்டில் சாய்னாவின் கை ஓங்கியது.
இந்த செட்டில் ஒரு கேம் 41 ஷாட்டுகள் வரை நீடித்தது. 2-வது செட்டை சாய்னா கைப்பற்றியதால், கடைசி செட்டில் விறுவிறுப்பு மேலும் எகிறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி செட்டில் தாய் ஜூ யிங் சாதுர்யமான ஷாட்டுகளால் சாய்னாவை மிரள வைத்தார். இந்த செட்டில் சாய்னாவினால் கொஞ்சம் கூட ஈடுகொடுத்து ஆட முடியவில்லை. 52 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் தாய் ஜூ யிங் 21-13, 13-21, 21-6 என்ற செட் கணக்கில் சாய்னாவை வீழ்த்தி மகுடம் சூடினார். 83 ஆண்டு கால டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் வரலாற்றில் சீனதைபே நாட்டை சேர்ந்த ஒருவர் பட்டம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.
தாய் ஜூ யிங்குக்கு எதிராக இதுவரை 18 முறை மோதியுள்ள சாய்னா அதில் சந்தித்த 13-வது தோல்வி இதுவாகும். 2014-ம் ஆண்டில் இருந்து ஜூ யிங்குக்கு எதிராக மோதிய 11 ஆட்டங்களிலும் சாய்னாவுக்கு தோல்வியே மிஞ்சியிருக்கிறது. வாகை சூடிய ஜூ யிங்குக்கு ரூ.40 லட்சமும், சாய்னாவுக்கு ரூ.20 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

35 வயதான லீ சாங் வெய் 12 முறையாக மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரை வென்ற வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். #MalyasianOpen
மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 35 வயதான மலேசியாவின் லீ சாங் வெய், 23 வயது இளம் வீரரான கென்டோ மொமோட்டாவை எதிர்கொண்டார். இதில் சொந்த ஊரில் விளையாடிய அனுபவ வீரரான லீ சாங் வெய் 21-17, 23-21 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 12 முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்ஸ் தொடர் அரையிறுதிப் போட்டியில் மொமோட்டா லீயை வீழ்த்தியிருந்தார். அதற்கு தற்போது லீ பதிலடி கொடுத்துள்ளார்.
பெண்களுக்கான இறுதிப் போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான தாய் சு யிங் சீனாவின் ஹி பிங்ஜியாவோவை 22-20, 21-11 என நேர்செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

×

X