என் மலர்
நீங்கள் தேடியது "Tamanaah"
வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் விஷால் நடிக்கவிருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக தமன்னா ஒப்பந்தமாகி இருக்கிறார். #Vishal #Tamanaah
அறிமுக இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் அயோக்யா படத்தில் நடித்து வரும் விஷால் அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஆக்ஷன், காமெடி, குடும்ப செண்டிமெண்டுடன் கூடிய கமர்சியல் படமாக உருவாக இருக்கும் இந்த படம் விஷால்-சுந்தர்.சி இணையும் 3 வது படம்.
இதில் விஷாலுக்கு ஜோடிகளாக தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி இருவரும் நடிக்கிறார்கள். விஷாலுக்கு வில்லனாக ஜெகபதி பாபு நடிக்கிறார். கத்திச்சண்ட படத்துக்கு பிறகு விஷாலுடன் தமன்னா, ஜெகபதி பாபு இருவரும் இணைகிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை படக்குழு விரைவில் வெளியிட இருக்கிறது. சுந்தர்.சி. இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படம் பிப்ரவரி 1-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Vishal #Tamanaah #SundarC