என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamannaah"

    • மும்பையில் உள்ள பாபுல்நாத் சிவன் கோயிலில் நடிகை தமன்னா சாமி தரிசனம் செய்தார்.
    • இப்படம் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தமன்னா இந்திப் படங்களிலும் தொடர்ந்து நடிக்கிறார்.

    தமன்னா தற்போது ஒடேலா 2 என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், ஒடேலா 2 படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது . இப்படம் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    டிரெய்லரில் இடம் பெற்றுள்ள ''நாம் நிற்பதற்கு தேவை பூமிமாதா, நாம் வாழ்வதற்கு தேவை கோமாதா; இதில் நீங்கள் வாழ கோமாதாவை கொல்ல வேண்டும் என்றில்லை, அதன் சிறுநீரை விற்றுகூட வாழலாம்" என்ற வசனம் பேசுபொருளாகியுள்ளது.

    ஒடேலா 2 படத்தின் டிரெய்லர் வெளியீட்டை முன்னிட்டு மும்பையில் உள்ள பாபுல்நாத் சிவன் கோயிலில் நடிகை தமன்னா சாமி தரிசனம் செய்தார்.

    • ஹோலி பண்டிகையில் தனித்தனியாக கலந்து கொண்டார்கள்.
    • காதல் தோல்வி வேதனையில் இருந்து நீங்கள் மீளவேண்டும் என்று அவரது ரசிகர்கள் பதில் பதிவு வெளியிட்டு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

    தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தமன்னா இந்திப் படங்களிலும் தொடர்ந்து நடிக்கிறார்.

    இவருக்கும், இந்தி நடிகர் விஜய் வர்மாவுக்கும் காதல் மலர்ந்த நிலையில், சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். ஹோலி பண்டிகையில் தனித்தனியாக கலந்து கொண்டார்கள்.

    இருவருமே நண்பர்களுக்கு காதல் முறிவு விருந்து கொடுத்ததாகவும் பேசப்பட்டது. இந்த நிலையில், தமன்னா தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பாக பேசுபொருளாக மாறி உள்ளது.

    அந்த பதிவில், ''வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம். நாம்தான் அற்புதங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும்'' என்று குறிப்பிட்டு உள்ளார்.

    காதல் தோல்வி வேதனையில் இருந்து மீள்வதற்காக இந்த பதிவை அவர் வெளியிட்டு இருப்பதாக பேசுகிறார்கள். தைரியமாக இருங்கள். காதல் தோல்வி வேதனையில் இருந்து நீங்கள் மீளவேண்டும் என்று அவரது ரசிகர்கள் பதில் பதிவு வெளியிட்டு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மணப்பெண் போல் மயக்கும் சில்வர் நிற லெஹங்கா உடையை தமன்னா அணிந்தது ரசிகர்களை திகைக்க வைத்துள்ளது
    • ஏஞ்சல் போல, மணப்பெண் போல தமன்னா மிக அழகாக இருக்கிறார் என வர்ணித்து வருகின்றனர்

    பிரபல நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை தமன்னா நேற்று மணப்பெண் போல நீல நிற 'லெஹங்கா' உடை, வைரம், ரூபி கற்கள் பதித்த நெக்லஸ் அணிந்திருந்தார்.

    இந்த புகைப்படம் மற்றும் வீடியோவை அவரது ஆடை வடிவமைப்பாளர் கௌரவ் குப்தா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். நடிகையான தமன்னா தற்போது பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் டேட்டிங் செய்து வருகிறார்.

    இந்நிலையில் அவரது ஆடை வடிவமைப்பாளர் தயாரித்த மணப்பெண் போல் மயக்கும் நீல நிற லெஹங்கா உடையை தமன்னா அணிந்தது ரசிகர்களை திகைக்க வைத்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் ஏஞ்சல் போல, மணப்பெண் போல தமன்னா மிக அழகாக இருக்கிறார் என வர்ணித்து வருகின்றனர்.

    மேலும் அற்புதம், மனதைக் கவரும், அழகான, வசீகரமான, சிறப்பான ஆடை எனவும் முற்றிலும் அழகாக உள்ளது எனவும் ரசிகர்கள் புகழ்ந்துள்ளனர். மேலும் காதலனுடன் திருமணம் எப்போது எனவும் இணையத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை திரைப்படம் 2014-ல் வெளியாகி வெற்றி பெற்றது
    • இதில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லக்ஷ்மி, வினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்

    சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை திரைப்படம் 2014-ல் வெளியாகி வெற்றி பெற்றது. இதில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லக்ஷ்மி, வினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

    இதன் வெற்றி காரணமாக, 'அரண்மனை-2' திரைப்படத்தை 2016-ல் த்ரிஷா, ஹன்சிகாவை வைத்து சுந்தர் சி இயக்கினார். அந்த படமும் வெற்றி பெற்றது.

    இதனையடுத்து, 2021-ல் அரண்மனை படத்தின் 3-ம் பாகத்தை இயக்கினார். அப்படத்தில், ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்சி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

    இந்நிலையில், சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில், இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு மற்றும் சுந்தர் சி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில், இப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது என படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

    அரண்மனை படத்தின் முதல் மூன்று பாகங்கள் போலவே குடும்பங்கள் கொண்டாடும் வகையிலான படமாக இப்படம் இருக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படம் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வெளியாகிறது என படக்குழு தெரிவித்துள்ளது.
    • இப்படத்தில், தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு மற்றும் சுந்தர் சி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை திரைப்படம் 2014-ல் வெளியாகி வெற்றி பெற்றது. இதில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லக்ஷ்மி, வினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

    இதன் வெற்றி காரணமாக, 'அரண்மனை-2' திரைப்படத்தை 2016-ல் த்ரிஷா, ஹன்சிகாவை வைத்து சுந்தர் சி இயக்கினார். அந்த படமும் வெற்றி பெற்றது.

    இதனையடுத்து, 2021-ல் அரண்மனை படத்தின் 3-ம் பாகத்தை இயக்கினார். அப்படத்தில், ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்சி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. எப்படி ஹாலிவுட் படங்களில் ஃப்ரேன்சீஸ் படங்கள் என கூறப்படும் மிஷன் இம்பாஸிபில், ஜேம்ஸ் பாண்ட், ஃபைனல் டெஸ்டினேஷன் படங்கள் மாதிரி தமிழுக்கு அரண்மனை படமாகும்.

    இந்நிலையில், சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில், தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு மற்றும் சுந்தர் சி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரெயிலர் வெளியிடும் விழா தற்பொழுது சென்னையில் நடைப்பெற்று வருகிறது.

    சுந்தர்.சி, தமன்னா, யோகி பாபு, ஹிப்ஹாப் ஆதி, ராஷி கன்னா ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்றனர். படத்தின் இறுதியில் தமன்னாவும் ராஷி கண்ணாவும் இணைந்து "அச்சோ அச்சோ" என்ற பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். படத்தில் டிரெயிலர் இன்று மாலை வெளியாகிறது.

    இந்நிலையில், இப்படம் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வெளியாகிறது என படக்குழு தெரிவித்துள்ளது.

    அரண்மனை படத்தின் முதல் மூன்று பாகங்கள் போலவே இந்த பாகமும் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அரண்மனை - 4 திகில் படத்தில் பேய் வேடத்தில் நடித்த போது எனக்கு எந்தவித பயமும் ஏற்படவில்லை.
    • 'டிரெய்லர்' வெளியீட்டில் அந்த காட்சியை பார்த்த போது மிகவும் பயந்து விட்டேன்

    சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை திரைப்படம் கடந்த 2014-ல் வெளியானது. இப்படத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லக்ஷ்மி, வினய் ஆகியோர் நடித்தனர்.

    இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து 'அரண்மனை-2' படத்தில் 2016-ல் திரிஷா, ஹன்சிகா நடித்தனர். அந்த படமும் வெற்றி பெற்றது. மேலும் 2021-ல் அரண்மனை - 3- படத்தில், ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்சி அகர்வால் ஆகியோர் நடித்தனர்.

    இப்படமும் வெற்றி பெற்றதை யொட்டி, சுந்தர்.சி இயக்கத்தில் மீண்டும் அரண்மனை- 4 திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தில், தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு மற்றும் சுந்தர். சி நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து உள்ளார்.



    இப்படத்தில் நடிகை தமன்னா மீண்டும் பேய் வேடத்தில் நடித்து உள்ளார்.இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.இதில் சுந்தர்.சி, தமன்னா, யோகிபாபு, ஹிப்ஹாப் ஆதி, ராஷி கன்னா ஆகியோர் பங்கேற்றனர்.

    விழாவில் தமன்னா பேசியபோது "அரண்மனை - 4  திகில் படத்தில் பேய் வேடத்தில் நடித்த போது எனக்கு எந்தவித பயமும் ஏற்படவில்லை. ஆனால் தற்போது 'டிரெய்லர்' வெளியீட்டில் அந்த காட்சியை பார்த்த போது மிகவும் பயந்து விட்டேன். இசையின் வேகம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இது ஒரு சிறப்பான திகில் படமாக அமைந்து உள்ளது." என்றார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அரண்மனை திரைப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • , 'அரண்மனை 4 ' படத்தின்' அச்சச்சோ' என்ற ப்ரோமோ பாடல் இன்று காலை 10 மணிக்கு வெளியாகியது.

    தமிழ் சினிமாவில் பேய் திரைப்படம் என்றால் நமக்கு நியாபகம் வருவது அரண்மனை தான். சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை பாகம் 1- 2014 ஆம் ஆண்டிலும் , பாகம் 2 - 2016 ஆம் ஆண்டில் வெளியாகியது.

    பிறகு 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அரண்மனை 3'. இந்த படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்சி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விதமான விமர்சனங்களை பெற்றது.

    இந்நிலையில், இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் முந்தைய மூன்று பாகங்களில் நடித்துள்ள சுந்தர்.சி இந்த பாகத்திலும் நடித்துள்ளார்.

    மேலும் இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரையிலர் வெளியானது. இதுவரை அரண்மனை 4 படத்தின் டிரெயிலர் 1 கோடி பார்வைகள் யூடியூபில் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் , 'அரண்மனை 4 ' படத்தின்' அச்சச்சோ' என்ற ப்ரோமோ பாடல் இன்று காலை 10 மணிக்கு வெளியாகியது. பாடலில் தமன்னாவும் ராஷி கண்ணாவும் மிக கவர்ச்சியான உடையில் நடனமாடி இருக்கின்றனர். அரண்மனை4 படத்தின் சில காட்சிகளும் இப்பாடலில் இடம்பெற்றுள்ளது.

    அரண்மனை திரைப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்களிடையே தற்பொழுது இந்த பாடல் மிக வைரலாக பரவி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • முன்னணி நடிகர், நடிகைகள் ஓ.டி.டி. படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
    • ஒரு எபிசோட்டில் நடிக்க ரூ.18 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது.

    ஓ.டி.டி. தளங்கள் சமீப காலத்தில் அசுர வளர்ச்சி பெற்றுள்ளன. தியேட்டர்களுக்கு சென்று படம் பார்ப்பதை விட ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்களை பார்க்கவே ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    ஓ.டி.டி.யில் வெளியிடுவதற்காகவே பிரத்யேகமாக படங்கள், வெப் தொடர்கள் தயாராகின்றன. முன்னணி நடிகர், நடிகைகள் ஓ.டி.டி. படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இதில் அதிக சம்பளமும் கிடைக்கிறது.

    இந்த நிலையில் ஓ.டி.டி. தொடர்களில் நடிக்க அதிக சம்பளம் பெறும் நடிகர்கள் விவரம் வெளியாகி இருகிறது. இந்த பட்டியலில் இந்தி நடிகர் அஜய்தேவ்கான் முதல் இடத்தில் இருக்கிறார். இவர் ஓ.டி.டி. வெப் தொடரில் ஒரு எபிசோட்டில் நடிக்க ரூ.18 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது.

     அஜய்தேவ்கான் நடிப்பில் சமீபத்தில் `ருத்ரா' என்ற வெப் தொடர் வெளியானது. இதில் 7 எபிசோடுகள் இருந்தன. ஒரு எபிசோடுக்கு ரூ.18  கோடி வீதம் மொத்தம் ரூ.126 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது. இவருக்கு அடுத்து இந்தி நடிகர் மனோஜ் பஜ்பாய் ஒரு எபிசோடுக்கு ரூ.10 கோடி பெறுகிறார்.

     நடிகைகள் தமன்னா, சமந்தா, பிரியங்கா சோப்ரா ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்க அதிக சம்பளம் பெறுகிறார்கள்.

    • சுந்தர் சி இயக்கிய படங்களில் அரண்மனை 1,2,3 போன்ற படங்கள் மாபெரும் வெற்றி படங்களாக அமைந்தன.
    • இதில் தமன்னா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க சுந்தர் சி தமன்னாவிற்கு அண்ணனாக நடித்திருந்தார்.

    சுந்தர். சி தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர். தமிழ் சினிமாவிற்கு பல நல்ல திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

    அவர் இயக்கிய படங்களில் அரண்மனை 1,2,3 போன்ற படங்கள் மாபெரும் வெற்றி படங்களாக அமைந்தன. காமெடி கலந்த ஹாரர் படமாக வெளியான இந்த படங்கள்  ஹாலிவுட் திரையுலகில் சில திரைப்படங்களை ஃப்ரான்சிஸ் திரைப்படங்கள் சிலவற்றை இருக்கும், ஃபெண்டாஸ்டிக் 4, ஃபைனல் டெஸ்டினேஷன், ஃபாஸ்ட் அண்ட் ஃபுரீயஸ் என்ற அந்த வரிசையில் தமிழ் சினிமாவிற்கு ஃப்ரான்சிஸ் திரைப்படமாக உருவாகிக் கொண்டு வருகிறது அரண்மனையின் 1,2,3 பாகங்கள்,

    இந்நிலையில் அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் கடந்த மே 3ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இதில் தமன்னா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க சுந்தர் சி தமன்னாவிற்கு அண்ணனாக நடித்திருந்தார்.

    மேலும் ராஷி கண்ணா, கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரசிகர்களின் பேராதரவை பெற்ற இந்த படம் வெளியான நாள் முதலே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வசூலிலும் 100 கோடியை தாண்டி இந்தாண்டின் முதல் வெற்றிபெற்ற தமிழ் படமாக அமைந்தது.

    இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசை அமைத்திருந்த நிலையில் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகின. 30 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் இந்த படமானது வருகின்ற ஜூன் 21ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இரண்டு கதாநாயகிகள் நடித்தால் ஒருவரோடு ஒருவரை ஒப்பிட்டு பேசுவது வழக்கம்.
    • என்னை பொறுத்தவரை நடிகைகளுக்குள் போட்டி இருப்பதை வரவேற்கிறேன்.

    ரஜினிகாந்துடன் தமன்னா நடித்த ஜெயிலர் படம் கடந்த வருடம் வெளியானது. இதில் அவர் கவர்ச்சியாக ஆடிய காவாலா பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

    கடந்த மே மாதம் வெளியான அரண்மனை 4-ம் பாகம் படத்தில் இன்னொரு நாயகியான ராஷிகன்னாவுடன் இணைந்து நடித்து இருந்தார். படப்பிடிப்பில் இருவருக்கும் போட்டி நிலவியதாக கூறப்பட்டது.

    இதுகுறித்து தமன்னா அளித்துள்ள பேட்டியில், "ஒரு படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடித்தால் ஒருவரோடு ஒருவரை ஒப்பிட்டு பேசுவது வழக்கம். சிலர் இரண்டு நடிகைகளுக்கும் போட்டி என்றும் பேசுவார்கள். என்னை பொறுத்தவரை நடிகைகளுக்குள் போட்டி இருப்பதை வரவேற்கிறேன். ஆனால் அது ஆரோக்கியமான போட்டியாக இருக்க வேண்டும். சினிமா துறையில் போட்டிகள் இருந்தாலும் நாம் நம்மை மாதிரியே நடித்தால் போதும்.

    நானும், ராஷிகன்னாவும் ஒரு பாடலில் சேர்ந்து நடித்தபோது ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தோம். நடிகைகளுக்குள் ஆரோக்கியமான போட்டி இருந்தால் நல்லது'' என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஹாரர் கதைக்களத்தை மையமாக வைத்து சுந்தர் சி அரண்மனை 1 படத்தை 2014 ஆம் ஆண்டு இயக்கினார்.
    • வெளியான முதல் நாளிலிருந்தே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது அந்த வகையில் கிட்டத்தட்ட 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.

    தமிழ் சினிமாவில் அடுத்து வளர்ந்துக் கொண்டு வரும் ஃப்ரான்சிஸ் படமாக அரண்மனை திரைப்படம் இருக்கிறது, ஹாரர் கதைக்களத்தை மையமாக வைத்து சுந்தர் சி அரண்மனை 1 படத்தை 2014 ஆம் ஆண்டு இயக்கினார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த இரண்டு பாகத்தை இயக்கினார்.

    இதன் மாபெரும் வெற்றிக்கு பிறகு அடுத்ததாக அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கியுள்ளார் சுந்தர் சி. இந்த படத்தில் சுந்தர்.சி-க்கு தங்கையாக தமன்னா நடிக்க, தமன்னாவிற்கு ஜோடியாக சந்தோஷ் பிரதாப் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் பாடல் ஒன்றுக்கு குஷ்பு மற்றும் சிம்ரன் ஆகிய இருவரும் நடனமாடியுள்ளனர்.

    இந்த படமானது கடந்த மே 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. வெளியான முதல் நாளிலிருந்தே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது அந்த வகையில் கிட்டத்தட்ட 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.

    இதன் வெற்றியைத் தொடர்ந்து சுந்தர்.சி கலகலப்பு-3 படத்தை இயக்கப் போவதாக தகவல் பரவியது. அது மட்டும் இல்லாமல் தமன்னா , வடிவேலு கூட்டணியில் புதிய படம் சுந்தர்சி இயக்கப் போகிறார் என்ற தகவலும் பரவி வருகிறது.

    இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய சுந்தர் சி, "பேய் படத்தில் ஏன் கவர்ச்சி இருக்கிறது என்று கேட்கிறார்கள். பேயாக இருந்தாலும் அது கவர்ச்சியாக வந்தால் தான் இங்க வியாபாரமே நடக்குது. அரண்மனை 5 ஆம் பாகத்திலும் கவர்ச்சி இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

    இதன் மூலம் அவர் அரண்மனை பாகம் 5 கட்டாயமாக இயக்கவுள்ளார் என உறுதியாகியுள்ளது. அடுத்த எந்த திரைப்படத்தை இயக்கப்போகிறார் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 7-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.
    • தமன்னா தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் முன்னணி கதாநாயகி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

    பெங்களூரு:

    பெங்களூரு ஹெப்பால் பகுதியில் சிந்தி என்ற தனியார் பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் 7-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. 'சிந்த் பிரிவினைக்கு பிறகு இந்திய மக்களின் வாழ்க்கை' என்ற பாடத்தில் தமன்னா பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர், நடிகை தமன்னா குறித்து தங்கள் குழந்தைகள் கற்க வேண்டிய விஷயம் என்ன உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். தமன்னா தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் முன்னணி கதாநாயகி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×