search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamannah"

    • அயன், ஜெயிலர், அரண்மனை உள்பட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் தமன்னா.
    • தமன்னா-விஜய் வர்மா திருமணம் விரைவில் நடை பெற இருக்கிறது.

    அயன், ஜெயிலர், அரண்மனை உள்பட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் தமன்னா.

    தொடர்ந்து தமிழ் தெலுங்கு இந்தி மொழி படங்கள் நடித்து வருகிறார். ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலயா பாடலுக்கு அவர் ஆடிய நடனம் மிகப்பெரியளவில் வைரலாகியது.

    சமூக வலைதளங்களிலும் ஏராளமான பிரபலங்கள் அந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டனர். அதைத்தொடர்ந்து தமன்னா நடித்த அரண்மனை 4 படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றிப்பெற்றது.

    தற்போது இந்தி திரை உலகில் பல படங்களிலும் வெப் தொடர்களிலும் நடித்து வரும் தமன்னா லஸ்ஸ்டோரிஸ் 2 என்ற படத்தில் நடித்த போது அவருடன் இணைந்து நடித்த விஜய் வர்மாவுடன் காதல் வயப்பட்டார்.

    காதலர்களாக பல்வேறு இடங்களில் டேட்டிங் செய்து வரும் தமன்னா-விஜய் வர்மா திருமணம் விரைவில் நடை பெற இருக்கிறது.

    அடிக்கடி விழாக்களுக்கும் விருந்து நிகழ்ச்சிகளுக்கும் சென்று ஒன்றாக கலந்து கொள்ளும் விஜய் வர்மா,தமன்னா மும்பையில் நடந்த தீபாவளி விருந்து நிகழ்ச்சியில் ஜோடியாக பங்கேற்றனர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வேதா படத்தின் புதிய காதல் பாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது.
    • இந்த பாடலின் இறுதியில் ட்விஸ்ட் உள்ளது.

    ஷர்வாரி, ஜான் ஆபிரகாம் மற்றும் அபிஷேக் பானர்ஜி நடிப்பில், ஜீ ஸ்டுடியோஸ், எம்மே எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜேஏ எண்டர்டெயின்மெண்ட் ஆகியவை வழங்கும் 'வேதா' படத்தில் இருந்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காதல் பாடலான, 'நீதானே நீதானே' வெளியாகியுள்ளது.

    'ஹோலியான்' மற்றும் 'மம்மி ஜி' ஆகிய இரண்டு எனர்ஜிட்டிக் பாடல்களுக்குப் பிறகு, இந்த அழகான பாடலில் ஜான் ஆபிரகாம் மற்றும் தமன்னா பாட்டியா இருவரும் இணைந்து நடனமாடியுள்ளனர். இந்தப் பாடலில் ஜான் ஆபிரகாம் மற்றும் தமன்னா பாட்டியா இடையேயான கெமிஸ்ட்ரி நிச்சயம் பார்வையாளர்களை மயக்கும். அதேசமயம், பாடலின் முடிவில் ஒரு அதிர்ச்சி தரும் ட்விஸ்ட்டும் உள்ளது.

     


    பாடலை வெளியிட்ட ஜான் ஆபிரகாம், "'நீதானே நீதானே...' பாடல் 'வேதா' படத்தின் ஆன்மா. என் கதாபாத்திரத்தின் எமோஷனல் மற்றும் ரொமாண்டிக் பக்கத்தை இது காட்டும். இந்தப் படத்தில் வெறும் ஆக்ஷன் மட்டுமல்லாது காதலும் உண்டு என்பதற்காகதான் இந்தப் பாடல்" என்றார்.

    தமன்னா பாட்டியா, "ஜானுடன் முதல்முறையாக பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவர் தனது கதாபாத்திரத்திற்குக் கொடுத்த அர்ப்பணிப்பு திரையில் சிறப்பாக வந்துள்ளது. இந்த பாடல் காதல் மற்றும் பல நல்ல நினைவுகள் நிறைந்ததாக இருக்கும். இது அனைவருக்கும் கனெக்ட் ஆகும் என நான் நம்புகிறேன்!" என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சுந்தர் சி இயக்கத்தில் மே 3 ஆம் தேதி வெளியாகியது அரண்மனை 4 திரைப்படம்.
    • ஹிப்ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். குஷ்பு சார்பில் அவ்னி சினிமாக்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

    சுந்தர் சி இயக்கத்தில் மே 3 ஆம் தேதி வெளியாகியது அரண்மனை 4 திரைப்படம். இந்த படத்தின் முதல் மூன்று பாகங்களை போன்றே இந்த படத்திலும் சுந்தர் சி நடித்துள்ளார். இவருடன் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஹிப்ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். குஷ்பு சார்பில் அவ்னி சினிமாக்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படத்தின் பாடலான அச்சச்சோ மற்றும் அம்மன் பாடல் ஹிட்டாக அமைந்தது.

    யோகி பாபு, கோவை சரளா மற்றும் விடிவி கணேஷ் கமெடி காட்சிகள் மக்களிடையே மிகவும் ரசிக்க கூடியவையாக் இருந்தது. அரண்மனை மற்ற பாகங்களை விட இந்த பாகத்தில் கிராபிக்ஸ் மற்றும் விஃபெக்ஸ் காட்சிகள் மிகவும் மேன்மையாக உருவாக்கப்பட்டு இருந்தது. இதெல்லாம் படத்தின் கூடுதல் பலம்.

    படம் தமிழின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு மற்றும் உலகளவில் வெளியிடப்பட்டது. படம் வெளியாகி 19 முடிவடைந்த நிலையில் படம் இதுவரை உலகளவில் 100 கோடியை வசூலித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் திரைப்படத்தில் அரண்மனை4 வசூலில் முதல் இடத்தில் உள்ளது. தமிழ் நாடில் வெளியிடப்பட்ட மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் வசூலை அரணமனை முறியடித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
    • சென்னையில் உள்ள பெரும்பாலான திரையரங்களிலும் மால்களில் உள்ள திரையரங்குகளில் இன்று ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது

    சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் அரண்மனை 4. இந்த படத்தின் முதல் மூன்று பாகங்களை போன்றே இந்த படத்திலும் சுந்தர் சி நடித்துள்ளார். இவருடன் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஹிப்ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். குஷ்பு சார்பில் அவ்னி சினிமாக்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். மே 3 { இன்று} திரையரங்குகளில் வெளியானது. நேற்று திரைப்பிரபலங்களுக்கு திரைமுன்னோட்டம் காட்சியிடப்பட்டது. அதைப் பார்த்த அனைவரும் படம் நன்றாகவுள்ளது என கருத்துக்களை பகிர்ந்தனர்.

    சென்னையில் உள்ள பெரும்பாலான திரையரங்களிலும் மால்களில் உள்ள திரையரங்குகளில் இன்று ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது. படம் பார்த்த பெரும்பாலானோர் பாசிடிவ் ரிவியுகளை சமூகவலை தளங்களில் பகிர்ந்துக் கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்களிலும் வேகமாக அரண்மனை 4 படத்திற்கு புக்கிங் பதிவாகி வருகிறது.

    சுந்தர்.சி அவரது மற்ற பாகங்களை போலவே இப்படத்தை எடுத்து இருந்தாலும். இந்த பாகத்தில் விஸ்வல் எஃபக்ட்ஸ்களும், நகைச்சுவை காட்சிகள் மற்றும் திகில் காட்சிகள் நன்றாக வொர்க் அவுட் ஆகியுள்ளது.

    சமீபத்தில் தமிழ் படங்களில் ரீரிலீஸ் படங்களே அதிகம் திரையரங்குகளில் ஓடுகிறது கில்லி படத்தின் ரீ ரிலீஸ் மக்களிடம் பெரும் ஆதரவு பெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் முன்பு அஜித்குமார் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான தீனா, பில்லா போன்ற படங்கள் கில்லியைப் போல் வரவேற்பு கிடைக்கவில்லை.

    இந்நிலையில் மலையாள திரைப்படங்களுக்கு கிடைத்த ஆதரவு கூட சமீபத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களுக்கு கிடைக்கவில்லை.இச்சூழ்நிலையில்  தற்பொழுது அரண்மனை 4 வெளியாகியுள்ளது.

    கோடை விடுமுறைக்கு தக்க சமையத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடும் திரைப்படமாக இது அமைந்துள்ளது அரண்மனை 4. இப்படத்திற்கு மக்களிடையே பெருமாதரவு பெற்று வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
    • இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

    சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் அரண்மனை 4. இந்த படத்தின் முதல் மூன்று பாகங்களை போன்றே இந்த படத்திலும் சுந்தர் சி நடித்துள்ளார். இவருடன் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ள அரண்மனை 4 திரைப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்து இருந்தது. இதையொட்டி இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில், அரண்மனை 4 படம் மே மாதம் 3 ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கோலமாவு கோகிலா படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகினார் நெல்சன் திலிப்குமார்.
    • கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெய்லர் படத்தை இயக்கினார்.

    நயன்தாரா நடிப்பில் 2018 ஆம் ஆண்டு கோலமாவு கோகிலா படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகினார் நெல்சன் திலிப்குமார்.

    படம் வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக சிவக்கார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படத்தை இயக்கினார். டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனால் நெல்சன் திலிப்குமாரின் புகழ் உச்சிற்கு சென்றது.

    அடுத்ததாக விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கினார். இதற்கடுத்து கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெய்லர் படத்தை இயக்கினார். படத்தின் பாடல்கள் மிகவும் ஹிட்டானது. படம் மிகப் பெரிய வசூலை குவித்தது.

    இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்பொழுது நெல்சன் ஜெயிலர் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகிவுள்ளது. இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.இதனிடையே இயக்குநர் நெல்சன் தனது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதை வைத்து ரசிகர்கள் இயக்குநர் நெல்சன் ஜெயிலர் 2 படத்திற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கமென்ட் செய்து வருகின்றனர்.

    இந்த படத்தில் ரஜினிகாந்த் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். முதல் பாகத்தைப் போல் இப்பாகமும் மிகப் பெரிய வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ராஷ்மிகா தனது 28-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.
    • ரன்பீர் கபூருடன் இணைந்து ராஷ்மிகா நடித்த அனிமல் படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

    விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா.

    தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். ரன்பீர் கபூருடன் இணைந்து ராஷ்மிகா நடித்த அனிமல் படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

    தற்போது அல்லுஅர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2 படத்தில் ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்நிலையில் ராஷ்மிகா தனது 28-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.

    அவருக்கு திரை உலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். சமந்தா தெரிவித்த வாழ்த்து பதிவில், பிறந்தநாள் வாழ்த்துக்கள். அன்புள்ள ராஷ்மிகா உங்களுக்கு இது மற்றொரு அழகான ஆண்டு என பதிவிட்டுள்ளார்.

     

    தமன்னா வெளியிட்டுள்ள பதிவில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராஷ்மிகா. உங்களுக்கு இது சிறந்த ஆண்டாகவும் நிறைய அன்பு கிடைக்கவும் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

    சக நடிகையான ராஷ்மிகாவுக்கு எனது வாழ்த்துக்கள் என நடிகர் அல்லு அர்ஜூன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளார்.

     

    இவ்வாறு ஏராளமான நடிகர், நடிகைகள் ராஷ்மிகாவுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    பிறந்த நாளையொட்டி புஷ்பா 2 படக் குழுவினர் படத்தில் ராஷ்மிகாவின் வள்ளி கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகை தமன்னா, பாலிவுட் பிரபலம் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார்.
    • இவர் சமீபத்தில் விஜய் வர்மாவுடனான காதலை உறுதி செய்தார்.

    தமிழில் விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ், ரஜினி உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ள தமன்னா தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார். இவர் பாலிவுட் பிரபலம் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவி வந்ததையடுத்து சமீபத்தில் விஜய் வர்மாவுடனான காதலை உறுதி செய்தார்.


    இந்நிலையில், நடிகை தமன்னா தற்போது அவருக்கு திருமணம் நடைபெறபோவதில்லை என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், " திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொள்ள தான் போகிறேன். ஆனால், இப்போது அதற்கான மனநிலை இல்லை.


    என் கேரியர் இப்போது சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. அதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன். படப்பிடிப்புதான் இப்போது என் மகிழ்வான இடம்" என்றார் பேசினார்.

    • நடிகை தமன்னா ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதன்பின்னர் வியாபாரி, அயன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். பாலிவுட்டிலும் அதிகமான படங்களில் நடித்து வரும் தமன்னா, வெப் சீரிசிலும் நடித்துள்ளார். ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படத்தில் தமன்னா நடித்துள்ளார். இப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    தமன்னாவை பார்க்க பாய்ந்த ரசிகர்

    இந்நிலையில், கேரள மாநிலம் கொல்லத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமன்னா, விழா அரங்கை விட்டு வெளியில் வந்த போது திடீரென ரசிகர் ஒருவர் தமன்னாவை நெருங்கினார். உடனே உடனிருந்த பாதுகாவலர்கள் அந்த ரசிகரைத் தடுத்த நிறுத்தினர். அப்போது தமன்னா தனது பாதுகாவலர்களுக்கு அறிவுரை கூறி விலகச் செய்து, தன் ரசிகரின் ஆசைப்படி அவருடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • அஜித் தற்போது 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கிறார்.
    • இந்த படத்தை மகிழ்த்திருமேனி இயக்குகிறார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.


    இந்நிலையில், 'விடாமுயற்சி' திரைப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு வருகிற 18-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் திரிஷா மற்றும் தமன்னா இணைந்து நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, புனே, அபுதாபி, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • நடிகை தமன்னா தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதன்பின்னர் வியாபாரி, அயன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். பாலிவுட்டிலும் அதிகமான படங்களில் நடித்து வரும் தமன்னா, வெப் சீரிசிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான லவ் ஸ்டோரிஸ் 2-வில் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.


    இந்த வெப் தொடரில் படுக்கை அறை காட்சிகளும் லிப் லாக் காட்சிகளிலும் விஜய் வர்மாவுடன நெருக்கமாக நடித்தார். தமன்னா-விஜய் வர்மாவும் காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்து வரும் தமன்னா காவாலா பாடலுக்கு ஆடிய நடனம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.


    இந்நிலையில், நடிகை தமன்னா, விஜய்யுடன் 'சுறா' படத்தில் நடித்தது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, "சுறா திரைப்படம் எனக்கு பிடிக்கும். ஆனால் அதில் என்னுடைய நடிப்பு மிகவும் மோசமாக இருக்கும். இனிமேல் இப்படியான ஒரு கதாபாத்திரத்தில் நான் நடிக்க மாட்டேன் என்பதை உறுதியாக சொல்கிறேன். 'சுறா' படப்பிடிப்பின்போதே எனக்குத் தெரியும், அது வொர்க்அவுட் ஆகாது என்று. நிறைய படங்களில் நமக்கே தெரியும் இது சரிவராது என்று ஆனால் நடித்து ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்போம். நாங்கள் ஒப்புகொண்டிருக்கும் ஒரு விஷயத்தில் பலரின் பொருளாதாரம் உள்ளிட்டவை சம்பந்தபட்டிருக்கிறது. ஆகவே, கமிட்டாகிவிட்டால் அதில் நடித்தாகவேண்டும். அது வேலையின் ஒரு பகுதி" என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகை தமன்னா பல படங்களில் நடித்து வருகிறார்.
    • இவர் தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தமன்னா. அதன்பின்னர் வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், அயன், பையா, சுறா, சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.


    இந்நிலையில் நடிகை தமன்னா கையில் மிகப்பெரிய வைர மோதிரம் அணிந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. இது உலகின் 5-வது பெரிய வைரம் என்றும் 'சைரா நரசிம்மா ரெட்டி' திரைப்படத்தில் தமன்னாவின் நடிப்பை பார்த்து வியந்த நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனா இதை நடிகை தமன்னாவிற்கு பரிசாகக் கொடுத்தார் என்றும் செய்திகள் பரவி வந்தது. மேலும், இதன் மதிப்பு ரூ.2 கோடி என்றும் கூறப்பட்டது.


    தமன்னா பதிவு

    இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது கண்டு அதிர்ச்சியடைந்த நடிகை தமன்னா, இந்த செய்தியை உடனடியாக மறுத்துள்ளார். மேலும், "இது வெறும் 'பாட்டில் ஓபனர்'தான், வைரம் இல்லை" என்று தெளிவுப்படுத்தியுள்ளார்.

    ×