என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tamil film"

    • துயரத்தை வெளிப்படுத்தும் விதத்தையோ ஏன் இவ்வளவு வெட்ட வெளிச்சமாக்க வேண்டும்.
    • இயலாமையையோ கொண்டாடும் மணநிலைக்கு வந்துவிட்டோமோ.

    தமிழ் திரையுலகின் பிரபல நடிகரும், இயக்குநருமான மனோஜ் பாரதி ராஜா சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு திரையுலகினர், ரசிகர்கள், பொது மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    பிரபலங்கள் துக்க நிகழ்வுகள் ஊடகங்களில் அதிகம் காட்டப்படுவது சமீபத்தில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், துக்க வீடுகளில் ஒருவரின் துயரத்தை வெளிப்படுத்தும் விதத்தை ஏன் இவ்வளவு வெட்ட வெளிச்சமாக்க வேண்டும் என்று தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பு சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

    இது தொடர்பாக அந்த சங்கத்தின் செயல் தலைவர் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அன்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கு, மரணம் என்பது எல்லோருக்கும் நிகழக்கூடிய ஒன்று அது இயற்கையின் தீர்மானத்திற்குட்பட்டது என்பதை இவ்வுலகில் பிறந்த எல்லா உயிர்களும் அறியும்.

    ஆறறிவு கொண்ட மனிதன் இன்னும் சற்றே அதிகமாகவே அதை உணர்ந்தவன் மரண வீடுகள் மௌனிக்கப்படவும் துயரத்தைப் பகிர்ந்துகொள்ளவும். துயர்கொள்ளவும் வேண்டியவை

    யாரோ இறந்துபோனார் எனக்கும் அவருக்கும் என்ன? ஒருவரின் அழுகையோ, துயரத்தை வெளிப்படுத்தும் விதத்தையோ ஏன் இவ்வளவு வெட்ட வெளிச்சமாக்க வேண்டும் ஒருவரின் துயர் நமக்கு காசாகத்தான் வேண்டுமா?

    பார்வையாளர்களைக் கொண்டு வரும் என்ற எண்ணம் எத்தனை இரக்கமற்றது? கொடியது?

    நாம் மற்றொருவரின் மரணத்தையோ, இயலாமையையோ கொண்டாடும் மனநிலைக்கு வந்துவிட்டோமோ என்ற கவலை வலுக்கிறது.

    ஊடகங்கள் கார்களின் உள்ளேயும் நடுவீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் உடலையும் ஏன் படம் பிடிக்க வேண்டும்? அதுவும் முண்டியடித்துக்கொண்டு துக்க முகங்களைக் காட்டுவதில் அப்படி என்ன பேரானந்தம் கிடைத்துவிடப் போகிறது?

    இனி வரும் காலங்களில் ஊடக அனுமதி இறப்பு வீடுகளில் கூடவே கூடாது என்பதை முன்னெடுக்க வேண்டும்.

    அனைத்து பத்திரிகையாளர் சங்கங்களும், பத்திரிகை தொடர்பாளர் யூனியனும் இணைந்து இதற்கு ஒரு நல்ல தீர்வைக் காண்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

    சக மனிதர்களின் இழப்பை நம் வீட்டு இழப்பாகக் கருதி துயர் விசாரிக்க வரட்டும். கையில் காமெரா இல்லாமல்.

    இனிவரும் காலங்களில் இச்செயல் முற்றிலும் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து ஊடகங்களுக்கு முன் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பானர் சங்கம் இவ்வேண்டுகோளை வைக்கிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.

    தமிழில் முக்கிய கதாநாயகியாக வலம்வந்த டாப்சி தற்போது இந்தி படங்களில் பிசியாக இருப்பதால், தமிழ் பட வாய்ப்புகளை மறுத்து வருகிறார்.

    தமிழை மறந்து முழு இந்தி நடிகையாக மாறிவிட்டார் டாப்சி. நாம் சபானா படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு டாப்சி ஆக்‌‌ஷன் வேடங்களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

    தற்போது பட்வா என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கும் டாப்சி அடுத்து அமிதாப்புடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். சுஜாய் கோஷ் இயக்கும் இந்த படம் திரில்லராக உருவாகிறது. டாப்சி ஏற்கனவே பிங்க் படத்தில் அமிதாப்புடன் நடித்திருந்தார்.

    டாப்சிக்கு வரிசையாக இந்தி வாய்ப்புகள் குவிவதால் தென்னிந்திய மொழிகளில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் மறுத்துவிடுகிறார். முக்கியமாக டாப்சியை ஆரம்ப காலங்களில் வளர்த்த தமிழிலும் நடிக்க மறுக்கிறார்.

    இந்தியில் மட்டும் டாப்சியின் கையில் 4 படங்கள் இருக்கின்றன. சமீபத்தில் தமிழ் இயக்குனர் ஒருவர் அணுகியதற்கு கதை கேட்கவே மறுத்துவிட்டாராம் டாப்சி.
    ×