என் மலர்
நீங்கள் தேடியது "Tamil maanila congress"
- தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி அரசுப்பணியில் உள்ள காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்பாமல் இருப்பது நியாயமில்லை.
- தற்காலிகப் பணியோ, ஒப்பந்த அடிப்படையிலான பணியோ வழங்காமல் அரசுப்பணியாக வழங்கினால் தான் அது அரசுப்பணியில் சேர்பவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பயனளிக்கும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அரசுத்துறைகளில் சுமார் 4.5 லட்சம் காலிப்பணியிடங்கள் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அது மட்டுமல்ல ஆண்டுதோறும் சுமார் 10 ஆயிரம் குரூப் 4 பணியாளர்கள் ஓய்வு பெறுகின்றனர்.
குறிப்பாக தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி அரசுப்பணியில் உள்ள காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்பாமல் இருப்பது நியாயமில்லை. தற்காலிகப் பணியோ, ஒப்பந்த அடிப்படையிலான பணியோ வழங்காமல் அரசுப்பணியாக வழங்கினால் தான் அது அரசுப்பணியில் சேர்பவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பயனளிக்கும்.
எனவே தமிழக அரசு, குரூப் 4-க்கான பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அரசுத் தேர்வு மூலம் தேர்ச்சி பெறும் அனைவருக்கும் அரசுத்துறையில் பணி வழங்கவும், அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தையும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிரப்பவும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அரசு பள்ளிகளில் கணினி, ஓவியம், உடற்கல்வி, இசை, தையல், போன்ற பாடங்களை நடத்தும் ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.
- அனைத்து மாதங்களுக்கும் சம்பளம் போன்ற பல்வேறு நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசும், கல்வித்துறையும் பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும்.
சென்னை :
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் கல்வித்துறையில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குறைந்த சம்பளத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். நீண்டகாலமாக ஆர்ப்பாட்டம், போராட்டத்தின் மூலம் தங்கள் கோரிக்கைகளை அரசிற்கு தெரிவித்து வருகின்றனர். அரசு பள்ளிகளில் கணினி, ஓவியம், உடற்கல்வி, இசை, தையல், தோட்டக்கலை, வாழ்வியல் திறன் போன்ற பாடங்களை நடத்தும் ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய் 10 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கல்வித்துறை, பகுதிநேர ஆசிரியராக பணிபுரிபவர்களுக்கு மே மாதம் சம்பளம் அளிக்கப்படுவதில்லை. ஆகவே பகுதிநேர ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளான, பணி நிரந்தரம், சம்பள உயர்வு, பணியின் போது இறந்த ஆசிரியர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 3 லட்சம் நிதியுதவி, அனைத்து மாதங்களுக்கும் சம்பளம் போன்ற பல்வேறு நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசும், கல்வித்துறையும் பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழக அரசு உடனடியாக தனது நிலையை, ஆலோசனை செய்ததை மாற்றிக்கொண்டு தேர்தலில் வெளியிட்ட வாக்குறுதிக்கு ஏற்ப மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும்.
- தி.மு.க. அரசு மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாத வகையில் அனைவருக்கும் கொடுப்பது தான் நியாயமானது.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. சட்டமன்றத் தேர்தலின் போது மக்களிடம் இருந்து வாக்கு வாங்குவதற்காக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என்று அறிவித்தது. இந்நிலையில் ஆட்சிக்கு வந்தவுடனேயே கொடுத்திருக்க வேண்டும். ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடமாக எதிர்பார்த்த மக்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்காமல் காலத்தை நீடித்து வந்தது. மேலும் தற்பொழுது ஆலோசனை என்ற பெயரில் ஆயிரம் ரூபாய் வழங்குவதில் பாகுபாடு, பாரபட்சம், கோட்பாடு என வகுத்து வாக்களித்த மக்களுக்கு நம்பிக்கையை இழக்க வைத்திருக்கிறது.
இந்நிலையில் தமிழக அரசு உடனடியாக தனது நிலையை, ஆலோசனை செய்ததை மாற்றிக்கொண்டு தேர்தலில் வெளியிட்ட வாக்குறுதிக்கு ஏற்ப மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். எனவே தி.மு.க. அரசு மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாத வகையில் அனைவருக்கும் கொடுப்பது தான் நியாயமானது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மாநில வளர்ச்சி, நாட்டின் உயர்வு ஆகியவற்றை கவனத்தில் கொண்டால் ஆசிரியர் பணி மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
- சுமார் 60 ஆயிரம் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வகையில் நடவடிக்கை எடுத்து அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் உதவிடுமாறு வலியுறுத்துகிறேன்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் முதலில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்கவும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் பணிக்கான ஒரு மறுநியமனத் தேர்வை ரத்து செய்யவும், ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை 40 என்பதை நீக்கவும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவச்செல்வங்களின் கல்வி, வருங்கால முன்னேற்றம் அதன் மூலம் மாநில வளர்ச்சி, நாட்டின் உயர்வு ஆகியவற்றை கவனத்தில் கொண்டால் ஆசிரியர் பணி மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே தமிழக அரசு, 2013-ம் ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசுப்பணியின்றி தவிக்கும் சுமார் 60 ஆயிரம் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வகையில் நடவடிக்கை எடுத்து அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் உதவிடுமாறு வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஆண்டுதோறும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
- பொதுக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள த.மா.கா.வினர் கலந்து கொள்கிறார்கள்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஆண்டுதோறும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த வகையில் இந்த வருடம் பெருந்தலைவரின் 121-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஈரோடு மாநகரில் வருகிற 15-ந்தேதி மாலை 4 மணி முதல் 9 மணி வரை நடைபெறும்.
பொதுக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள த.மா.கா. வினர் கலந்து கொள்கிறார்கள். இக்கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று சமூக வலைத்தளத்தில் வதந்திகளை பரப்புவது மிகவும் கண்டிக்கதக்கது.
- மக்களின் உணர்ச்சிகளை தூண்டி கலகம் ஏற்படுவதை இரு மாநில அரசுகளும் கடுமையாக தடுத்து நிறுத்த வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகா மற்றும் தமிழகத்திற்கு இடையில் நதிநீர் பங்கீடு விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு, இரண்டு மாநிலங்களுக்கு இடையே சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி சிறப்பாக பணியாற்றி வருகிறது.
அந்தந்த மாநில நிலவரத்திற்கு ஏற்ப கருத்து பரிமாற்றங்கள் இருக்கும். இதில் வன்முறைக்கு எந்த விதத்திலும் இடமில்லை. கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று சமூக வலைத்தளத்தில் வதந்திகளை பரப்புவது மிகவும் கண்டிக்கதக்கது. இதுபோன்ற வீண் வதந்திகளை பரப்புவர்கள் மீது கர்நாடகா அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மக்களின் உணர்ச்சிகளை தூண்டி கலகம் ஏற்படுவதை இரு மாநில அரசுகளும் கடுமையாக தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்க மறுத்து, தமிழகத்திற்கு தண்ணீர் வழங்காத கர்நாடகா அரசுக்கு கண்டனம்.
- ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் எம்.பி. கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
சென்னை:
த.மா.கா. சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்க மறுத்து, தமிழகத்திற்கு தண்ணீர் வழங்காத கர்நாடகா அரசை கண்டித்து, வருகிற 10-ந்தேதி மாலை 3 மணியளவில் தமிழ் மாநில காங்கிரஸ், டெல்டா மாவட்டங்களின் சார்பாக அரியலூர் மாவட்டம், திருமானூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் எம்.பி. கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ், டெல்டா மாவட்ட மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், மாநில துணை அமைப்புத் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ், விவசாய அணியின் சார்பாக டெல்டா மாவட்ட மாநில, மாவட்ட, தலைவர்கள், நிர்வாகிகள், கலந்துகொள்கிறார்கள்.
காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் எண்ணங்களை பிரதிபலிக்க கூடிய இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாய பெருங்குடி மக்களும், பொதுமக்களும், பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சீர்காழி, குன்னம், பெரம்பூர் அதை சுற்றியுள்ள 5 ஆயிரம் ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு மூலம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
- வடகிழக்கு பருமழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய இழப்பீடை வழங்க வேண்டும்.
சென்னை :
த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்கள் தற்பொழுது சம்பா, தாளடி பயிர்கள் செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நாகை மாவட்டத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் இளம் பயிர்கள் மழைநீரில் மூழ்கி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவில், எடக்குடி, வடபாதி அவற்றின் சுற்றியுள்ள பகுதிகளில் 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள், மின் மோட்டார் மூலமும், நேரடி நெல் விதைப்பு மூலமும் சாகுபடி செய்துள்ளனர். மேலும் சீர்காழி, குன்னம், பெரம்பூர் அதை சுற்றியுள்ள 5 ஆயிரம் ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு மூலம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் முற்றிலுமாக மழைநீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் மிகவும் கவலையில் உள்ளார்கள்.
விவசாயத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தி, மழைநீரில் மூழ்கியுள்ள பயிர்களை காப்பாற்ற தமிழக அரசு போர்கால அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுத்து பயிர்களை காக்க வேண்டும். அதோடு தற்பொழுது வடகிழக்கு பருமழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய இழப்பீடை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆவின் பால் நிறுவனமும், தமிழக அரசும், பால் கொள்முதல் விலையை உயர்த்தி அளித்துவிட்டு, அதனை ஈடுகட்ட ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தக்கூடாது.
- பால் விற்பனை விலையை மீண்டும் உயர்த்தினால் பால் நுகர்வோர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
சென்னை :
த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆவின் பால் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களின் வேண்டுக்கோளுக்கு இணங்க பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 உயர்த்தி இருக்கிறது. இதனால் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவார்கள்.
ஆவின் பால் நிறுவனமும், தமிழக அரசும், பால் கொள்முதல் விலையை உயர்த்தி அளித்துவிட்டு, அதனை ஈடுகட்ட ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தக்கூடாது. ஏற்கனவே ஆவின் பால் நிறுவனம் பால் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. ஆகவே பால் விற்பனை விலையை மீண்டும் உயர்த்தினால் பால் நுகர்வோர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
ஆவின் நிறுவனம் மற்ற மாநிலங்களில் இருந்து பால் கொள்முதல் செய்வதை கைவிட்டு, நமது மாநில பால் உற்பத்தியாளர்களிடமே பால் கொள்முதல் செய்ய வேண்டும். இதனால் பால் உற்பத்தியாளர்களுக்கும் பயன் கிடைக்கும், ஆவின் நிறுவனத்திற்கும் கொள்முதல் அளவும் உயர்ந்து, நுகர்வோரின் பால் தட்டுப்பாடும் விலகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கட்சியின் நலன் அடிப்படையில் கூட்டணி குறித்து ஆலோசித்து முறைப்படி முடிவு அறிவிக்கப்படும்.
- நாங்களும் பொதுக்குழுவில் கலந்து பேசி தாமதமில்லாமல் சரியான நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்போம்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் த.மா.கா. யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து தான் முடிவு எடுக்க வேண்டும். இதற்காக வருகிற 12-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரில் த.மா.கா. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் உள்பட பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள். அவர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிப்பார்கள். பொதுக்குழு கூட்டத்தில் த.மா.கா.வின் தேர்தல் வியூகம், யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும். கட்சியின் நலன் அடிப்படையில் கூட்டணி குறித்து ஆலோசித்து முறைப்படி முடிவு அறிவிக்கப்படும்.
கடந்த தேர்தலில் எங்களுடன் கூட்டணியில் இருந்த தே.மு.தி.க., புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புதிய நீதிக் கட்சி, ஐ.ஜேகே., புரட்சி பாரதம் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தங்களின் பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தி அந்தந்த கட்சியின் கோட்பாடுகளுக்கு ஏற்றவாறு தேர்தல் வியூகங்களை அமைத்து கூட்டணி தொடர்பாக அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பார்கள்.
இதேபோல் நாங்களும் பொதுக்குழுவில் கலந்து பேசி தாமதமில்லாமல் சரியான நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேசப்பற்று உள்ள கட்சிகள் பா.ஜ.க. கூட்டணியில் இணையவேண்டும்.
- நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு தொடர மாநில கட்சிகள் சிந்தித்து செயல்பட வேண்டும்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜக- தமிழ் மாநில காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி.கே.வாசன் இல்லத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜி.கே.வாசனுடன், பொன்.ராதா கிருஷ்ணன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை உறுதி செய்தார். முதல் சந்திப்பு ஆக்கப்பூர்வமாக அமைந்தது. தொகுதி எண்ணிக்கை குறித்து பேசியுள்ளோம். தேசப்பற்று உள்ள கட்சிகள் பா.ஜ.க. கூட்டணியில் இணையவேண்டும். நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு தொடர மாநில கட்சிகள் சிந்தித்து செயல்பட வேண்டும். முரண்பாடுகளின் மொத்த வடிவம் இந்தியா கூட்டணி என்றார்.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், தொகுதி பங்கீடு குறித்து ஜி.கே.வாசன் உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். பா.ஜ.க, த.மா.கா இடையே சுமூகமாக பேச்சுவார்த்தை தொடர்கிறது. வரும் 4-ம் தேதிக்கு பிறகு 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறினார்.
- இரு கட்சி தலைவர்களுடனும் பா.ஜனதா குழுவினர் பேசி வருகிறார்கள்.
- நாளை வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது.
சென்னை:
பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள த.மா.கா., பா.ம.க. ஆகிய கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை உடன்பாடாகிவிட்டது.
இன்று கூட்டணி கட்சிகளுடன் உடன்பாடு செய்து விட்டு பிற்பகல் 2 மணிக்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை டெல்லி செல்வதாக இருந்தது.
ஆனால் மயிலாடுதுறை தொகுதியை பா.ம.க.வும், த.மா.கா.வும் கேட்பதால் உடன்பாடு எட்டுவதில் தாமதமானது.
இதுதொடர்பாக இரு கட்சி தலைவர்களுடனும் பா.ஜனதா குழுவினர் பேசி வருகிறார்கள். மாலை 4 மணிக்கு த.மா.கா. குழுவினர் கமலாலயம் செல்கிறார்கள். மாலைக்குள் அனைத்து கட்சிகளுடனும் பேச்சு வார்த்தையை முடித்துவிட்டு அண்ணாமலை வேட்பாளர் பட்டியலுடன் டெல்லி செல்கிறார். நாளை வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது.