search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu Health Department"

    • மருத்துவ துறையினர், சுகாதார பணியாளர்கள் முகக்கவசம் அணிதல் கட்டாயம்.
    • நோயின் தீவிரத்தை பொருத்து நோயாளிகளை வகைப்படுத்தி கண்காணிக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுடன் பருவகாலத்தில் பரவும் இன்புளூயன்சா தொற்றும் தீவிரமடைந்து வருவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுமாறு பொது சுகாதாரத் துறை வலியுறுத்தி உள்ளது.

    இது தொடர்பாக அனைத்து மாவட்ட பொது சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மருத்துவ துறையினர், சுகாதார பணியாளர்கள் முகக்கவசம் அணிதல் கட்டாயம். பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் மூன்றடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும். பருவ கால தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் நோயின் தீவிரத்தை பொருத்து நோயாளிகளை வகைப்படுத்தி கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    பிரசவத்தின் போது தாய்மார்களின் இறப்பு விகிதத்தை வெகுவாக குறைத்ததற்காக தமிழக சுகாதார துறைக்கு மத்திய அரசு வழங்கிய விருதை குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார். #Healthdepartment #Centralgovernmentaward

    சென்னை:

    பிரசவத்தின் போது தாய்மார்களின் இறப்பு விகிதத்தை வெகுவாக குறைத்ததற்காக தமிழகத்துக்கு விருது வழங்கப்பட்டது. மத்திய சுகாதாரத்துறை மந்திரி நட்டாவிடம் இருந்து விருதை தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார்.

    பின்னர் இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

    2015ம் ஆண்டுக்குள் தாய் மார்கள் இறப்பு விகிதத்தை 139 ஆக குறைக்க வேண்டும் என்று மில்லினியம் வளர்ச்சி இலக்கை குறித்த ஆண்டிற்கு முன்னதாகவே தமிழகம் அடைந்து விட்டது.

    2030-ம் ஆண்டுக்குள் தாய்மார்கள் இறப்பு விகிதத்தை 70-ஆக குறைக்க வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்கை 2016-17-ம் ஆண்டின் விவரப்படி தாய்மார்களின் இறப்பு விகிதம் 62-ஆக குறைத்து இமாலய சாதனை புரிந்துள்ளது. இது இந்தியாவின் தாய்மார்கள் இறப்பு விகிதத்தின் சாராசரி அளவான 130-ஐவிட பாதியாகும்.

    இச்சாதனையை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசு தமிழகத்திற்கு விருது வழங்கி சிறப்பித்தது. குறிப்பாக இந்தியா முழுவதும் மாநிலங்களில் வளர்ச்சி விகிதத்தை கணித்து அறிக்கை அளிக்கும் நிதி ஆயோக்கின் உறுப்பினர் டாக்டர் வினோத் பால் தமிழகத்தின் இச்சாதனையை வெகுவாக பாராட்டியது உற்காத்தையும் ஊக்கத்தையும் அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்ததற்கு மத்திய சுகாதார துறை மந்திரி ஜே.பி.நட்டாவை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சந்தித்து நன்றி தெரிவித்தார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியை விரைந்து முடிக்கவும் நட்டாவை கேட்டுக் கொண்டார்.

    ×