search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu Premier League"

    • 20 ஓவர் முடிவில் திண்டுக்கல் அணி 9 விக்கெட்டுக்கு 149 ரன் எடுத்தது.
    • விவேக் நிலைத்து நின்று மட்டையை சுழற்றி தங்கள் அணியின் வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டார்.

    8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் டாப்- 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த நிலையில் நேற்றிரவு நடந்த 6-வது லீக்கில் திண்டுக்கல் டிராகன்ஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் சந்தித்தன. இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த திண்டுக்கல் அணிக்கு திருப்திகரமான தொடக்கம் கிடைக்கவில்லை. ஷிவம் சிங் 2 ரன்னிலும், கேப்டன் ஆர்.அஸ்வின் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த விமல்குமார் (47 ரன்), பாபா இந்திரஜித் (51 ரன், 34 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். பின்வரிசையில் தினேஷ் ராஜ் (20 ரன்) தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்தனர். 20 ஓவர் முடிவில் திண்டுக்கல் அணி 9 விக்கெட்டுக்கு 149 ரன் எடுத்தது.

    அடுத்து களம் இறங்கிய சேலம் அணிக்கு எஸ்.அபிஷேக்கும் (28 ரன்), விக்கெட் கீப்பர் கவினும் (41 ரன்) அதிரடியான தொடக்கம் தந்தனர். இதன் பின்னர் ஆர்.விவேக் நிலைத்து நின்று மட்டையை சுழற்றி தங்கள் அணியின் வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டார்.

    சேலம் அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 150 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விவேக் 51 ரன்களுடன் (28 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார்.

    திண்டுக்கல் சுழல் சூறாவளிகள் ஆர்.அஸ்வினும் (4 ஓவரில் 24 ரன்), வருண் சக்ரவர்த்தியும் (27 ரன்னுக்கு ஒரு விக்கெட்) ரன்வேகத்தை ஓரளவு கட்டுப்படுத்தினாலும், அவர்களால் விக்கெட் வேட்டை நடத்த முடியாமல் போனது பின்னடைவாக அமைந்தது.

    2-வது லீக்கில் ஆடிய சேலத்துக்கு இது முதலாவது வெற்றியாகும். தொடக்க ஆட்டத்தில் மதுரையிடம் தோற்றிருந்தது. திண்டுக்கல் அணிக்கு இது முதலாவது தோல்வியாகும்.

    இன்றைய ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்- திருச்சி கிராண்ட் சோழாஸ் (இரவு 7.15 மணி) அணிகள் மோதுகின்றன.

    • சிறப்பாக விளையாடிய இந்திரஜித் தனது பிறந்தநாளில் அரை சதம் விளாசி அசத்தினர்.
    • சேலம் தரப்பில் சன்னி சந்து, ஹரிஸ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.

    சேலம்:

    8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி திண்டுக்கல் அணியின் தொடக்க வீரர்களாக சிவம் சிங் - அஸ்வின் களமிறங்கினர். சிவம் சிங் 2 ரன்னிலும் அஸ்வின் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனை தொடர்ந்து பாபா இந்திரஜித் - விமல் குமார் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

    அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் விமல் குமார் 47 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய இந்திரஜித் தனது பிறந்தநாளில் அரை சதம் விளாசி அசத்தினர். அவர் 51 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.

    இதனால் திண்டுக்கல் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தனர். சேலம் தரப்பில் சன்னி சந்து, ஹரிஸ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.

    • திண்டுக்கல் தனது தொடக்க ஆட்டத்தில் திருச்சியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
    • சேலம் தனது தொடக்க ஆட்டத்தில் மதுரையிடம் தோற்றது.

    சேலம்:

    8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. திண்டுக்கல் தனது தொடக்க ஆட்டத்தில் திருச்சியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. சேலம் தனது தொடக்க ஆட்டத்தில் மதுரையிடம் தோற்றது. அந்த அணி முதல் வெற்றியை எதிர்நோக்கி இருக்கிறது.

    சேலம் ஸ்பார்டன்ஸ் (பிளேயிங் லெவன்):

    எஸ் அபிஷிக், ஆர் கவின், முஹம்மது அட்னான் கான், ஆஷிக் ஸ்ரீனிவாஸ், கே விஷால் வைத்யா, ஷிஜித் சந்திரன்(சி), சன்னி சந்து, ராஜேந்திரன் விவேக், எஸ் ஹரிஷ் குமார், எம் பொய்யாமொழி, என் செல்வ குமரன்

    திண்டுக்கல் டிராகன்ஸ் (பிளேயிங் லெவன்):

    சிவம் சிங், ரவிச்சந்திரன் அஷ்வின்(கேட்ச்), விமல் குமார், பாபா இந்திரஜித்(வ), பூபதி குமார், சி சரத்குமார், எஸ்.தினேஷ் ராஜ், ஜி.கிஷூர், வருண் சக்ரவர்த்தி, பி.விக்னேஷ், வி.பி.திரன்

    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் திண்டுக்கல் அணிக்கு மதுரை பாந்தர்ஸ் 170 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. #TNPL #SMPvDD
    தழிழ்நாடு பிரீமியர் லீக்கின் 3-வது சீசன் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று 2-வது ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கேதிராக சீசெம் மதுரை பாந்தர்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி மதுரை அணியின் அருண் கார்த்திக், ரோகித் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரோகித் 16 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தலைவன் சற்குணம் 26 ரன்கள் சேர்த்தார். தொடக்க வீரர் அருண் கார்த்திக் 44 பந்தில் 61 ரன்கள் எடுத்தார்.



    ஷிஜித் சந்திரன் 20 பந்தில் 35 ரன்கள் சேர்க்க மதுரை பாந்தர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்தது. இதனால் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் வெற்றிக்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. திண்டுக்கல் அணியில் அஸ்வின் 4 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் அனில் கும்ப்ளே கண்டுபிடித்துள்ள தொழில்நுட்பம் டிஎன்பிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. #TNPL
    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் அனில் கும்ப்ளே. இவர் ஐசிசியின் டெக்னிக்கல் குழுவில் முன்னணி அதிகாரியாக விளங்குகிறார். இவர் ஒரு பேட்ஸ்மேனின் குறித்து முழுமையாக ஆராய்வதற்கான ஒரு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார்.

    ஸ்பெக்டாகாம் (Spektacom) என்று அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பம் ஸமார்ட் ஸ்டிக்கர் மூலம் ஆபரேட் செய்யப்படும். இதை பேட்ஸ்மேன்களில் பேட்டில் ஒட்டினால், பேட் ஸ்மார்ட் பேட்டாக மாறிவிடும். பேட்டிங் செய்யும்போது பேட் எத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் சுழற்றப்படுகிறது. பேட்ஸ்மேன் எவ்வளவு பவர் கொடுக்கிறார், பேட்டின் ஸ்வீட் பகுதியில் பந்து படுகிறதா? என்பதை துள்ளியமாக ஆராயும்.



    இந்த தொழில்நுட்பம் முதன்முறையாக தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் தமிழ்நாடு பிரீமியர் லீக் 3 சீசனில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதுகுறித்து கும்ப்ளே கூறுகையில் ‘‘தொடரில் அறிமுகப்படுத்தும் வாய்ப்பு கொடுத்த தமிழ்நாடு பிரீமியர் லீக்கிற்கு எனது நன்றி. சென்சார் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த டெக்கானாலாஜி ஸ்மார்ட் ஸ்டிக்கருடன் செயல்படும். இந்த ஸ்டிக்கரை பேட்டில் ஒருமுறை ஒட்டிவிட்டால், பின்னர் பேட் ஸ்மார்ட் பேட்டாக மாறிவிடும்’’ என்றார்.

    தமிழ்நாடு பிரீமியர் லீக் ஜூலை 11-ந்தேதி முதல் ஆகஸ்ட் 12-ந்தேதி வரை நடக்கிறது.
    தமிழகத்தில் டி.என்.பி.எல். கிரிக்கெட்டுக்கு இளைஞர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளதாக வீரர்கள் சதீஷ், ஜெகதீசன் ஆகியோர் தெரிவித்தனர். #TNPL #CSG

    திருச்சி:

    தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் (டி.என்.பி.எல்.) 3-வது சீசன் அடுத்த (ஜூலை) மாதம் 11-ந்தேதி திருநெல்வேலியில் தொடங்குகிறது.

    இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் ‘சேப்பாக் சூப்பர் கில்லீஸ்’ மற்றும் ஐட்ரீம் காரைக்குடி காளை, சீசெம் மதுரை பாந்தர்ஸ், தூத்துக்குடி ஜோன்ஸ் டூட்டி பேட்ரியாட் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.

    மொத்தம் 32 போட்டிகள் நடக்கிறது. தொடர்ந்து 33 நாட்கள் நடைபெறும் போட்டித்தொடர் ஆகஸ்டு மாதம் 12-ந்தேதி சென்னையில் நடக்கும் இறுதி போட்டியுடன் நிறைவடைகிறது.

    இந்த போட்டிகள் நெல்லை மாவட்டம் சங்கர்நகர் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன மைதானம், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என். பி.ஆர். கல்லூரி மைதானம், சென்னை சேப்பாக்கம் எம். ஏ.சிதம்பரம் மைதானம் என 3 இடங்களில் நடத்தப்படுகிறது. நெல்லை, நத்தம் ஆகிய 2 மைதானங்களில் தலா 14 போட்டிகளும், சென்னையில் 4 போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.

    கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாக ஐ.பி.எல். மற்றும் டி.என்.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் சதீஷ், ஜெகதீசன் ஆகியோர் நேற்று இரவு திருச்சியில் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) கிரிக்கெட் 3-வது சீசன் வருகிற ஜூலை 11-ந்தேதி தொடங்குகிறது. இந்திய அளவில், கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்தவர்களுக்கு, கடந்த 2 ஆண்டுகளாக டி..என்.பி.எல். கிரிக்கெட் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு வருவதால் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.

    இது கிராமப்புற இளைஞர்களை கிரிக்கெட் விளையாடுவதில் ஊக்கப்படுத்துவதாக அமைந்துள்ளது. கிராமங்களில் பொழுதுபோக்கிற்காக கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் இன்று கிரிக்கெட்டை தொழில் நுட்பத்துடன் பேச தொடங்கி இருக்கிறார்கள்.

    இது, கிரிக்கெட் குறித்து அறிவை வளர்க்கும் வகையில் அமைந்துள்ளது. டி.என்.பி.எல். கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பான வெற்றியை அடைந்துள்ளது. அதேபோன்று 3-வது சீசனிலும் நல்ல வரவேற்பை பெறும் என நம்புகிறோம்.

    டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய பல வீரர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இடம் பெற்றுள்ளனர். நாங்களும் அதேபோலத்தான் இடம் பெற்றோம். இளைஞர்கள் கிரிக்கெட்டில் தங்களது திறமைகளை வளர்த்து கொள்ள டி.என்.பி.எல். அடிப்படையாக இருக்கிறது. டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் ஆட தகுதியானவர்கள் தற்போது அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    மேலும் வீரர்கள் சதீஷ், ஜெகதீசன் ஆகியோர் கிரிக்கெட் விளையாட்டில் தங்களது அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் மற்றும் டி.என்.பி.எல். முதன்மை அதிகாரி பிரசன்னா கண்ணன், செய்தி தொடர்பாளர் டாக்டர் ஆர்.என்.பாபா, திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் கே.ஜி.முரளிதரன், செயலாளர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #TNPL #CSG

    ‘சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு சிறந்த வீரர்களை தேர்வு செய்து இருக்கிறோம்’ என்று அந்த அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன் தெரிவித்தார். #TNPL #ChepaukSuperGillies
    சென்னை:

    தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான அணி வீரர்கள் தேர்வுக்கு பிறகு, நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன் நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்து கூறியதாவது:-

    நாங்கள் ஒரு நேர்த்தியான வியூகத்துடன் தான் வீரர்கள் தேர்வுக்கு போனோம். கடந்த வருடங்களை போல் நிறைய ஆல்-ரவுண்டர்களை அணிக்கு எடுக்க திட்டமிட்டு இருந்தோம். அது மாதிரி தான் வீரர்களை தேர்வு செய்து இருக்கிறோம். அணிக்கு எந்த மாதிரியான வீரர்கள் தேவையோ? அதற்கு தகுந்தபடி எடுத்து இருக்கிறோம். ஒரு சிறப்பான அணியை தேர்வு செய்துள்ளோம். நாங்கள் நடப்பு சாம்பியன் என்பதால் கடந்த ஆண்டு அணியில் இடம் பிடித்த வீரர்களை தக்க வைக்க வேண்டும் என்று நினைத்தோம். தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டி விதிமுறையில் மாற்றம் செய்ததால் எங்களால் வீரர்களை முழுமையாக தக்க வைக்க முடியாமல் போய்விட்டது. இந்த விதிமுறை மாற்றத்தால் அணிகள் இடையிலான போட்டி மேலும் வலுப்பெறும்.

    தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டி வணிகரீதியாக 2 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நிலையில் தான் இருக்கிறது. வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் வீரர்களை வாங்க அனுமதித்தால் இந்த போட்டி மேலும் முன்னேற்றம் காணும் என்று எதிர்பார்க்கிறேன். தற்போதைய வீரர்கள் தேர்வு நடைமுறையில் வீரர்களை தேர்வு செய்வது என்பது சற்று கடினமானது. குறிப்பிட்ட ஒரு வீரரை எடுக்க நினைத்தால் முடியாது. இருப்பினும் இது தான் தமிழ்நாட்டின் தலைசிறந்த கிரிக்கெட் லீக் போட்டியாகும்.

    கடந்த ஆண்டில் எங்கள் அணிக்காக விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். அதேநேரத்தில் கடந்த ஆண்டில் இடம்பெற்ற எல்லா வீரர்களையும் மீண்டும் அணியில் சேர்க்க முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. வீரர்கள் தேர்வு செய்யும் முறையில் மாற்றம் செய்தால் நன்றாக இருக்கும். ஐ.பி.எல். போல் வீரர்களை ஏலத்தில் எடுக்கவோ? அல்லது இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் லீக் கால்பந்து ஆட்டங்களில் உள்ளது போல், வீரர்களை அணிகள் நேரடியாக ஒப்பந்தம் செய்யவோ? அனுமதித்தால் நன்றாக இருக்கும். அப்படி செய்தால், ஒரு உரிமையாளராக மட்டுமின்றி ஒரு வீரரின் மனநிலையில் இருந்து பார்த்தால் கூட ஒரு வீரர் தான் விரும்பிய அணியில் விளையாட முடியும். சில அணிகளின் உரிமையாளர்கள் மாறி இருப்பது பிரச்சினை இல்லை. எங்கள் அணி தொடரும். விஜய் சங்கர், இந்தியா ‘ஏ’ அணியில் இடம் பிடித்து இருப்பதால் அவர் போட்டியில் இரண்டாம் பாதியில் தான் விளையாடுவார். அவர் இல்லாத நேரத்தில் கோபிநாத் கேப்டனாக இருப்பார்.

    இவ்வாறு பா.சிவந்தி ஆதித்தன் கூறினார். #TNPL #ChepaukSuperGillies
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் எஸ் பத்ரிநாத் காரைக்குடி காளை அணியின் பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார். #TNPL #KaraikudiKaalai
    தமிழ்நாடு பிரீமியர் லீக் இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்துவிட்டு 3-வது சீசனுக்கு தயாராகியுள்ளது. 3-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் இன்று நடைபெற்றது. இந்நிலையில் காரைக்குடி காளை அணியின் பயிற்சியாளராக எஸ் பத்ரிநாத் செயல்பட இருக்கிறார்.

    பத்ரிநாத் இந்திய அணிக்காகவும், நீண்ட காலம் தமிழ்நாடு அணிக்காகவும் விளையாடியவர். காரைக்குரை காளை அணியின் தலைமை பயிற்சியாளராக தமிழ்நாட்டின் முன்னாள் வீரரான பிசி பிரகாஷ் உள்ளார். அவருக்கு உதவியாளராக செயல்பட இருக்கிறார்.



    பத்ரிநாத் இந்திய அணிக்காக 2 டெஸ்ட், 7 ஒருநாள் மற்றும் ஒரெயொரு டி20 போட்டியில் விளையாடியுள்ளார். 145 முதல்தர போட்டிகளில் விளையாடி 32 சதம், 45 அரைசதங்களுடன் 10245 ரன்கள் அடித்துள்ளார்.
    தமிழ்நாடு பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் 3-வது சீசனுக்கான வீரர்கள் தேர்வு சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடக்கிறது.#TNPL
    சென்னை:

    கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாடு பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டுக்கான 3-வது தமிழ்நாடு பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூலை 11-ந் தேதி தொடங்குகிறது.

    இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டூட்டி பேட்ரியாட்ஸ், கோவை கிங்ஸ், மதுரை பேந்தர்ஸ், திருச்சி வாரியர்ஸ், காஞ்சி வீரன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன.

    3-வது சீசனுக்கான வீரர்கள் தேர்வு சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு தொடங்கி நடக்கிறது. இந்த போட்டிக்காக மொத்தம் 772 வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து இருக்கிறார்கள். இதில் இருந்து 8 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்யும். வீரர்கள் தேர்வு நிகழ்ச்சியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் எல்.சிவராமகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார்.



    ஒவ்வொரு அணியும் ஏற்கனவே 3 வீரர்களை தக்க வைத்து இருக்கின்றன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி எஸ்.கார்த்திக், ஆர்.அலெக்சாண்டர், சசிதேவ் ஆகிய வீரர்களை தக்க வைத்துள்ளது. ஒவ்வொரு அணியும் தலா 18 முதல் 19 வீரர்களை எடுக்கலாம். அவர்களில் 2 பேர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களாகவும், மூன்று பேர் 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களாகவும் இருக்க வேண்டியது கட்டாயமாகும்.

    வீரர்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி’ என மூன்று விதமாக பிரிக்கப்பட்டுள்ளனர். ‘ஏ’ பிரிவு வீரர்களின் விலை ரூ.5 லட்சம், ரூ.4 லட்சம், ரூ.3 லட்சம் எனவும், ‘பி’ பிரிவு வீரர்களின் விலை ரூ.2½ லட்சம், ரூ.2 லட்சம், ரூ.1½ லட்சம் எனவும், ‘சி’ பிரிவு வீரர்களின் விலை ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #TNPL 
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 3-வது சீசன் ஜூலை மாதம் 11-ந்தேதி தொடங்கும் என்றும், வீரர்கள் ஏலம் 31-ல் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளன. #TNPL
    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கடந்த 2016-ம் ஆண்டு தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரை அறிமுகப்படுத்தியது. இதை ஸ்டார் கிரிக்கெட் ஒளிப்பரப்பு செய்தது. தமிழ்நாடு வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த லீக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 2016 மற்றும் 2017-ல் வெற்றிகரமாக லீக் நடைபெற்றது. 2016-ல் தூத்துக்குடி அணியும், 2017-ல் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியும் கோப்பையை கைப்பற்றியது.

    இந்த இரண்டு வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் பங்கேற்காததால், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இந்த தொடரை நடத்தியது என்று பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் ஜூலை 11-ந்தேதி 3-வது சீசன் தொடங்கும் என தமிழ்நாடு பிரீமியர் லீக் அதிகாரி தெரிவித்ததாக ஆங்கில இணைய தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.



    மேலும் அந்த செய்தியில் தமிழ்நாடு பிரீமியர் லீக் வீரர்களுக்கான ஏலம் மே 31-ந்தேதி, சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெறும் எனவும், 794 வீரர்கள் பதிவு செய்துள்ளதாகவும், தொடருக்கான முழுஅட்டவணையை தயாரிப்பதற்காக போட்டியை ஒளிபரப்பும் நிறுவனத்துடன் பேசிக் கொண்டிருப்பதாவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஏலத்தில் பங்கேற்கும் அணிகள் தேசிய அணிக்காக விளையாடிய எந்தவொரு வீரர்களையும் (Capped Players) தக்கவைக்க முடியாது என்றும், முதல் இரண்டு சுற்றில் எந்தவொரு வீரரையும் ஏலம் எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×