search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamilisai Soundarrajan"

    • வி.சி.க. சார்பில் அக்டோபர் 2-ம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது.
    • இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அதிமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க வரலாம் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். மேலும், இந்த மாநாட்டில் பங்குபெற அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தார்.

    திருமாவளவன் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னை காலடிப்பேட்டையில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அன்ன தானம் வழங்கும் விழாவில் பங்கேற்றார். அதன்பின், செய்தியாளர்களிடம் தமிழிசை பேசியதாவது:

    மத்திய நிதி மந்திரி, ஜனாதிபதி என பெண்களுக்கு பல இடங்களில் பா.ஜ.க. முன்னுரிமை அளித்து வருகிறது. இங்குள்ள பெண்கள் சமையலறையில் இருக்கிறார்கள் என ராகுல் காந்தி பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறோம். ராகுல் காந்தி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

    திருமாவளவன் மதுவைப் பற்றி பேசும்போது ஏன் மதத்தைப் பற்றி பேசவேண்டும். திமுக கூட்டணியில் இருந்தால் 2026-ம் ஆண்டு வெற்றி கிடைக்காது என்பதை திருமாவளவன் புரிந்துகொண்டு விட்டார்.

    திருமாவளவன் நடத்தப் போகும் மாநாடு மதுவுக்கு எதிரான மாநாடா? அல்லது கூட்டணிக்கு எதிரான மாநாடா? என்பது புரியவில்லை. தி.மு.க.வில் இருக்கும் கூட்டணி கட்சிகள் தி.மு.க.வின் மீது உள்ள நம்பிக்கையை இழந்துவிட்டார்கள்.

    தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என கூறியது தவறு. தேசிய கல்விக் கொள்கையில் அப்பட்டமான அரசியலை ஸ்டாலின் அரசு செய்து வருகிறது என தெரிவித்தார்.

    தமிழிசை சவுந்தரராஜனைப் பார்த்து பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட சோபியா கைது செய்யப்பட்டது குறித்து பேசிய பாரதிராஜா, அவளை அழைத்து உங்கள் பக்கம் ஞாயங்களை கூறி அவளை சமாதானப்படுத்தியிருக்க வேண்டும் என்றார். #Sophia
    தமிழிசை சவுந்தரராஜனைப் பார்த்து பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட சோபியா கைது செய்யப்பட்டது குறித்து இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள ஆடியோவில் கூறியிருப்பதாவது,

    என் இனிய சகோதரி தமிழிசைக்கு பாசத்துடன் பாரதிராஜா,

    நீங்கள் தமிழகத்தின் பாஜ கட்சியில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறீர்கள். நாங்கள் எல்லாம் மிகப்பெரிய மதிப்புமிக்க இலக்கியவாதியாக தேசிய சிந்தனையுள்ள குமரி ஆனந்தன் அவரின் புதல்வி என்பதிலும், ஒரு தமிழச்சி என்ற வகையிலும் உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம். நீங்கள் பொதுவாழ்வில் ஈடுபடும்போது, எதையும் நீங்கள் பெருந்தன்மையுடன் எடுத்துக்கொள்ள வேண்டும். நான் கூட பல இடங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கிறேன். நமக்கு எதிரி என்று நாம் சிலரை நினைப்போம். நம்மை எதிரி என்று சிலர் நினைப்பார்கள். யாரும் யாருக்கும் எதிரியல்ல, கருத்து வேறுபாடு. ஜனநாயக அரசில் கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் உள்ளது. உங்கள் விமான பயணத்தில் உங்களுடன் பயணித்த சோபியா, தாய் மண்ணை விட்டு பிரிந்து வாழ்வியலுக்காக கனடா சென்று தான் பிறந்த மண்ணின் மானத்தையும் காத்து, புகுந்த மண்ணின் பெருமையையும் காத்தவள் சோபியா. 



    சமீபத்தில் நடந்த தூத்துக்குடி சம்பவம் அவளை தான் பிறந்த மண்ணில் எவ்வளவு பாதித்திருக்க வேண்டும் என்ற வேதனையில், உரிமையில் அவர் ஒரு வீர தமிழச்சியாக தமிழிசைக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார். நீங்கள் உங்கள் தகுதிக்கு, அவளை அழைத்து உங்கள் பக்கம் ஞாயங்களை கூறி அவளை சமாதானப்படுத்தி விளக்கம் கொடுத்திருக்க வேண்டும் அல்லவா. அந்த வீரமுள்ள தமிழச்சி புகார் கொடுத்து அவளை கைது செய்து உள்ளே தள்ள வேண்டும் என்பது எவ்வுளவு அநாகரிகமான விஷயம். அந்த பெண்ணை பற்றிய முறையீட்டு வழக்கை வாபஸ் பெற்று அந்த வீரமுள்ள தமிழச்சியை விடுதலை பெறச் செய்யுங்கள். இல்லையென்றால் வரலாறு உங்களை மன்னிக்காது. #BJP #TamilisaiSoundararajan #Sophia

    பாரதிராஜா பேசிய வீடியோ கேட்க:

    ×