search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamilnadu railway station"

    வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். #SriLankaAttacks #ChennaiRailway #DGPSylendraBabu
    சென்னை:

    இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 250-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகினர். இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள ரெயில் நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. எனவே ரெயில் நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று சென்னையில் ரெயில்வே டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 24 மணி நேரமும் ரெயில்வே பாதுகாப்பு படையினருடன் இணைந்து தமிழக ரெயில்வே போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய ரெயில் நிலையங்களில் டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன், சென்னை ரெயில்வே எஸ்.பி. ரோகித்நாதன், திருச்சி ரெயில்வே எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர் ஆகியோர் மேற்பார்வையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை எம்.ஜி.ஆர். மத்திய ரெயில் நிலையம், எழும்பூர், மதுரை, நெல்லை, கோவை ரெயில் நிலையங்களில் பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். சந்தேகப்படும்படியான பொருட்கள் கிடந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் அளிக்கும்படி பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #SriLankaAttacks #ChennaiRailway #DGPSylendraBabu
    ×