என் மலர்
நீங்கள் தேடியது "TamilNadu schools"
- தமிழகத்தில் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி உள்ளனர் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
- மாணவர்களுக்கு கற்கும் திறன் இல்லை என்றாலும் பட்டம் வழங்கப்படுவதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற 'எண்ணி துணிக' நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல் நடத்தினார்.
பின்னர் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் தரம் குறைந்துவிட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், "தமிழகத்தில் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி உள்ளனர் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
கஞ்சா மட்டுமின்றி, ஹெராயின், பெத்தபெட்டமைன் பயன்பாடு அரசுப் பள்ளிகளில் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனால், தமிழகத்தில் மாணவர்களின் கல்வி கற்கும் திறனும் குறைந்து விட்டதாகவும், கற்கும் திறன் இல்லை என்றாலும் பட்டம் வழங்கப்படுவதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
அரசு பள்ளிகளன் தரம் குறைந்து 70 சதவீத மாணவர்களால் எண்களையும், 40 சதவீத மாணவர்களால் எழுத்துகளையும் படிக்க முடியவில்லை" என்றார்.
- 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், தோல்வி அடைந்தவர்களாகவே கருதப்படுவார்கள்.
- குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஃபெயில் ஆக்க கூடாது என்கிற கொள்கை ரத்து செய்வதாக மத்திய கல்வித்துறைச் செயலாளர் சஞ்சய் குமார் அறிவித்தார்.
இதுகுறித்து மேலும் கூறிய அவர், " 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஃபெயில் ஆக்க கூடாது என்கிற கொள்கை ரத்து செய்யப்படுகிறது.
தோல்வி அடைந்த மாணவர்களுக்கு இரண்டு மாதங்களுக்குள் மறு தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். அதிலும், மீண்டும் தோல்வி அடைந்தால், அடுத்த வகுப்பிற்கு ப்ரோமோட் செய்யப்பட மாட்டார்கள்.
5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், தோல்வி அடைந்தவர்களாகவே கருதப்படுவார்கள்.
குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது" என்றார்.
இதனால், தமிழகத்தில் தொடர்ந்து வரும் தேர்ச்சி முறை குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், " தமிழகத்தில் பள்ளிகளில் தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் இல்லை.
5ம், 8ம் வகுப்பு தேர்ச்சி தொடர்பாக தமிழகத்தில் தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும்.
மாணவர்கள் மகிழ்ச்சி, பாதுகாப்போடு கல்வி கற்க உகந்த சூழல்தான் முக்கியம்.
ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் தடையின்றி 8ம் வகுப்பு வரை கல்வி பெறுவதில் மத்திய அரசு பெரிய தடை கல்லை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கை தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசு பள்ளிகளை தவிர மற்ற பள்ளிகளுக்கு பொருந்தாது.
தமிழகத்தில் உள்ள மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மத்திய அரசின் கல்வி உரிமை சட்ட விதிகள் குறித்து குழப்பம் அடைய தேவையில்லை.
கல்வி உரிமை சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்கள் உண்மையிலேயே வருந்தத்தக்கது" என்றார்.