என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "TanuShree Dutta"
- தமிழில் 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் தனுஸ்ரீ தத்தா நடித்துள்ளார்.
- இந்தி நடிகர் நானா படேகர் மீது தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் அளித்திருந்தார்.
கடந்த 2017-ம் ஆண்டு பிரபல நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் அத்துமீறல் செய்யப்பட்டார். இந்த சம்பவம் திரையுலகினரை அதிர வைத்தது. பின்னர் நடத்திய விசாரணையில் நடிகர் திலீப் தூண்டுதலின் பேரில் இந்த பலாத்கார சம்பவம் நடந்தது என்று தகவல் வெளியானது.
இதனை தொடர்ந்து கேரள நடிகைகள் மற்றும் சினிமா பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சனைகள் குறித்து விசாரித்து அறிக்கை வழங்க வேண்டும் என நீதிபதி ஹேமா தலைமையிலான கமிஷன் ஒன்றை கேரள அரசு நியமித்தது.
இந்த கமிஷன் கடந்த 2019-ம் ஆண்டே அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. ஆனால் அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது. இதற்கு மலையாள சினிமா உலகில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் 4½ ஆண்டுகளுக்கு பிறகு 233 பக்கங்கள் கொண்ட ஹேமா கமிஷன் அறிக்கையை கேரள அரசு நேற்று வெளியிட்டுள்ளது.
கிட்டத்தட்ட 51 பேரின் வாக்குமூலத்தின்படி இந்த அறிக்கை தயாரானது. அதே சமயத்தில் மொத்த மலையாள திரையுலகமும் 15 ஆண் பிரபலங்களின் பிடியில் உள்ளது என்றும், பல நடிகைகள் ஓட்டலில் தனி அறையில் தங்கியிருக்க அஞ்சியதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வெளியானது மலையாள திரையுலகில் புயலை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், ஹேமா கமிட்டியின் அறிக்கையால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை என்று பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், "2017-ல் நடந்த ஒரு விஷயத்தை பற்றி அறிக்கை தயாரிக்க அவர்களுக்கு 7 வருடங்கள் தேவைப்பட்டனவா? இந்தப் புதிய அறிக்கையினால் என்ன பயன்? அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்து சட்டத்தின்முன் தண்டிப்பதுதான்.
விசாகா கமிட்டியை பற்றி கேள்விப்பட்ட ஞாபகம் இருக்கிறது. பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலை தடுப்பதற்காக பக்கம் பக்கமாக பல வழிகாட்டுதல்களை முன்வைத்தது. அதன் பிறகு என்ன நடந்தது? கமிட்டிகள் பெயர் மட்டும் தான் மாறிக்கொண்டே இருக்கிறது.
இந்தக் கமிட்டிகளைப் பற்றி எனக்குக் கவலையில்லை. இந்த அறிக்கைகள் மற்றும் கமிட்டிகள் நமது நேரத்தை தான் வீணடிக்கிறது. பாதுகாப்பான பணியிடம் என்பது ஒரு பெண்ணுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை உரிமையாகும்.
பெண்களை கண்ணியமாக நடத்த வேண்டும். மக்கள் நடிகைகளை மனிதர்களாகப் பார்க்கவில்லை. எங்களை ராணிகளைப் போல நடத்த வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. கண்ணியத்துடன் நடத்தப்படுவதற்கான உரிமையும் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையும் எங்களுக்கு உள்ளது" என்று தெரிவித்தார்.
தமிழில் 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் நடித்துள்ள இந்தி நடிகையான தனுஸ்ரீ தத்தா, தமிழில் பொம்மலாட்டம், காலா படங்களில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறினார். "2008-ம் ஆண்டு ஹார்ன் ஓகே ப்ளஸ் என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பில் நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தனுஸ்ரீ தத்தா தமிழில் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்துள்ளார்.
- இவரின் சமூக வலைதளப் பதிவு வைரலாகி வருகிறது.
தமிழில் 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் நடித்துள்ள இந்தி நடிகையான தனுஸ்ரீ தத்தா, தமிழில் பொம்மலாட்டம், காலா படங்களில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறினார். "2008-ம் ஆண்டு ஹார்ன் ஓகே ப்ளஸ் என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பில் நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று மும்பை போலீசில் புகார் அளித்தார்.
தனுஸ்ரீ தத்தா பதிவு
இந்நிலையில், நடிகை தனுஸ்ரீ தத்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில், "தனக்கு ஏதாவது ஆனால், மீடூ விவகாரத்தில் தான் குற்றம் சாட்டிய நடிகர் நானா படேகர், அவரின் வழக்கறிஞர் மற்றும் அவரது பாலிவுட் மாஃபியா நண்பர்கள்தான் அதற்கு காரணம்.
இந்த பாலிவுட் மாஃபியா என்பது சுஷாந்த் சிங் ராஜ்புத் (SSR) மரண வழக்கில் அடிக்கடி அடிபட்டு வந்த அதே நபர்கள்தான் அவர்களின் திரைப்படங்களைப் பார்க்காதீர்கள். சட்டமும் நீதியும் என்னை தோற்கடித்திருக்கலாம். ஆனால் இந்த தேசத்தின் மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
சினிமாவில் நடக்கும் பாலியல் தொல்லைகளை நடிகைகள் உரக்க பேச ஆரம்பித்து உள்ளனர். படுக்கைக்கு அழைத்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களை வெளியிட்டு ஸ்ரீரெட்டி திரையுலகை கதிகலங்க வைத்தார். இப்போது தனுஸ்ரீதத்தாவும் பாலியல் ஆசாமிகளுக்கு எதிராக மல்லுக்கட்டி இருக்கிறார். இவர் தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.
காலா படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்தவர் நானா படேகர். பாலிவுட்டில் பிரபலமான நடிகரான இவர் மூன்று முறை தேசிய விருதை வென்றவர் இவர் மீது, பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் குற்றச்சாட்டை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அவர் கூறியதாவது,
கடந்த 2008-ஆம் ஆண்டு 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்ற படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்படும் போது, தகாத இடங்களில் கை வைத்து தனக்கு பாலியல் தொந்தரவு அளித்தார்.
ஹீரோயின் மட்டுமே இடம்பெறக்கூடிய அந்த பாடலில் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்த நானா படேகரை நான் கண்டித்த போது, தனக்கு பிடித்ததை நான் செய்வேன் என்னை யாரும் தட்டிக் கேட்க முடியாது என்று சத்தமாக கூறினார்.
இந்நிலையில், மும்பை ஒஷிவாரா காவல் நிலையத்திற்கு இன்று வந்த தனுஸ்ரீ தத்தா, நடிகர் நான படேகர் மீது புகார் அளித்தார், மேலும் கனேஷ் ஆச்சார்யா என்பவர் மீதும் அவர் புகார் அளித்துள்ளார். அவரது புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் நானா படேகர் மற்றும் கனேஷ் ஆச்சார்யா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். #TanushreeDutta #NanaPatekar
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்