என் மலர்
நீங்கள் தேடியது "tanya hope"
- தடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தன்யா ஹோப்.
- இவர் ’கிக்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
தடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தன்யா ஹோப். அடுத்ததாக 'தாராளபிரபு' என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான 'கிக்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை தன்யா ஹோப் தன் உதட்டு அறுவை சிகிச்சை குறித்து மனம் திறந்துள்ளார். அதில், "நான் முதன் முதலாக காமெடி படத்தில் நடித்துள்ளேன். 'கிக்' படத்தில் ரசிகர்களின் வரவேற்பு எப்படி உள்ளது என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன். படம் முழுவதும் சந்தானத்துடன் ரொமான்ஸ் காட்சிகள் மற்றும் பல காட்சிகளில் நடித்துள்ளேன்.

என்னிடம் உங்கள் உதடு எப்படி பெரிதாக உள்ளது. அறுவை சிகிச்சை செய்தீர்களா? என்று கேட்கிறார்கள். நான் உதட்டை அறுவை சிகிச்சை எதுவும் செய்யவில்லை. இயற்கையாகவே என் உதடு இப்படிதான் உள்ளது. இந்தியர்களுக்கு உதடுகள் பெரிதாக இருந்த போதும் என்னிடம் மட்டும் ஏன் இப்படி கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. சென்னையில் இ.சி.ஆர். சாலை எனக்கு பிடித்த இடம். ஸ்கை டைவிங் செய்வது ரொம்ப பிடிக்கும்" என்று கூறினார்.
- நடிகை தன்யா ஹோப், சந்தானத்திற்கு ஜோடியாக கிக் படத்தில் நடித்துள்ளார்.
- இவர் நடிப்பில் தற்போது வெப்பன் திரைப்படம் வெளியாக உள்ளது.
தடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தன்யா ஹோப். இப்படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக தாராள பிரபு படத்திலும், சந்தானத்திற்கு ஜோடியாக கிக் படத்திலும் நடித்திருந்தார். இவர் நடிப்பில் தற்போது வெப்பன் திரைப்படம் வெளியாக உள்ளது.

திரைப்படங்களில் நடித்து வந்த தான்யா ஹோப் தற்போது 'லேபிள்' என்னும் வெப் தொடரில் நடித்திருக்கிறார். ஜெய் கதாநாயகனாக நடித்துள்ள இந்த வெப் தொடரை அருண்ராஜா காமராஜ் எழுதி இயக்கி உள்ளார். மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள்.

இதன் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த வெப் தொடர் விரைவில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.



Happy Republic Day! With all ur blessings #Thadam from February 22nd..🙏 #InvestigativeThriller#TTcombo#BasedOnTrueEvents#ThadamFromFeb22nd#SundarArumugam@inder3kumar#MagizhThirumeni@gopinathdop@arunrajmusic@saregamaglobal@onlynikil@silvastunt@soniya_agg@iYogiBabupic.twitter.com/aDnlpTAqZ2
— ArunVijay (@arunvijayno1) January 26, 2019