என் மலர்
நீங்கள் தேடியது "Taran"
மெட்ரோ படத்தின் மூலம் அறிமுகமான சிரிஷ் நடிப்பில் உருவாகி வரும் பிஸ்தா படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. #Pistha #Shirish
மெட்ரோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் சிரிஷ். அவரது நடிப்பில் அடுத்ததாக ராஜா ரங்குஸ்கி ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. அதேநேரத்தில் சிரிஷ் நடிப்பில் உருவாகி வந்த பிஸ்தா படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.
கிராமப் பின்னணியில் காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை எடிட்டர் ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிரிஷ் ஜோடியாக ம்ரிதுல்லா முரளி, சைத்தான் படத்தில் நடித்த அருந்ததி நாயர் நாயகிகளாக நடித்துள்ளனர். செந்தில், சதிஷ், யோகி பாபு மற்றும் சென்ராயன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கும்பகோணம் மற்றும் காரைக்குடி பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு தரன் இசையமைக்கிறார். இது தரனின் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. #Pistha #Shirish