என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tax fraud
நீங்கள் தேடியது "tax fraud"
வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக போர்ச்சுகல் கால்பந்து அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ரூ.154 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #CristianoRonaldo #TaxFraud #Football
மாட்ரிட்:
போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது இத்தாலியில் உள்ள யுவென்டஸ் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். முன்னதாக அவர் 9 ஆண்டுகளாக ஸ்பெயினில் உள்ள ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக விளையாடினார். 2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடுகையில் கிடைத்த வருமானத்தை குறைத்து காட்டி ரூ.46 கோடிக்கு வருமான வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மாட்ரிட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் போது ரொனால்டோ வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையொட்டி மாட்ரிட் கோர்ட்டில் நேரில் ஆஜரான கிறிஸ்டியானோ ரொனால்டோ அபராத தொகையை கட்ட சம்மதம் தெரிவித்தார். இதனை அடுத்து நீதிபதி, கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ரூ.154 கோடி அபராதமும், 23 மாதம் ஜெயில் தண்டனையும் விதித்தார். ஸ்பெயின் நாட்டு சட்டப்படி முதல்முறையாக ஒருவருக்கு 2 ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை விதிக்கப்பட்டால் அவர் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டியதில்லை. இதனால் கிறிஸ்டியானோ ரொனால்டோ சிறை தண்டனையில் இருந்து தப்பினார். #CristianoRonaldo #TaxFraud #Football

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பதவிக்கே உலை வைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட வழக்கில் அவரது முன்னாள் உதவியாளர் பால் மானபோர்ட் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. #PaulManafort #Trump
வாஷிங்டன்:
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிக்கு ரஷிய உளவுத்துறை உதவியதாக எழுந்த புகார் தொடர்பாக எப்பிஐ அதிகாரி முல்லர் தலைமையிலான குழு விசாரித்து வருகிறது.
இதற்கிடையே, கடந்தாண்டு அதிபர் டிரம்பின் பிரசார குழு தலைவராக இருந்த பால் மனாபோர்ட், உதவியாளர் ரிக் கேட்ஸ் ஆகியோர் உக்ரைனைச் சேர்ந்த அரசியல்வாதி விக்டர் யானுகோவிச், அவரது ரஷ்ய ஆதரவு அரசியல் கட்சியிடமிருந்து பல மில்லியன் டாலர் நிதி திரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நிதிமோசடி, வங்கி மோசடி, வெளிநாட்டு வங்கிக்கணக்குகளை மறைத்தது உட்பட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதனை அடுத்து, தலா 5 மில்லியன் டாலர் ஜாமீனில் அவர்களை விடுவித்த நீதிமன்றம் வீட்டுக்காவலில் வைத்தது.
விர்ஜீனியா மாகாணத்தின் அலெக்ஸாண்ட்ரா கோர்ட்டில் நடந்து வந்த பால் மனாபோர்ட் மீதான வங்கி, வரி மோசடி வழக்குகள் மீதான விசாரணை முடிந்ததை அடுத்து, 8 வழக்குகளில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது அதிபர் தேர்தலில் ரஷிய தலையீடு தொடர்பாக விசாரித்து வரும் முல்லர் குழுவுக்கு கிடைத்த முன்னேற்றமாக கருதப்படுகிறது.
மேலும், மானபோர்ட் மீதான மற்ற 10 வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட வழக்குகளில் குறைந்தது 80 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.
டிரம்ப் உடன் கோஹன்
இந்த தீர்ப்பு டிரம்ப் தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த அதிர்ச்சி அவருக்கு தீருவதற்குள்ளாக இன்னொரு அதிர்ச்சி டிரம்ப்புக்கு கிடைத்தது. அவரது முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் 2016-ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்திய நிதி தொடர்பாக சட்டத்தை மீறியதாக மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
வேட்பாளரின் உத்தரவுக்கு இணங்க தேர்தல் முடிவுகளில் பாதிப்பு ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டு தான் இவ்வாறு செய்ததாக அவர் கூறினார். டிரம்புடன் தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண்களுக்கு ரகசியமாக பணம் அளித்தது தொடர்பாக கோஹன் இந்த சாட்சியம் அளித்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையில், கோஹன் வரி மற்றும் வங்கி பண மோசடிஉள்பட 8 அம்சங்களில் நடந்த முறைகேடுகளை ஒப்புக் கொண்டுள்ளார். இதனால், அவருக்கும் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மேற்கண்ட இரு சம்பவங்கள் முல்லர் குழுவுக்கு சாதகமாகவும், டிரம்ப்புக்கு பாதகமாகவும் அமைந்துள்ளது. இதனால், டிரம்ப்பின் பதவிக்கு ஆபத்து வரலாம் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதிபர் தேர்தலில் ரஷிய தலையீடு புகார் டிரம்ப்புக்கு தலைவலியாக இருந்து வரும் நிலையில், அவரது முன்னாள் உதவியாளர் பால் மானபோர்ட் மீதான முறைகேடு வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. #PaulManafort #Trump
வாஷிங்டன்:
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிக்கு ரஷிய உளவுத்துறை உதவியதாக எழுந்த புகார் தொடர்பாக எப்.பி.ஐ விசாரித்து வருகிறது. இதற்கிடையே, கடந்தாண்டு அதிபர் டிரம்பின் பிரசார குழு தலைவராக இருந்த பால் மனாபோர்ட், உதவியாளர் ரிக் கேட்ஸ் ஆகியோர் உக்ரைனைச் சேர்ந்த அரசியல்வாதி விக்டர் யானுகோவிச், அவரது ரஷ்ய ஆதரவு அரசியல் கட்சியிடமிருந்து பல மில்லியன் டாலர் நிதி திரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது,
இவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நிதிமோசடி உட்பட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதனை அடுத்து, தலா 5 மில்லியன் டாலர் ஜாமீனில் அவர்களை விடுவித்த நீதிமன்றம் வீட்டுக்காவலில் வைத்தது.
இந்நிலையில், விர்ஜீனியா மாகாணத்தின் அலெக்ஸாண்ட்ரா கோர்ட்டில் நடந்து வந்த பால் மனாபோர்ட் மீதான வங்கி, வரி மோசடி வழக்குகள் மீதான விசாரணை முடிவடைந்தது. இதனை அடுத்து, வழக்கு குறித்து தங்களது கருத்துகளை தெரிவிக்க 12 ஜூரிக்களுக்கும் நீதிபதி உத்தரவிட்டார். (அமெரிக்க சட்ட முறைப்படி வழக்கின் தீர்ப்பை ஜூரிக்களின் கருத்தை வைத்தே நீதிபதிகள் அறிவிப்பர்)
12 ஜூரிக்களும் வழக்கு தொடர்பாக விவாதித்து வருகின்றனர். இந்த வழக்கில் பால் மானாபோர்ட் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால் அது டிரம்ப்புக்கு பெரிய அடியாக அமையும். கட்சியின் தலைவர் என்ற முறையில் அவரை பதவி விலக வைக்கவும் முடியும். இதனால், இந்த வழக்கின் தீர்ப்பை அமெரிக்காவே உற்று நோக்கியுள்ளது.
×

X