என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tea"

    அளவுக்கு அதிகமானால் அமிர்தமே நஞ்சாகும் போது காபியும், டீயும் மட்டும் நலம் தருமா என்ன? அளவுக்கதிகமான பயன்பாடு பல உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
    டீ குடிப்பதால் பார்கின்சன்ஸ், ருமாட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் போன்றவை ஏற்படும் ஆபத்து ஓரளவுக்குக் குறைகிறதாம். ஒருவர் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்குச் சரியான அளவில் டீ குடித்து வந்தால், எலும்புகள் மற்றவர்களைவிட உறுதியாக இருக்குமாம். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். புற்று நோய் ஏற்படுவதற்கான காரணம், டீ குடிப்பதால் குறையலாம் என்கிறார்கள்.

    இவ்வளவு நன்மைகள் இருக்கும் பானங்களைக் குடிப்பதில் என்ன தவறு என்று யோசிக்கலாம். அளவுக்கு அதிகமானால் அமிர்தமே நஞ்சாகும் போது காபியும், டீயும் மட்டும் நலம் தருமா என்ன? அளவுக்கதிகமான பயன்பாடு பல உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். காபியில் இருக்கும் காபீன் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டும் போது, அதுவே உடல்நல பாதிப்புக்கு காரணமாக அமைந்துவிடும்.

    அளவுக்கு அதிகமாக காபி குடிப்பதால் ரத்தத்தில் இருக்கும் இரும்புச்சத்தின் அளவு குறைந்து பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ரத்தச் சோகை ஏற்படலாம். காபியில் இருக்கும் சில வேதிப்பொருட்கள் இதயத்துக்கு எதிரானவை. அவை இதய வால்வுகளை விரிவடையச் செய்து, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். தலைவலிக்காகக் குடிக்கப்படும் காபியின் அளவு அதிகமானால் மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம். சிலருக்கு தூக்கத்தில் சிக்கல்கள் உண்டாகலாம். இன்னும் சிலருக்கு சரியான நேரத்தில் காபி குடிக்கவில்லை என்றாலே பதற்றம் உண்டாகும். இதுவும் ஒரு வகை நோய்தான்.



    எலும்பின் உறுதிக்குத் துணைபுரிகிற அதே டீதான், எல்லை மீறும் போது எலும்பின் உறுதியைப் பாதிக்கிறது. பற்களின் சிதைவுக்கும் அதிக அளவு டீகுடிப்பது தான் காரணம் என்று கூறப்படுகிறது. புராஸ்டேட் புற்று நோய், உணவுக் குழாய் புற்று நோய் போன்றவை ஏற்படுவதற்கு டீயும் ஒரு காரணமாகவும் அமைந்துவிடலாம் என்று சில மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன.

    காபியோ, டீயோ ஒரு நாளுக்கு இரண்டு முறை குடிப்பது நல்லது. அளவுக்கு அதிகமாகக் குடிப்பதை கூடிய வரை தவிர்க்க வேண்டும். காபி, டீ இரண்டையும் நாம் அப்படியே குடிப்பதில்லை. அவற்றுடன் பால், சர்க்கரை இரண்டையும் கலந்து தான் குடிக்கிறோம். தினமும் நாம் சாப்பிடுகிற உணவிலேயே போதுமான அளவு சர்க்கரை, நமக்குக் கிடைத்துவிடும். அப்படி இருக்கும்போது நாம் தனியாகச் சேர்த்துக் கொள்கிற, ஒவ்வொரு டீஸ்பூன் சர்க்கரையும் வரப்போகிற நோய்க்கான அழைப்புதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

    பாலும் அப்படித்தான். வயதுக்கும், உடல்நிலைக்கும் ஏற்ற அளவில் தான் பாலைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிகப்படியான கால்சியச் சத்தும் உடலுக்கு நல்லதல்ல. இந்த இரண்டு பானங்களுமே உற்சாகத்தைத் தருவதால், நம்மை அடிமைப்படுத்திவிடும். அதனால் தான் பலர் காபி குடிக்கவில்லை என்றால் வேலையே ஓடாது என்று சொல்கிறார்கள். இந்தநிலை உகந்தது அல்ல. 
    கிரீன் டீ குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் யாரெல்லாம் கிரீன் டீ குடிக்கலாம், குடிக்கக்கூடாது என்று பார்க்கலாம்.
    மல்ட்டிபிள் ஸ்கெலரோசிஸ், டைப் 1 சர்க்கரை நோய், சொரியாசிஸ், ரூமட்டாய்டு ஆர்த்ரைடிஸ், பெப்டிக் அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் கிரீன் டீ சாப்பிடலாம்.

    அலர்ஜி, ஆஸ்துமா, சைனஸ், வைரஸ் காய்ச்சல், அல்சர், வைரஸ் தொற்று நோய்கள் உள்ளவர்கள் கிரீன் டீ சாப்பிடக் கூடாது.

    கிரீன் டீயை எப்படிக் குடிக்க வேண்டும்?

    பவுடராக வாங்காமல் பச்சை இலையாக இருக்கும் கிரீன் டீயாக வாங்கவும்.

    கிரீன் டீ இலைகளை நீருடன் சேர்த்து, கொதிக்கவைத்து வடிகட்டி, வெதுவெதுப்பான சூட்டில் அருந்துவது உடலுக்கு நல்லது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை, வெல்லம் அல்லது தேன் போன்றவற்றைச் சேர்க்காமல் குடிக்க வேண்டும்.

    தினமும் ஒன்று அல்லது இரண்டு கப் அளவுக்கு மேல் கிரீன் டீ குடிக்கக் கூடாது.

    அதிக உடல்எடை உள்ளவர்கள் கொழுப்பை குறைக்க கிரீன் டீயை குடிக்கலாம்.

    கிரீன் டீ சாப்பிடுவதால் உடலில் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுவது போல தோன்றினால், உடனே கிரீன் டீ சாப்பிடுவதை நிறுத்திவிடுவது நல்லது.
    கோடையில் ஐஸ் லெமன் டீ குடித்தால் புத்துணர்ச்சி கிடைக்கும். இன்று இந்த ஐஸ் லெமன் டீயை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தேயிலைத் தூள் - 2 டீஸ்பூன்
    எலுமிச்சை - 2
    சர்க்கரை - 8 டீஸ்பூன்
    புதினா இலைகள் - சிறிது
    ஐஸ் கட்டிகள் - 1 டம்ளர்



    செய்முறை :

    இரண்டு டம்ளர் தண்ணீரை அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பித்ததும் தேயிலைத் தூளைச் சேர்த்துக் கொதிக்கவிட்டு, வடிகட்டிக்கொள்ளுங்கள்.

    ஒரு எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளுங்கள்.

    மற்றொரு எலுமிச்சை பழத்தை மெல்லிய வட்டத் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

    தேநீரில் சர்க்கரை, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கலக்குங்கள்.

    கண்ணாடி டம்ளரில் ஐஸ் துண்டுகளைக் கால் பகுதி வரை நிரப்புங்கள்.

    இதில் அரை டம்ளர் அளவுக்குத் தேநீரைச் சேருங்கள்.

    பிறகு கால் டம்ளர் தண்ணீரை ஊற்றுங்கள்.

    நறுக்கிய எலுமிச்சைத் துண்டுகளையும் புதினா இலைகளையும் போட்டு, ஜில்லென்று பரிமாறுங்கள்.

    குளுகுளு ஐஸ் லெமன் டீ ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×