search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teenager Stabbed"

    • 2 பேர் கைது
    • ஜெயிலில் அடைத்தனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் மாங்காய் தோப்பை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 28). கம்பி கொல்லையை சேர்ந்தவர்கள் மணிகண்டன் (21), சந்தோஷ் (25). இவர்களுக்குள் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு பைக்கில் வந்த அரவிந்தனை, சந்தோஷ் மற்றும் மணிகண்டன் வழி மடக்கி தகராறில் ஈடுபட்டனர். அப்போது வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், சந்தோஷ் ஆகியோர் சேர்ந்து அரவிந்தனை மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த அரவிந்தனை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அரவிந்தனை கத்தியால் குத்திய மணிகண்டன், சந்தோஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • முந்திரி வாங்கி ஏற்றுமதி செய்து வந்தார்.
    • 2 பேர் உள்பட 4 பேர் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த வல்லம் அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர்கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் அன்புச்செல்வன் (வயது 23) இவர் மேல் மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த பட்டுராசா மகன் சிவமணி யிடம்கடனாக முந்திரி வாங்கி ஏற்றுமதி செய்து வந்தார்.

    தற்போது சொந்தமாக வாகனம் வாங்கி முந்திரி பயிர்ஏற்றி வருகிறார். இதனால் இவர்களுக்குள் தொழில் ரீதியாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு அன்புச்செல் வனை சிவமணி, வெங்கடேசன் மற்றும் 2 பேர் உள்பட 4 பேர் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்த அன்புச்செல்வன் பண்ருட்டி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்ராஜ தாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து மேல்மேட்டுக்குப்பம்சிவமணி, வெங்கடேசன்ஆகிய இருவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் 2பேரை தேடி வருகின்றனர்.

    • கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்
    • போலீசார் கைது செய்து விசாரணை

    ஆலங்காயம்,

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கோணாமேடு பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 35). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.

    இவரிடம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சேர்ந்த சாந்தகுமார்(28) என்பவர் தனது பைக்கை அடகு வைத்து ரூ.40 ஆயிரம் பணம் வாங்கினார். சாந்தகுமார் நீண்ட நாட்கள் ஆகியும் பைக்கை திரும்ப மீட்கவில்லை.

    இந்த நிலையில் சசிகுமார் நியு டவுன் பகுதியில் உள்ள சாந்தகுமார் வீட்டிற்கு சென்று பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.

    அப்போது 2 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

    இதில் ஆத்திரமடைந்த சாந்தகுமார் தனது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து, சசிகுமாரை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    வலி தாங்க முடியாமல் சசிகுமார் கூச்சலிட்டார். அலறல் சத்தம் கேட்டு, அந்த பகுதி மக்கள் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணி யம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கிருந்து சசிகுமார் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து சாந்தகுமாரை கைது செய்தனர்.

    • முருகனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வருவதாக தெரிகிறது.
    • சம்பவத்தன்று முருகன், தம்பியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெர்மல் கோவில்பிள்ளைநகரை சேர்ந்தவர் முருகன் (வயது29). தொழிலாளி. இவரது மனைவி முத்து லெட்சுமி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    கத்திக்குத்து

    முருகனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வருவதாக தெரிகிறது. இதனால் தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார். இதில் கணவருடன் கோபித்து கொண்டு அவரது மனைவி முருகனின் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    இதையறிந்த முருகன் பெற்றோர் வீட்டிற்கு சென்று இது குறித்து கேட்டுள்ளார். இதற்கிடையே முருகனின் தம்பி மகேஷ் என்பவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முருகன், தம்பியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    இதில் ஆத்திரமடைந்த முருகன் கத்தியால், மகேசை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். பலத்த காயமடைந்த மகேஷ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    அண்ணன் கைது

    இது தொடர்பாக தென்பாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகச்சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.

    ×