என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Telangana state"
- நந்தி வட்டே மன்னேவை சேர்ந்தவர் திருப்பதையா கூலித் தொழிலாளி.
- 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தனர். ஆம்புலன்ஸ் வருவதற்குள் திருப்பதையா பரிதாபமாக இறந்தார்.
தெலுங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டம், நந்தி வட்டே மன்னேவை சேர்ந்தவர் திருப்பதையா (வயது 55). கூலித் தொழிலாளி. இவரது மனைவி இறந்து விட்டார். இதனால் திருப்பதையா தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் அப்பைய பள்ளியில் உள்ள உறவினரை சந்திப்பதற்காக பைக்கில் சென்று கொண்டு இருந்தார். பாதி வழியில் சென்றபோது திருப்பதையாவுக்கு பசி எடுத்ததால் பைக்கை நிறுத்தினார். பைக்கில் கொண்டு சென்ற வேக வைத்த முட்டைகளை சாப்பிட்டார்.
அப்போது ஒரு முட்டை அவரது தொண்டையில் சிக்கிக் கொண்டது. இதனால் மூச்சு விட முடியாமல் திணறினார்.
அவ்வழியாக சென்றவர்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தனர். ஆம்புலன்ஸ் வருவதற்குள் திருப்பதையா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திருப்பதையாவின் பிணத்தை மீட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஜெயக்குமார் அரிவாளால் சேகரை வெட்டினார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா:
தெலுங்கானா மாநிலம் மஞ்சேரியல் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மனைவி பத்மா. இவர்களுக்கு அசோக், சேகர் என இரு மகன்கள் உள்ளனர்.
விஜயகுமார், பத்மா இருவருக்கும் மது பழக்கம் இருந்தது. அப்போது போதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த மூத்த மகன் அசோக் அவர்களை தட்டிக்கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார், பத்மா இருவரும் மூத்த மகன் அசோக்கை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். அப்போது, வீட்டில் 2-வது மகன் சேகர் போர்வையை மூடியபடி தூங்கிக் கொண்டிருந்தார். மூத்த மகன் என நினைத்து 2-வது மகன் சேகரை விஜயகுமார், பத்மா இருவரும் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
பத்மா அவரது கால்களை பிடித்து கொண்டார். ஜெயக்குமார் அரிவாளால் சேகரை வெட்டினார். அவர் கத்தி கூச்சலிட்டார். அப்போதுதான் அவர்களுக்கு வெட்டு பட்டது சேகர் என்பது தெரியவந்தது.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அவர்கள் சேகரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சேகர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, விஜயகுமார் அவரது மனைவி பத்மா இருவரையும் கைது செய்து, ஜெயிலில் அடைத்தனர். இந்நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தனி மாநிலம் அமைக்க பாடுபட்ட அனைவருக்கும் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
- இசையமைப்பாளர் கீரவாணி இசையில் தெலுங்கானா மாநில பாடலும் புதுப்பித்து வெளியிடப்பட உள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தெலுங்கானா உருவாகி வருகிற 2-ந்தேதியுடன்10 ஆண்டுகள் நிறைவடைகிறது.
தெலுங்கானாவில் உள்ள காங்கிரஸ் அரசு, இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன் தெலுங்கானா 10-ம் ஆண்டு விழாவை பெரிய அளவில் கொண்டாட்டங்களுடன் நடத்த திட்டமிட்டுள்ளது.
அதன்படி, தெலுங்கானா உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றிய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
மேலும் தனி மாநிலம் அமைக்க பாடுபட்ட அனைவருக்கும் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
மாநில அமைச்சரவைக் கூட்டத்தின் போது துணை முதல்வர் மல்லு பாட்டி விக்ரமார்கா இதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தார். அது ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டது.
மேலும் இசையமைப்பாளர் கீரவாணி இசையில் தெலுங்கானா மாநில பாடலும் புதுப்பித்து வெளியிடப்பட உள்ளது.
- அரசாங்க கருவூலத்திற்கு தவறான இழப்பை ஏற்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
- லஞ்சம் கொடுத்து ஜிஎஸ்டி பணத்தைத் திரும்பப் பெற்றனர்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 6 போலி எலக்ட்ரானிக் பைக் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ரூ.46 கோடி ஜி.எஸ்.டி. வரியை திரும்ப ஒப்படைத்ததாக ஜி.எஸ்.டி. அதிகாரிகள் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
போலி எலக்ட்ரிக் பைக் தயாரிப்பு பிரிவுகளை தொடங்கிய குற்றவாளிகளுடன் அதிகாரிகள் சதி செய்ததாக போலீசார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஐதராபாத்தில் உள்ள வளாகத்தின் உரிமையாளர்களிடம் இருந்து மின்சாரக் கட்டணம் வசூலித்து போலி நிறுவனங்களைத் தொடங்கினர் . பின்னர் அவர்கள் போலி மற்றும் ஜோடிக்கப்பட்ட வாடகை ஒப்பந்தங்களை சமர்ப்பித்து ஜி.எஸ்.டி. போர்ட்டலில் நிறுவனங்களை பதிவு செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் வரி ஆலோசகர் சிராக் ஷர்மாவுடன் கிரிமினல் சதி செய்து, போலி மற்றும் ஜோடிக்கப்பட்ட விலைப்பட்டியல்கள், இ-வே பில்கள் மற்றும் போலி நிறுவனங்களை உருவாக்கி, இல்லாத நிறுவனங்களை ஏற்கனவே இருப்பதாகக் காட்டி, லஞ்சம் கொடுத்து ஜிஎஸ்டி பணத்தைத் திரும்பப் பெற்றனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் இ-பைக்குகளை தயாரிக்காமல், அரசாங்க கருவூலத்திற்கு தவறான இழப்பை ஏற்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர். ஜிஎஸ்டி அதிகாரிகள் மற்ற குற்றம் சாட்டப்பட்ட நபர்களுடன் கிரிமினல் சதி செய்து, லஞ்சம் வாங்கி, தங்கள் அதிகாரபூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்தி, தங்கள் துறையின் விதிகள் மற்றும் நடைமுறைகளை வேண்டுமென்றே மீறி, பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நல்கொண்டா பிரிவு ஜிஎஸ்டி துணை ஆணையர் ஸ்வர்ண குமார், அபிட்ஸ் வட்டத்தின் உதவி ஆணையர் (மாநில வரிகள்) கெலம் வேணு கோபால், மாதப்பூர்-1 வட்டம், வெங்கட ரமணா, துணை ஆணையர் விஸ்வ கிரண் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தெலுங்கானாவில் முதல்- மந்திரி சந்திரசேகரராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. 119 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த 13 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவு பெறுகிறது.
முதல்முறையாக இங்கு வாக்காளர்கள், தாங்கள் யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை தெரிந்து கொள்வதற்கான ஒப்புகைச்சீட்டு முறை அமல்படுத்தப்படுகிறது. 2 கோடியே 80 லட்சம் வாக்காளர்களுக்காக 32 ஆயிரத்து 815 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் ஒரு திருநங்கை உள்பட 1,821 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. #TelanganaElections2018 #Telangana
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்