என் மலர்
முகப்பு » test recall
நீங்கள் தேடியது "Test recall"
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான் தேர்வு செய்யப்பட்டதற்கு ஐபிஎல் தொடரில் எனது சிறப்பான பங்களிப்பு முக்கிய காரணம் என இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
லண்டன்:
இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற, லீட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.
லார்ட்ஸ் போட்டியில் 67 ரன்கள் அடித்திருந்த ஜோஸ் பட்லர், லீஸ்ட் போட்டியில் 80 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். 2014-க்கு பின்னர் ஒரு முதல்தர சதம் கூட அடிக்காமல் இருந்த பட்லர் பாகிஸ்தான் தொடருக்கு தேர்வு செய்யப்படுவாரா? என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், சமீபத்தில் முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், டெஸ்ட் அணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்க ஐபிஎல் சீசன் முக்கிய காரணம் என பட்லர் தெரிவித்துள்ளார். ‘இரண்டு வாரங்கள் நான் பங்கேற்ற ஐபிஎல் அதிகமான தன்னம்பிக்கையை எனக்கு கொடுத்தது. அதிகமான ரசிகர்கள் மத்தியில் ஒரு வெளிநாட்டு வீரர் விளையாடும் போது ஏற்படும் அழுத்தத்தை எதிர்கொண்டேன். அது போன்ற சூழ்நிலையை எப்படி கையாள்வது என்பதை கற்றுக்கொண்டேன்’ என பட்லர் கூறியுள்ளார்.
×
X