என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Test Series"
- வேகப்பந்துக்கு சாதகமான ஆடுகளங்களை இந்தியா தயார் செய்யலாம்.
- கே.எல். ராகுல் ஒரு சிறந்த கீப்பர்.
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது.
முதல் டெஸ்ட் போட்டி வருகிற 19-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி 27-ந்தேதி கான்பூரில் தொடங்குகிறது.
வங்காளதேச அணி சமீபத்தில் பாகிஸ்தானை அதன் மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தி வரலாறு படைத்தது.
இந்த நிலையில் வங்காள தேசத்தை இந்தியா எளிதில் வீழ்த்தும் என்று இந்திய அணி முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் வெற்றி பெறுவது சவாலானது. பாகிஸ்தானில் வங்காள தேசம் நன்றாக விளையாடியது. ஆனால் வங்காள தேசத்தை வீழ்த்து வதற்கு இந்தியாவுக்கு அதிக சிரமம் இருக்காது என்று நான் நினைக்கிறேன்.
இந்த தொடருக்கு வேகப்பந்துக்கு சாதகமான ஆடுகளங்களை இந்தியா தயார் செய்யலாம். இது வங்காளதேசத்துக்கு எதிராக உதவும் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு தயாராவதற்கு உதவும். இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் மட்டுமே விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன்.
கே.எல். ராகுல் ஒரு சிறந்த கீப்பர். அவர் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளார். அவரை இனி பகுதி நேர விக்கெட் கீப்பர் என்று அழைப்பது நியாயம் என்று நான் நினைக்கவில்லை. இந்த சீசனில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விராட் கோலியின் சிந்தனை மற்றும் செயல்கள் அப்படியே ஆஸ்திரேலியர்களை போன்று இருக்கிறது.
- சவால்களை எதிர்கொண்டு எதிரணியை விட சிறப்பாக செயல்பட முயற்சிப்பது என அனைத்தும் ஆஸ்திரேலிய வீரர்களை நினைவூட்டுகிறது.
மெல்போர்ன்:
இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் நவ.22-ந் தேதி பெர்த்தில் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய வீரர் விராட் கோலியின் ஆக்ரோஷமான பேட்டிங்கை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் கோலி குறித்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவன் சுமித் அளித்த ஒரு பேட்டியில், 'விராட் கோலியின் சிந்தனை மற்றும் செயல்கள் அப்படியே ஆஸ்திரேலியர்களை போன்று இருக்கிறது என்று நான் நம்புகிறேன். அவர் போட்டிக்கு தயாராகும் விதம், சவால்களை எதிர்கொண்டு எதிரணியை விட சிறப்பாக செயல்பட முயற்சிப்பது என அனைத்தும் ஆஸ்திரேலிய வீரர்களை நினைவூட்டுகிறது. அவர் இந்திய அணியில் இருக்கும் ஆஸ்திரேலியர் என்று நினைக்கிறேன்.
இந்த தொடரில் நான் விராட் கோலிக்கு எதிராக வரிந்துகட்டுவதில் கவனம் செலுத்தப் போவதில்லை. களம் இறங்கி முடிந்த வரை அதிக ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம். நானும் விராட் கோலியும் அவ்வப்போது குறுந்தகவல்களை பகிர்ந்து கொள்வோம். கோலி ஒரு நல்ல மனிதர் மற்றும் அற்புதமான வீரர். அவருக்கு எதிராக விளையாடுவது எப்போதும் சிறப்பாக இருக்கும்' என்றார்.
- இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
- இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா கடைசியாக 2007 ஆம் ஆண்டு வெற்றிப்பெற்றது.
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இந்த தொடருக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இன்று வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா கடைசியாக 2007 ஆம் ஆண்டு வெற்றிப்பெற்றது. அதைத்தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடந்த போட்டி டிராவில் முடிந்தது. கடசியாக ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலயாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிப்பெற்றது.
இந்நிலையில் தற்போது இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20 -ம் தேதி லீட்ஸ் மைதானத்திலும், 2-வது போட்டி ஜூலை 2-ம் தேதி பர்மிங்காமிலும், 3-வது போட்டி ஜூலை 10-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்திலும், 4-வது போட்டி மான்செஸ்டரிலும், 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 31-ம் தேதி ஓவல் மைதானத்திலும் நடைபெற உள்ளது.
முன்னதாக இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-4 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
- வங்காளதேச அணி பாகிஸ்தானில் பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
- பாகிஸ்தான், வங்காளதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது.
டாக்கா:
வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
அதன்படி, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இது ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. எனவே இந்தத் தொடர் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், வங்காளதேச அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான தஸ்கின் அகமது உள்ளிட்ட வீரர்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
காயம் காரணமாக கடந்த 12 மாதத்துக்கு மேலாக டெஸ்ட் போட்டிகளில் களம் காணாத இவரது வருகை நிச்சயம் வங்காளதேச அணிக்கு வலு சேர்க்கும்.
வங்காளதேச டெஸ்ட் அணியின் விவரம் வருமாறு:
நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), மஹமுதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், ஷட்மான் இஸ்லாம், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ரானா, ஷொரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத், தஸ்கின் அகமது, சையத் காலித் அகமது
- வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது சமி அணிக்கு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
- காயத்தில் இருந்து மீண்ட சமி பேட்டிங்கில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
காயத்தில் இருந்து மீண்டு இந்திய அணியில் இடம்பிடிக்க காத்திருக்கும் இந்திய வீரர் முகமது ஷமி தற்போது பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டு வரும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்திய அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. இதில் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை இலங்கை அணியிடம் இழந்துள்ளது.
இதையடுத்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வங்கதேச அணியானது இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் முகமது சமி அணிக்கு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகின. காயத்தால் எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் தொடர்களிலும் முகமது சமி பங்கேற்காமல் இருந்தார்.
இந்நிலையில் காயத்தில் இருந்து மீண்டு வரும் முகமது சமி இந்திய அணிக்கு திரும்புவதற்கு முன்னதாக ஊள்ளூர் போட்டிகளில் விளையாடவுள்ளதாகவும் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தனது கம்பேக்கிற்காக கடினமாக உழைத்து வரும் அவர் தற்சமயம் பேட்டிங் பயிற்சியிலும் ஈடுபட்டு வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- 3-வது டெஸ்ட்டில் இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுவதுமாக கைப்பற்றியது.
பர்மிங்காம்:
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 282 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 75.4 ஓவர்களில் 376 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் 94 ரன்கள் முன்னிலை பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்சாரி ஜோசப் 4 விக்கெட்டுகளும், ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளும், ஷமர் ஜோசப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் 94 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 33 ரன்கள் அடித்தது. அலிக் அத்தானஸ் 5 ரன்களுடனும், மைக்கேல் லூயிஸ் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. அலிக் அத்தானஸ் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து லூயிஸ் -கவேம் ஹாட்ஜ் ஜோடி நிதானமாக விளையாடி அரை சதம் அடித்தனர். லூயிஸ் 57 ரன்னிலும் ஹாட்ஜ் 55 ரன்னில் அவுட் ஆகினர். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 175 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இதனால் இங்கிலாந்து அணிக்கு 81 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஸ்டோக்ஸ் - டக்கட் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். ஸ்டோக்ஸ் 24 பந்தில் அரை சதம் விளாசினார்.
இறுதியில் இங்கிலாந்து அணி 7.2 ஓவரில் 87 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுவதுமாக கைப்பற்றியது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் பங்கேற்க மாட்டார்.
- இஷான் கிஷன், கே.எஸ்.பரத், உபேந்திர யாதவ் இடையே கடும் போட்டி.
வரும் பிப்ரவரி மாதம் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையே முதலாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது. இந்நிலையில் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் சிகிச்சைகாக டேராடூனில் உள்ள மருத்துவமனையில் இருந்து டெல்லி அல்லது மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு விரைவில் பண்ட் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரிஷப் பண்டுக்கு நீண்ட கால சிகிச்சை தேவைப்படுவதாக அவரது பயிற்சியாளர் தேவேந்திர சர்மா கூறியுள்ளார். காயத்தில் இருந்து பண்ட் முழுமையாக குணமடைய குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு புதிய விக்கெட் கீப்பரை தேர்வு செய்வது குறித்து தேர்வு கமிட்டி ஆலோசித்து வருகிறது. இரண்டு புதிய விக்கெட் கீப்பர்கள் அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது. ரிஷப் இடத்திற்கு இஷான் கிஷன், கே.எஸ்.பரத், இந்தியா ஏ அணியை சேர்ந்த உபேந்திர யாதவ் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இஷான் கிஷனை கே.எஸ்.பரத்துக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றது குறித்து கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-
ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதை எனது மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன்.
2011-ல் உலக கோப்பையை வென்றபோது நான் இளம் வீரராக இருந்தேன். அப்போது மற்ற வீரர்களின் உத்வேகத்தை பார்த்தேன்.
தற்போது தொடரை வென்ற இந்திய அணி அதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இந்த வீரர்கள் சாதிக்கக்கூடிய திறமை படைத்தவர்கள். இதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
இந்த டெஸ்ட் தொடரில் பேட்டிங், மற்றும் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. புஜாராவின் பேட்டிங் நம்ப முடியாத வகையில் அபாரமாக இருந்தது. அவர் மிகவும் சிறப்புக்கு உரிய வீரர் ஆவார்.
இதேபோல மெல்போர்ன் டெஸ்டில் புதுமுக வீரர் அகர்வால் தனது திறமையை வெளிப்படுத்தியது சிறப்பானது. ரிசப்பந்தும் இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்தினார். வேகப்பந்து வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சாதனைகளை முறியடித்து அபாரமாக வீசினார்கள். குறிப்பாக பும்ராவின் பந்துவீச்சு நேர்த்தியாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்நாயகன் விருது பெற்ற புஜாரா கூறியதாவது:-
நான் இடம்பெற்றுள்ள சிறந்த இந்திய அணி இதுவாகும். டெஸ்ட் தொடரை கைப்பற்றியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நாங்கள் மிகவும் கடினமாக உழைத்து வெளிநாட்டில் தொடரை வென்றுள்ளோம். ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்வது என்பது எளிதானதல்ல. இதனால் இந்திய வீரர்களை பாராட்டுகிறேன்.
4 வேகப்பந்து வீரர்கள் 20 விக்கெட்டை வீழ்த்துவது எளிதானதல்ல். எனவே அனைத்து வேகப்பந்து வீரர்கள் மற்றும் சுழற்பந்து வீரர்கள் பாராட்டப்படக் கூடியவர்கள். இது உண்மையிலேயே வியக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார். #AUSvIND #ViratKohli
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா அணி மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் எந்த ஒரு வீரரும் 25 ரன்களை கூட தொடவில்லை. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 66.5 ஓவர்களில் 151 ரன்களில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. பும்ரா 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
292 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பாலோ-ஆன் வழங்கவில்லை. ஒரு வேளை கடைசி நாளில் பேட்டிங் செய்யும் நிலை ஏற்பட்டால் சேசிங் செய்வது மிகவும் கடினம் என்று கருதிய இந்திய அணி நிர்வாகம் 292 ரன்கள் முன்னிலையுடன் தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடுவது என்று முடிவு செய்தது.
ஆனால் 2-வது இன்னிங்ஸ் இந்தியாவுக்கு திருப்திகரமாக அமையவில்லை. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் மிரட்டினார். இந்திய வீரர்கள் மயங்க் அகர்வாலை தவிர, விராட் கோலி, புஜாரா உள்பட முன் வரிசை வீரர்கள் அனைவரும் சொதப்பினார். இந்திய அணி 2-வது இன்னிங்சில் நேற்றைய ஆட்ட நேர முடிவில், 27 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்திருந்தது. மயங்க் அகர்வால் 28 ரன்களுடனும் (79 பந்து, 4 பவுண்டரி), விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இன்று 4-வது நாள் ஆட்டம் துவங்கியதும், அதிரடியாக ஆடிய ரிஷப் பந்த் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். மயங்க் அகர்வால் 42 ரன்களில் வெளியேறினார். ஜடேஜா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 37.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் சேர்த்து இருந்த போது தனது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சின் 292 ரன்கள் முன்னிலையுடன் சேர்த்து இந்திய அணி, 399 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணையித்தது.
இதனைத்தொடர்ந்து இமாலய இலக்குடன் 2-வது இன்னிங்சை துவங்கி ஆஸ்திரேலிய அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பந்து வீச்சுக்கு சாதகமாக மைதானம் மாறியிருப்பதால், இந்த இலக்கை துரத்துவது மிக கடினம். இதனால், இந்த ‘பாக்சிங் டே’ டெஸ்டில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியிருக்கிறது. தற்போது வரை ஆஸ்திரேலிய அணி 11 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. #AUSvIND
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி மைதானத்தில் ஆக்ரோஷத்துடன் செயல்படுவார். விக்கெட் வீழ்ந்ததும் துள்ளி குதித்து கத்தியபடி மகிழ்ச்சியை வெளிபடுத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆஸ்திரேலிய முன்னாள் பயிற்சியாளர் டேரன் லீமேன் கூறியதாவது:-
பெர்த் டெஸ்டில் கோலியும், டிம்பெய்னும் தங்களது எல்லையை தாண்டவில்லை. வேடிக்கையாக பேசி கொண்டனர். அவர்கள் ஜாலியாக பேசுவது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி இருந்தது என்றார். #ViratKholi #AUSvIND #AllanBorder
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான மூன்று போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
4 டெஸ்ட் தொடரில் அடிலெய்டுவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன் வித்தியாசத்திலும், பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் டெஸ்ட் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 26-ந் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை இந்திய அணியால் வெல்ல இயலாது என்று அந்நாட்டு முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இந்த டெஸ்ட் தொடரில் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளையும் கவனித்து வருகிறேன். இந்திய அணியால் இந்த டெஸ்ட் தொடரை நிச்சயமாக வெல்ல முடியாது. ஏனென்றால் இந்தியாவின் பேட்டிங் வரிசை மோசமாகவே இருக்கிறது. பெர்த் டெஸ்டில் இது வெட்டவெளிச்சமாகி விட்டது.
தொடக்க வீரர் காயம், புதிய வீரரை அடுத்த டெஸ்டில் களம் இறக்குதல் போன்ற சூழல் இந்திய வீரர்களின் மனநிலையை பாதிக்கும்.
ஆஸ்திரேலிய அணி மெல்போர்னில் நடைபெறும் அடுத்த போட்டிக்கு பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டாம். மிகவும் அமைதியாக ஆடினாலே இந்தியாவை எளிதில் வென்றுவிடலாம்.
மெல்போர்ன், சிட்னி ஆடுகளங்கள் இந்திய வீரர்களுக்கு ஏற்றவையாக இருந்தாலும் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெறும். அந்த அணியின் வெற்றி நீடிக்கும்.
இவ்வாறு பாண்டிங் கூறியுள்ளார். #AUSvIND #RickyPonting
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்