search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கடைசி டெஸ்ட்டிலும் வெற்றி: வெஸ்ட் இண்டீஸ் அணியை வொயிட் வாஷ் செய்த இங்கிலாந்து
    X

    கடைசி டெஸ்ட்டிலும் வெற்றி: வெஸ்ட் இண்டீஸ் அணியை வொயிட் வாஷ் செய்த இங்கிலாந்து

    • 3-வது டெஸ்ட்டில் இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுவதுமாக கைப்பற்றியது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 282 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

    பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 75.4 ஓவர்களில் 376 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் 94 ரன்கள் முன்னிலை பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்சாரி ஜோசப் 4 விக்கெட்டுகளும், ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளும், ஷமர் ஜோசப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    பின்னர் 94 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 33 ரன்கள் அடித்தது. அலிக் அத்தானஸ் 5 ரன்களுடனும், மைக்கேல் லூயிஸ் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. அலிக் அத்தானஸ் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து லூயிஸ் -கவேம் ஹாட்ஜ் ஜோடி நிதானமாக விளையாடி அரை சதம் அடித்தனர். லூயிஸ் 57 ரன்னிலும் ஹாட்ஜ் 55 ரன்னில் அவுட் ஆகினர். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 175 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    இதனால் இங்கிலாந்து அணிக்கு 81 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஸ்டோக்ஸ் - டக்கட் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். ஸ்டோக்ஸ் 24 பந்தில் அரை சதம் விளாசினார்.

    இறுதியில் இங்கிலாந்து அணி 7.2 ஓவரில் 87 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுவதுமாக கைப்பற்றியது.

    Next Story
    ×