என் மலர்
நீங்கள் தேடியது "Thadi balaji"
- நடிகர் தாடி பாலாஜியும் அவரது மனைவி நித்யாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
- இவர்களது விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.
திரைப்பட நடிகரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வருபவருமான தாடி பாலாஜியின் மனைவி நித்யா (35). இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் இவர்களின் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.
நித்யா தற்போது மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு சாஸ்திரி நகரில் தனது மகளுடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி (வயது 62). இருவருக்கும் கார் நிறுத்துவது தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.
மணியின் காரை கடந்த 10 நாட்களுக்கு முன்பு நித்யா சேதப்படுத்திள்ளார். இதனை மணி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் நித்யா சேதப்படுத்தியது உறுதியானது. இது குறித்து மணி கொடுத்த புகாரின் பேரில் மாதவரம் போலீசார் நேற்று நித்யா மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மாதவரம் பொன்னியம்மன்மேடு வி.பி.சி. நகர் முதல் தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வன்.
- இவர் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவிடம் ரூ.94 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார்.
மாதவரம் பொன்னியம்மன்மேடு வி.பி.சி. நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் கலைச்செல்வன் (29). இவர் அதே பகுதியில் வசித்து வரும் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவிடம் ரூ.94 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். இதில் ரூ.52 ஆயிரத்தை திருப்பி கொடுத்த கலைச்செல்வன் மீதி பணத்தை கொடுக்கவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் பணம் தொடர்பாக நேற்று இரவு கலைச்செல்வனின் வீட்டிற்கு சென்று நித்யா கேட்டார். இதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாகவும் தெரிகிறது. இதுகுறித்து இருதரப்பினரும் மாதவரம் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் சிவகுமார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
- அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
- இவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புடன் 5 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அடையாறு பசுமை வழிச் சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரது சகோதரர் தங்கியிருந்த வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.

செந்தில் பாலாஜி
அதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதற்கிடையே அவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

பிரார்த்தனை செய்த தாடி பாலாஜி
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி குணமடைய வேண்டும் என்று நடிகர் தாடி பாலாஜி திருவண்ணாமலையில் உள்ள மூக்குப்பொடி சித்தர் ஜீவ சமாதியில் வழிபாடு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது வருத்தத்தை அளிக்கிறது. எனக்கு அவர் சகோதரர் போன்றவர். அவருக்கு இந்த மாதிரியான சூழ்நிலை ஏற்பட்டது ஒரு மனிதனாக எனக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. அவர் நிச்சயம் குணமடைந்து வருவார். அவர் விரைவில் குணமடைய வேண்டி மூக்குப்பொடி சித்தர் ஜீவ சமாதியில் பிரார்த்தனை செய்துள்ளேன்" என்று கூறினார்.

