என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thalapathy69"

    • கடந்த ஆண்டு லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தெ கிரேட்ட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இந்நிலையில் சில நாட்களுக்கு முன் படக்குழுவினர் அமெரிக்காவில் VFX பணிக்காக சென்றனர்.

    கடந்த ஆண்டு லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தெ கிரேட்ட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது விஜய் நடிக்கும் 68-வது படமாகும். கல்பாத்தி தயாரிக்கும் இப்படத்தில், சினேகா, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இத்திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் மிகவும் வைரலாகியது.

    இந்நிலையில் சில நாட்களுக்கு முன் படக்குழுவினர் அமெரிக்காவில் VFX பணிக்காக சென்றனர். நேற்று பணிகள் நிறைவடைந்தது என வெங்கட் பிரபு அவரது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டார்.

    இதனிடையே அரசியலில் குதித்த விஜய் இறுதியாக 69-வது படத்தில் நடித்துவிட்டு சினிமாவிலிருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார். இதனால், அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தை தீரன், துணிவு போன்ற அட்டகாசமான படங்களை இயக்கிய எச். வினோத்  இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது.

     

    இந்நிலையில், விஜய் நடிக்கும் 69-வது படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடிப்பதாக கூறப்படுகிறது. இவர் சூர்யாவுடன் இணைந்து சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்து தேசிய விருது வென்றவர் ஆவார். இதுக் குறித்த் ஆதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தளபதி 69 படத்தை தீரன், துணிவு போன்ற அட்டகாசமான படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளார்.
    • இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள கோட் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

    அடுத்ததாக தளபதி 69 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படமே விஜய் நடிக்கும் கடைசி படம் என கூறி வருகின்றனர். அதற்கடுத்து முழுவதுமாக அரசியல் பணியில் ஈடுப்படவுள்ளதாக கூறியிருந்தார்.

    தளபதி 69 படத்தை தீரன், துணிவு போன்ற அட்டகாசமான படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

     இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். படத்தில் நடிக்கும் நடிகர்களை இன்று முதல் 3 நாட்களுக்கு அறிவிக்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

    அதேப்போல் முதலாவதாக அனிமல் படத்தில் வில்லனாக நடித்து அசத்திய பாபி தியோல் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அது மட்டுமல்லாமல் பாபி த்யோல் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    என படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளனர். பட பூஜை விழா வரும் அக்டோபர் 4 ஆம் தேதி நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தளபதி 69 படத்தில் பாபி தியோல் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
    • பூஜா ஹெக்டே ஏற்கனவே பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள கோட் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

    அடுத்ததாக தளபதி 69 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படமே விஜய் நடிக்கும் கடைசி படம் என கூறி வருகின்றனர். அதற்கடுத்து முழுவதுமாக அரசியல் பணியில் ஈடுப்படவுள்ளதாக கூறியிருந்தார்.

    தளபதி 69 படத்தை தீரன், துணிவு போன்ற அட்டகாசமான படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

    இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும்.

    அனிமல் படத்தில் வில்லனாக நடித்து அசத்திய பாபி தியோல் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று படக்குழு நேற்று அறிவித்துள்ளது.

    இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார் என்று படக்குழு இன்று அறிவித்துள்ளது. பூஜா ஹெக்டே ஏற்கனவே பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தளபதி 69 திரைப்படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார்.
    • இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான "தி கோட்" திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக "தளபதி 69" என தலைப்பிடப்பட்டு உள்ளது.

    இந்தப் படம் விஜய் நடிக்கும் கடைசி படம் என கூறி வருகின்றனர். இப்படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார்.

    இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். 'அனிமல்' படத்தில் வில்லனாக நடித்து அசத்திய பாபி தியோல் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

    இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

    அண்மையில் கிடைத்த தகவல்படி விஜய் இப்படத்தில் முன்னாள் காவல் அதிகாரியாக நடிக்கவுள்ளார் என்று இணையத்தில் பரவி வருகிறது. எச் வினோத் இதற்கு முன் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் அசத்தலான காவல் கதாப்பாத்திர கதையை கூறியிருந்தார். அதேப்போல் இப்படமும் மிகவும் வலிமையான கதையைக் கூறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் விஜய், இயக்குநர் எச். வினோத் இயக்கும் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார்.
    • படத்தின் பூஜை தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டன.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியான 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரேவற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் தனது அரசியல் கட்சியின் முதல் மாநில மாநாடு, கட்சி சார்ந்த கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார்.

    இதனிடையே நடிகர் விஜய், இயக்குநர் எச். வினோத் இயக்கும் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்தப் படத்தின் பூஜை தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டன. இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் படப்பிடிப்பின் போது ரசிகர்களால் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் எச். வினோத் கூட்டணியில் உருவாகும் புதிய படம் "தளபதி 69"
    • அரசியல்வாதி அவதாரம் எடுத்துள்ள விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்று கூறப்படுகிறது.

    நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் எச். வினோத் கூட்டணியில் உருவாகும் புதிய படம் "தளபதி 69" என்று தற்காலிகமாக அழைக்கப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே மற்றும் பலர் நடிக்கின்றனர்.

    அனிருத் இசையமைக்கும் இந்தப் படம் அக்டோபர் மாத வாக்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி அரசியல்வாதி அவதாரம் எடுத்துள்ள விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் வரும் ஜனவரி 26, குடியரசு தினத்தன்று தளபதி 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக ஒரு வீடியோவாக வெளியிட்டு அறிவித்துள்ளனர். 'தளபதி 69' படத்திற்கு 'நாளைய தீர்ப்பு' என தலைப்பு வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. இச்செய்தி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது.
    • இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் எச். வினோத் கூட்டணியில் உருவாகும் "தளபதி 69" படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. திரைப்படத்திற்கு `ஜன நாயகன்' என்ற தலைப்பை வைத்துள்ளனர். இந்தப் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே மற்றும் பலர் நடிக்கின்றனர்.

    அனிருத் இசையமைக்கும் இந்தப் படம் அக்டோபர் மாத வாக்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் இதுவே விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

    படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரில் விஜய் வாகனத்தின் மீது நின்று கொண்டு அவரது ரசிகர்களுடன் செல்பி எடுப்பது போல் காட்சி அமைந்துள்ளது. இப்படம் கண்டிப்பாக ஒரு அரசியல் பின்னணி கொண்ட திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

    முன்னதாக நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் பலமுறை வாகனத்தின் மீது நின்றபடி செல்ஃபி எடுத்துள்ளார். அந்த வகையில் தனது அடுத்த படத்தின் முதல் தோற்றத்திலேயே தன் நிஜ வாழ்க்கை சம்பவத்தை ரீகிரியேட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×