என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thane"

    மகாராஷ்டிராவில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு லேசான நில அதிர்வு உணரப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். #Thane #MildTremors
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் லேசான நில அதிர்வுகள் உணரப்பட்டது. டோம்பிவிலி, கல்யாண், உல்லாஸ்நகர் மற்றும் பிவண்டி உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.  

    இதனால் வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.சிறிது நேரம் கழித்து நிலைமை சீரானதும் அவர்கள் மீண்டும் வீடுகளுக்கு திரும்பினர்.

    இது தொடர்பாக பேரிடர் மேலாண்மை மைய அதிகாரிகள் கூறுகையில், மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டது.  இது சுமார் 2.4 ரிக்டர் அளவில் பதிவானது. இதனால் சேதம் ஏற்படவில்லை எனதெரிவித்தனர்.
    மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் 15 வயது சிறுமி கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் செக்யூரிட்டி உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் டோம்பிவிலி பகுதியில் கடந்த 15-ம் தேதி மருந்து வாங்க 15 வயது சிறுமி சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் பணியாற்றும் பாதுகாவலர் அவரது 2 நண்பர்களின் உதவியுடன் அந்த சிறுமியை கடத்தியுள்ளார். அதைத்தொடர்ந்து வாகனம் மூலம் டோம்பிவிலி பகுதிக்கு பின்னால் உள்ள குடிசைப் பகுதிக்குள் கொண்டு சென்றுள்ளனர்.

    பின்னர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து நேற்று காலை வீடு வந்து சேர்ந்த சிறுமி அவரது பெற்றோருடன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அந்த புகாரின் அடிப்படையில், போக்ஸோ உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் அந்த மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #pocso
    ×