என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thani Oruvan 2"

    • தனி ஒருவன் 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்குகிறது.
    • தனி ஒருவன் 2 ப்ரோமோ வீடியோவிற்கு சாம் சி.எஸ். இசையமைத்து இருக்கிறார்.

    ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தனி ஒருவன். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிப்பில் 2015-ம் ஆண்டு வெளியான இந்த படத்தை மோகன் ராஜா இயக்கி இருந்தார். ஹிப் ஹாப் தமிழா இந்த படத்துக்கு இசையமைத்து இருந்தார். இன்றோடு இந்த படம் வெளியாகி எட்டு ஆண்டுகள் நிறைவடைந்தது.

    இதனை கொண்டாடும் வகையிலும், ரசிகர்களின் நீண்ட கால கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில், தனி ஒருவன் 2 படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகும் தனி ஒருவன் 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கும் என்று தயாரிப்பு நிறுவனம் வீடியோ வெளியிட்டு தெரிவித்து இருக்கிறது.

    • மோகன் ராஜாவுக்கு விருது வழங்கி கவுரவித்தனர்.
    • இப்படத்திற்கு 2015 தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதில் சிறந்த கதையாசியருக்கான விருது மோகன் ராஜாவுக்கு வழங்கப்பட்டது.

    2015 ஆம் ஆண்டு நடிகர் ஜெயம் ரவி,அரவிந்த் சாமி,நயன்தாரா நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில், கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் வெளிவந்த படம் "தனி ஒருவன்".

    இப்படம்  மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அரவிந்த சாமிக்கும், ஜெயம் ரவிக்கும் இந்த படம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்தார். படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் மிக பெரிய ஹிட் ஆனது.

    இப்படம் தெலுங்கு,கன்னடம் மொழியிலும் ரீமேக் செய்தார்கள்.2015 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைபடங்களில் மிக பெரிய வசூல் செய்த படம் தனி ஒருவன் என்பது குறிப்பிடத்தக்கது.

    படம் ரிலீஸ் ஆகி 8 ஆண்டு முடிந்த நிலையில் மோகன்ராஜா தனி ஒருவன் இரண்டாம் பாகம் வெளியிட போவதாக  வீடியோவை வெளியிட்டு அறிவித்தார்..இந்நிலையில் இப்படத்திற்கு 2015 தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதில் சிறந்த கதையாசியருக்கான விருது மோகன் ராஜாவுக்கு வழங்கப்பட்டது.

    இன்று முத்தமிழ் மன்றத்தில் நடைப்பெற்று வரும் விழாவில் மாநில செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் எம்.பி.சுவாமிநாதன் மற்றும் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மோகன் ராஜாவுக்கு விருது வழங்கி கவுரவித்தனர். .

    மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தில் பணிகள் முழுவீச்சில் நடப்பதாக மோகன் ராஜா கூறியிருக்கிறார்.
    கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகிய தனி ஒருவன் திரைப்படத்தின் பெரிய வெற்றிக்குப் பிறகு தனி ஒருவன் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாக மோகன் ராஜாவும், நடிகர் ஜெயம் ரவியும் அறிவித்தனர்.

    இந்தப் படத்திலும் ஜெயம் ரவி எஸ்பியாக நடிக்க உள்ளார். தடயவியல் துறை நிபுணராக நயன்தாரா நடிக்கிறார்.

    தனி ஒருவன் திரைப்படத்தின் முக்கியக் கதாபாத்திரமே அரவிந்த்சாமியின் சித்தார்த் அபிமன்யுதான். இரண்டாம் பாகம் எனும்போது, முதல் படத்திலிருந்த மாஸ் வில்லன் இன்னும் பிரமிப்பூட்டும் வகையில் இருக்க வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் மோகன் ராஜா உள்ளார்.



    தனி ஒருவன் 2 படத்திற்கான வேலைகள் சத்தமில்லாமல் நடந்து வருகிறது. இந்த நிலையில், மீண்டும் தனி ஒருவன் படத்தை பார்த்த இயக்குநர் ராம், ராஜா மீண்டும் தனி ஒருவன் படத்தை பார்தேன், மிகப் பெரிய உழைப்பு, அடுத்த பாகத்தை ரொம்ப கவனத்துடன் எடுங்கள் என்று கூறியிருக்கிறார்.

    அதற்கு மோகன் ராஜா அளித்த பதிலில், தனி ஒருவன் 2 படத்திற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. தனது உதவி இயக்குநர்களிடம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து விடலாமல்லவா? என்று கேட்டேன், 200% கண்டிப்பாக என்று கூறினார்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.


    ஜெயம் ரவி தற்போது கல்யாண் இயக்கத்தில் தனது 25-வது படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்த பிறகு இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தனி ஒருவன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உச்ச நட்சத்திரம் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. #ThaniOruvan2 #Mammootty
    தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாக மோகன் ராஜாவும், நடிகர் ஜெயம் ரவியும் கடந்த வாரம் அறிவித்தனர். இந்தப் படத்திலும் ஜெயம் ரவி எஸ்.பியாக நடிக்க உள்ளார். தடயவியல் துறை நிபுணராக நயன்தாரா நடிக்கிறார். மற்றொரு நாயகியாக சாயிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    தனி ஒருவன் திரைப்படத்தின் முக்கியக் கதாபாத்திரமே அரவிந்த்சாமியின் சித்தார்த் அபிமன்யுதான். இரண்டாம் பாகம் எனும்போது, முதல் படத்திலிருந்த மாஸ் வில்லன் இன்னும் பிரமிப்பூட்டும் வகையில் இருக்க வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். இப்போது இரண்டாம் பாகத்தில் சித்தார்த் அபிமன்யுவுக்கு நிகரான ஒரு வில்லனை உருவாக்க வேண்டும் என்ற சவால் ஏற்பட்டுள்ளது. 



    அந்த வகையில், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. #ThaniOruvan2 #JayamRavi #Mammootty

    மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நயன்தாரா, சாயிஷா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. #ThaniOruvan2 #JayamRavi
    2015-ஆம் ஆண்டு வெளியாகிய தனி ஒருவன் திரைப்படத்தின் பெரிய வெற்றிக்குப் பிறகு தனி ஒருவன் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாக மோகன் ராஜாவும், நடிகர் ஜெயம் ரவியும் கடந்த வாரம் அறிவித்தனர்.

    இந்தப் படத்திலும் ஜெயம் ரவி எஸ்பியாக நடிக்க உள்ளார். தடயவியல் துறை நிபுணராக நயன்தாரா நடிக்கிறார்.

    வனமகன் படத்தில் ஜெயம் ரவியுடன் ஜோடிபோட்ட சாயிஷாவும் இந்த படத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. வனமகன் படத்தில் தான் சாயிஷா தமிழில் அறிமுகமானார்.

    தனி ஒருவன் திரைப்படத்தின் முக்கியக் கதாபாத்திரமே அரவிந்த்சாமியின் சித்தார்த் அபிமன்யுதான். இரண்டாம் பாகம் எனும்போது, முதல் படத்திலிருந்த மாஸ் வில்லன் இன்னும் பிரமிப்பூட்டும் வகையில் இருக்க வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள்.



    ஆனால், சித்தார்த் அபிமன்யு என்ற வில்லன் சுட்டுக் கொல்லப்பட்டது போலக் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இப்போது இரண்டாம் பாகத்தில் சித்தார்த் அபிமன்யுவுக்கு நிகரான ஒரு வில்லனை உருவாக்க வேண்டும் என்ற சவால் ஏற்பட்டுள்ளது. அனேகமாக ஜெயம் ரவியே ஹீரோ, வில்லன் என்று 2 வேடங்களில் நடிக்கலாம் என்று கூறுகிறார்கள். #ThaniOruvan2 #JayamRavi #Nayanthara #Sayyeshaa

    வேலைக்காரன் படத்தை அடுத்து மோகன் ராஜா இயக்க இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பை முக்கியமான நாளான நேற்று வெளியிட்டிருக்கிறார். #MohanRaja
    மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் ‘தனி ஒருவன்’. இதில் ஜெயம் ரவியுடன் நயன்தாரா, அரவிந்த் சாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு சூப்பர் ஹிட்டானது.

    மேலும் ரீமேக் மூவிதான் மோகன் ராஜா இயக்குவார் என்று பெயரை தகர்த்து, சொந்த கதையையும் சிறப்பாக இயக்குவார் என்ற பெயரையும் அவருக்கு பெற்றுத் தந்தது. இப்படம் 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி வெளியானது. மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், முக்கிய அறிவிப்பை மோகன் ராஜா வெளியிட்டிருக்கிறார்.

    அதாவது, மீண்டும் ஜெயம் ரவியை வைத்து ‘தனி ஒருவன் 2’ படத்தை இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் பதிவு செய்திருக்கிறார்.



    இப்படத்தின் கதாநாயகி, மற்ற கதாபாத்திரங்கள் யார் என்ற தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ThaniOruvan2 #JayamRavi #MohanRaja
    ×