என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "The foundation stone laying ceremony"
- ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கலவை:
ஆற்காடு நகராட்சி தேவி நகர் பகுதியில் நகர்ப்புற சுகாதார வளாகம் கட்டிடம் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு 3-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஆனந்தன் தலைமை தாங்கினார்.
ஆற்காடு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு ஜெ.எல். ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
மேலும் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதியில் இருந்து ரூ12.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய உடற்பயிற்சி கூடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டித்தை திறந்து வைத்தார்.
இதில் நகர மன்ற துணை தலைவர் பவளகொடி சரவணன், நகர மன்ற உறுப்பினர்கள் முனவர்பாஷா, அணு அருண், ராஜலட்சுமி துரை, தொழிலதிபர் ஆர்.எஸ்.சேகர், ஏ.பி.ஜே அறக்கட்டளை தலைவர் கோபிநாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடவடிக்கை
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பின்னாவரம் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டடம் மற்றும் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் நெற்களம் அமைக்கும் பணி ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேல் கலந்துகொண்டு, திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
சேந்தமங்கலம் கிராமத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்டவும் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், ஒன்றிய குழு துணை தலைவர் தீனதயாளன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- வேலூர் எம்.பி.கதிர்ஆனந்த் அடிக்கல் நாட்டினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
காட்பாடியில் கூட்டுறவு நகரமைப்பு சங்கம் சார்பில் வணிக வளாகம் கட்ட ரூ.85.59 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
வணிக வளாகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. கூட்டுறவு சங்க தலைவர் ஜெயராமன் மற்றும் செயலாளர் மனோகரன் ஆகியோர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வேலூர் எம்.பி. கதிர்ஆனந்த் கலந்து கொண்டு அடி நாட்டினார்.
நிகழ்ச்சியில் 1-வது மண்டல தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா, பகுதி செயலாளர்கள் வன்னிய ராஜா, பரமசிவம், கூட்டுறவு சங்க இயக்குனர்கள் கே.எஸ் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறை ஊராட்சியில் உள்ள அ.கட்டுபடி கிராமத்திற்கு செல்லும் தார் சாலை கடந்த சில மாதங்களாக பழுதடைந்து காணப்பட்டது. குண்டும், குழியுமாக கிடந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி சாலை அமைக்க ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.
ஒன்றிய குழு தலைவர் திவ்யாகமல்பிரசாத், துணை தலைவர் கஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் தேவிசிவா, ஒன்றிய செயலாளர் கலைச்சந்தர், ஒன்றிய கவுன்சிலர்கள் சீனிவாசன், வேலாயுதம், துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி துணை தலைவர் தென்போஸ்கோ வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
- பூமி பூஜை நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சியில் முத்தனப்பள்ளி, மல்லப்பள்ளி மற்றும் ஏரியூர் ஆகிய பகுதிகளில் புதியதாக ரேசன் கடை அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.
விழாவிற்கு ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ்.சத்யா சதிஷ்குமார் தலைமை தாங்கினார். ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதிஷ்குமார் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக தேவராஜி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.
இதேபோல் நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி, நாயனசெருவு, வெள்ளநாயாக்கனேரி, பச்சூர், கொண்டகிந்தனப்பள்ளி ஆகிய பகுதிகளில் - அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார்சாலை அமைக்கும் பணியினையும் க.தேவராஜி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
நாட்டறம்பள்ளி ஒன்றியக்குழு தலைவர் வெண்மதி முனிசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.சாமுடி, பொதுக்குழு உறுப்பினர் கே.சாம்மண்ணன், கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் டி.அசோக்குமார், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன், மாவட்ட இளைஞரணி து.அமைப்பாளர் எம்.சிங்காரவேலன், மு.மாவட்ட தொண்டரணி து.அமைப்பாளர் எஸ்.ராஜா, உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பொதுமக்களுக்கு 2-ம் கட்டமாக 14 பேருக்கு வீட்டு மனை பட்டா
- ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. பணிகளை தொடங்கி வைத்தார்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்கா, பள்ளிகொண்டா பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைப்பெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் கலந்துக்கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
இதில் 6-வது வார்டு வேப்பங்கால் பகுதியில் புதிதாக ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் பஸ் நிறுத்த நிழற்கூடம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும் 40 ஆண்டுகளாக வேப்பங்கால் பகுதியில் வீட்டுமனை பட்டா இன்றி அரசு நிலத்தில் வசித்து வந்த 34 குடும்பங்களை சேர்ந்த பொது மக்களுக்கு 2-ம் கட்டமாக 14 நபர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கினார்.
இதனையடுத்து பொதுமக்களிடத்திலிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அன்னதானம் வழங்கினார்.
தொடர்ந்து 15-வது வார்டு சின்ன கோவிந்தம்பாடியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பஸ் நிறுத்தத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு. பாபு பங்கேற்றார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை தி.மு.க. நகர செயலாளர் ஜாகீர் உசேன் செய்திருந்தார்.
இதில் ஓன்றிய செயலாளர்கள் வெங்கடேசன், குமாரபாணடியன் பள்ளிகொண்டா பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி, தலைவர் சுபபிரியா துணை தலைவர் வசிம்அக்ரம் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- பொன்னகரத்தில் ஆதிகேசவ பெருமாள் கோவில் ராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது
- விழாவில் பொன்னகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அறந்தாங்கி:
மணமேல்குடி தாலுகா பொன்னகரம் மீனவ கிராமத்தில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தென் திருப்பதி என்றழைக்கப்படும், மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் இராஜகோபுரம் கட்டுவதற்கு அப்பகுதி கிராம மக்கள், ஊர் முக்கியஸ்தர்களால் தீர்மானிக்கப்பட்டது. ராஜகோபுரம் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட தி.மு.க. மாநில தேர்தல் பணிக்குழு செயலாளரும், மணமேல்குடி ஒன்றியக்குழுத் தலைவருமான பரணி கார்த்திகேயன் அடிக்கல்நாட்டி கோபுர கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.விழாவில் பொன்னகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அடிக்கல் நாட்டு விழாவிற்கு பின்னர் அன்னதானம் நடைபெற்றது.
- அரியலூர் மாவட்டத்தில் ரூ.8.15 கோடியில் சாலை தரம் உயர்த்துதல் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது
- மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியம், குழுமூரில் நெடுஞ்சாலைத்துறை – நபார்டு மற்றும் கிராம சாலைகள் அலகு மூலம் குழுமூர்-அயன்தத்தனூர் சாலை தரம் உயர்த்துதல் பணியினை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியது: தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் பொதுமக்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறுத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளான சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தமிழக அரசின் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதனடிப்படையில் ஊராட்சி ஒன்றிய சாலைகளை இதர மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்துதல் திட்டத்தின்கீழ் இச்சாலை தரம் உயர்த்தப்பட உள்ளது. இந்த சாலை 5 கண்களை உடைய உயர்மட்ட பாலமும், வடிகால் வாய்க்கால் பணியையும் உள்ளடக்கியது. இப்பணி ரூ.8.15 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளது.
குழுமூர்-அயன்தத்தனூர் சாலை தரம் உயர்த்துவதன் மூலம் வங்காரம், அயன்தத்தனூர், குழுமூர், சித்துடையார், வஞ்சினாபுரம், நல்லநாயக்கபுரம், அங்கனூர், சன்னாசிநல்லூர், முல்லையூர், ஆர்.எஸ்.மாத்தூர், படைவெட்டிக்குடிகாடு, சோழன்குடிகாடு ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மிகுந்த பயன்பெறுவார்கள்.நடைபெறும் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் திருச்சி கோட்டப்பொறியாளர் வடிவேல், உதவிக்கோட்டப் பொறியாளர் சரவணன், உதவிப்பொறியாளர் ராஜா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- அடிக்கல் நாட்டு விழா நடந்தது
- ஒன்றிய குழு தலைவர் உள்பட பிரமுகர்கள் பங்கேற்பு
நெமிலி:
நெமிலி அடுத்த பள்ளூர் கிராமத்தில் ஸ்ரீஅரசாலையம்மன் மற்றும் வாராகி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் வாராகி அம்மனை வேண்டி விரதம் இருந்து வழிபடும் பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை தரக்கூடிய அற்புத திருத்தலமாகும்.
வாராஹி அம்மன் கோவிலுக்கு சென்னை, பெங்களூர், வேலூர் காஞ்சிபுரம், திருத்தணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விஷேச நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து பூசணிக்காயில் விளக்கு ஏற்றி அம்மனை வழிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக கோவில் முன்புறம் மண்டபம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனையடுத்து உபயதா ரர்களான திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ், ராமச் சந்திரன், நாகுஷா, கந்தசாமி, கன்னியப்பன் உள்ளிட்ட உபயதார்களின் மூலம் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் கோவில் முன்பு மண்டபம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேல் மண்டபம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
அப்போது ஊராட்சி மன்ற தலைவர் பிரதாப் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் உடனிருந்தனர்.
- திருப்பூர் திருமுருகன் ரியல் எஸ்டேட் நிறுவனர் மோகன் தானமாக வழங்கினார்.
- ஊராட்சி மன்ற செயலாளர் அமிர்தலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெருமாநல்லூர் :
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஒன்றியம், சுண்டக்காம்பாளையம் ஊராட்சியின் புதிய அலுவலக கட்டிட பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதற்கான இடத்தை திருப்பூர் திருமுருகன் ரியல் எஸ்டேட் நிறுவனர் மோகன் தானமாக வழங்கினார். கட்டிட மதிப்பீடு ரூ. 42 லட்சத்து 65 ஆயிரம் ஆகும்.
அடிக்கல் நாட்டு விழாவில் ஊத்துக்குளி ஒன்றிய தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி, சுண்டக்காம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த் என்கிற லோகநாதன், துணைத்தலைவர் தமிழ்செல்வி ராகவன், வார்டு உறுப்பினர்கள் கீதா சரவணன், கோகுல் பிரசாத், பழனியப்பன், பூங்கொடி செல்வம், சண்முகராஜ், மகேஸ்வரி மூர்த்தி, சாந்தாமணி மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர் அமிர்தலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செங்கம்:
புதுப்பாளையம் உள்வட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதூர் செங்கம் கிராமத்தில் உள்ள புதூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் திருமண மண்டபம் கட்ட காணொளி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மேற்கண்ட கோவில் வளாகத்தில் நடைபெற்ற பூமி பூஜை விழா நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி, திருவண்ணாமலை அண்ணாதுரை எம்.பி., கலசப்பாக்கம் சரவணன் எம்.எல்.ஏ, புதுப்பாளையம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் சுந்தரபாண்டியன், நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை பரம்பரை கோவில் அறங்காவலர்கள் ஜெயக்குமார் மற்றும் வெங்கட்ராமன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் இணை ஆணையர், செங்கம் தாசில்தார், முனுசாமி புதுபாளையம் வருவாய் ஆய்வாளர் (பொ), சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர்கள், செங்கம் இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர், ஊர் முக்கியஸ்தர்கள் தலைவர் சங்கர், தொண்டரணி குமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்