என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "the kashmir files"
- ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் தேசிய விருது வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
- காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம்.
இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அடங்கிய திரைத் துறை சார்ந்தவர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதையடுத்து தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் நேற்று வெளியானது.
இதில் தேசிய விருது வென்றவர்களுக்கு பலதரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திரைத்துறை சார்ந்த பிரபலங்கள், நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் தேசிய விருது வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த முறை தேசிய விருது அறிவிக்கப்பட்டதும், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த படங்களுக்கு விருது அறிவிக்கப்படாததற்கு ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
Congratulations to all the #NationalFilmAwards2023 #kashmir files for being judged as a worst film of the decade.
— pcsreeramISC (@pcsreeram) August 25, 2023
மேலும் பலர், இந்த படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டு இருக்கக் கூடாது என்று சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், தேசிய விருது வென்றவர்களுக்கு நாட்டின் முன்னணி ஒளிப்பதிவாளரான பி.சி. ஸ்ரீராம் தேசிய விருது வென்றவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் (முன்பு டுவிட்டர்) தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "தேசிய விருது வென்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த தசாப்தத்தின் மிக மோசமான படமாக காஷ்மீர் ஃபைல்ஸ் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருப்பதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
- 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது.
- தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் நேற்று வெளியானது.
இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன.
இதையடுத்து தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் நேற்று வெளியானது. இதில், சிறந்த தேசிய ஒருமைப்பாட்டு திரைப்படமாக 'தி காஷ்மீர் பைல்ஸ்' அறிவிக்கப்பட்டது. இது மக்கள் பலரின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விருதிற்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடுநிலையான திரைவிமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட திரைப்படத்துக்குத் தேசிய ஒருமைப்பாட்டுக்கான விருது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "69-வது தேசிய விருதில் தமிழில் சிறந்த படமாகத் தேர்வாகியிருக்கும் கடைசிவிவசாயி படக்குழுவினருக்கு என் பாராட்டுகள்!
மேலும், இரவின்நிழல் படத்தில் 'மாயவா சாயவா' பாடலுக்காகச் சிறந்த பின்னணிப் பாடகி விருதை வென்றுள்ள ஸ்ரேயா கோஷல், கருவறை ஆவணப்படத்துக்காகச் சிறப்புச் சான்றிதழ் வென்றுள்ள இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சிறந்த கல்வித் திரைப்படத்துக்கான பிரிவில் விருதுக்குத் தேர்வாகியுள்ள சிற்பிகளின்சிற்பங்கள் படக்குழுவினர் ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மறுபுறம், சர்ச்சைக்குரிய திரைப்படம் என நடுநிலையான திரைவிமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட திரைப்படத்துக்குத் தேசிய ஒருமைப்பாட்டுக்கான #NargisDutt விருது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இலக்கியங்கள், திரைப்படங்களுக்கு அளிக்கும் விருதுகளில் அரசியல் சார்புத்தன்மை இல்லாமல் இருப்பதுதான் அந்த விருதுகளைக் காலங்கடந்தும் பெருமைக்குரியவையாக உயர்த்திப் பிடிக்கும். மலிவான அரசியலுக்காகத் தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக் கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
#69thNationalFilmAwards -இல் தமிழில் சிறந்த படமாகத் தேர்வாகியிருக்கும் #கடைசிவிவசாயி படக்குழுவினருக்கு என் பாராட்டுகள்! @VijaySethuOffl #Manikandan #நல்லாண்டி
— M.K.Stalin (@mkstalin) August 24, 2023
மேலும், #இரவின்நிழல் படத்தில் 'மாயவா சாயவா' பாடலுக்காகச் சிறந்த பின்னணிப் பாடகி விருதை வென்றுள்ள @shreyaghoshal,… pic.twitter.com/Bc2veRY5gs
- பிரபாஸ் நடித்துள்ள 'ஆதிபுருஷ்' திரைப்படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்தின் டிக்கெட்டுகளை அரசு பள்ளி மாணவரகள், ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களில் இலவசமாக வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகியுள்ள படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர்கள், டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. 'ஆதிபுருஷ்' படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கின் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விட போவதாகவும் அந்த டிக்கெட் விற்கப்படாது எனவும் படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில் தெலங்கானாவில் அரசு பள்ளிகள், ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களில் ஆதிபுருஷ் பட டிக்கெட்டுகள் இலவசமாக வழங்க உள்ளதாக "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" பட தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். ராமரின் மீது கொண்ட பக்தியின் காரணமாக, 10 ஆயிரத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகளை வழங்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
- 'தி காஷ்மீர் பைல்ஸ்'. 1990-களில் காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது.
- இப்படத்தை தேர்வுக்குழு தலைவரும் இஸ்ரேலிய திரைப்பட இயக்குனருமான நாடவ் லேபிட் சமீபத்தில் விமர்சித்தார்.
இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'தி காஷ்மீர் பைல்ஸ்'. 1990-களில் காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு சில மாநிலங்களில் வரி விலக்கும் கொடுக்கப்பட்டு இருந்தது. இப்படம் மொத்தமாக ரூ.340 கோடியை வசூல் செய்ததாக கூறப்பட்டது.
இதையடுத்து சமீபத்தில் 53-வது சர்வதேச கோவா திரைப்பட விழாவின் நிறைவு நாளில் பேசிய தேர்வுக்குழு தலைவரும் இஸ்ரேலிய திரைப்பட இயக்குனருமான நாடவ் லேபிட், 'தி காஷ்மீர் பைல்ஸ்' படம் திரையிடப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தி காஷ்மீர் பைல்ஸ்
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ் 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படத்தின் இயக்குனரை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, "பதானை தடை செய்ய நினைத்தார்கள் ஆனால் அதன் வசூல் ரூ.700 கோடியை தாண்டியுள்ளது. 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் முட்டாள்தனமான திரைப்படங்களில் ஒன்று. அதை தயாரித்தவர் யார் என்று எங்களுக்குத் தெரியும்.
படத்தை பார்த்த சர்வதேச ஜூரி இப்படத்தை விமர்சித்தார். இந்த சூழலில் அப்படத்தின் இயக்குனர், எனக்கு ஏன் ஆஸ்கர் கிடைக்கவில்லை எனக் கேள்வி கேட்கிறார். ஆஸ்கர் இல்லை, ஒரு பாஸ்கர் விருது கூட கிடைக்காது" என்று கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
விவேக் அக்னிஹோத்ரி
இந்நிலையில், 'தி காஷ்மீர் பைல்ஸ்' படத்தின் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி தற்போது இதற்கு பதிலளிக்கும் விதமாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் பல நக்சல்ஸ்களுக்கு தூக்கமில்லாத இரவுகளை கொடுத்துள்ளது. பார்வையாளர்களை குரைக்கும் நாய் என்ற ஒருவர், படம் வெளியாகி ஓராண்டு கழித்தும் கஷ்டப்படுகிறார்" என பதிவிட்டுள்ளார்.
A small, people's film #TheKashmirFiles has given sleepless nights to #UrbanNaxals so much that one of their Pidi is troubled even after one year, calling its viewer's barking dogs. And Mr. Andhkaar Raj, how can I get Bhaskar, she/he is all yours. Forever. pic.twitter.com/BbUMadCN8F
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) February 9, 2023
- இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’.
- சிறந்த படத்திற்கான பரிசீலனைக்காக தேர்வு செய்யப்பட்ட 301 படங்களில் 'தி காஷ்மீர் பைல்ஸ்' இடம்பிடித்துள்ளது.
இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'தி காஷ்மீர் பைல்ஸ்'. 1990-களில் காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு சில மாநிலங்களில் வரி விலக்கும் கொடுக்கப்பட்டு இருந்தது. இப்படம் மொத்தமாக ரூ.340 கோடியை வசூல் செய்ததாக கூறப்பட்டது.
விவேக் அக்னிஹோத்ரி
இந்நிலையில், 95-வது ஆஸ்கர் விருதுகளில் சிறந்த படத்தின் பரிசீலனைக்காக தேர்வு செய்யப்பட்ட 301 படங்களில் இந்தியத் திரைப்படமான 'தி காஷ்மீர் பைல்ஸ்' இடம்பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் மேலும் நான்கு இந்தியப் படங்களும் இடம்பெற்றுள்ளன. இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ள இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி, இந்திய சினிமாவுக்கு இது ஒரு பெரிய செய்தி என்று பதிவிட்டுள்ளார்.
விவேக் அக்னிஹோத்ரி
மேலும், பல்லவி ஜோஷி, அனுபம் கேர், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் தர்ஷன் குமார் ஆகியோர் 'சிறந்த நடிகர்' விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
BIG ANNOUNCEMENT: #TheKashmirFiles has been shortlisted for #Oscars2023 in the first list of @TheAcademy. It's one of the 5 films from India. I wish all of them very best. A great year for Indian cinema. ???
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) January 10, 2023
- மதிப்புமிக்க திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் இந்த படம் வந்தது சரியானது அல்ல என கருத்து.
- கருத்து குறித்து இஸ்ரேலிய திரைப்பட இயக்குனர் நாடவ் லேபிட் விளக்கம்.
53வது சர்வதேச கோவா திரைப்பட விழா கோலாகலமாக நடைபெற்று நிறைவடைந்தது. திரைப்பட விழாவில் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய 'தி காஷ்மீர் பைல்ஸ்' படம் திரையிடப்பட்டது. இப்படத்திற்கு விருதுகள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும் நிறைவு நாளில் பேசிய தேர்வுக்குழு தலைவரும் இஸ்ரேலிய திரைப்பட இயக்குனருமான நாடவ் லேபிட், தி காஷ்மீர் பைல்ஸ் படம் திரையிடப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்தார்.
அவர் பேசுகையில், ‛தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம். பிரசார தன்மை கொண்டதாக உள்ளது. இது போன்ற மிகவும் மதிப்புமிக்க திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் இந்த படம் வந்தது சரியானது அல்ல. இத்திரைப்படத்தை திரையிடப்பட்டதற்கு அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என்றார்.
நாடவ் லேபிட்
அவரது பேச்சு விழாவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்வுக்குழுவின் நாடவ் லேபிட்டுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளும் ஆதரவும் தெரிவித்தனர். மேலும், இஸ்ரேல் தூதர் நவோர் கிலோன், நடாவ் லேபிட் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்தும் பிறகு மன்னிப்பு கேட்டும் இருந்தார்.
இந்நிலையில், நடாவ் லேபிட் இந்த சர்ச்சை தொடர்பாக பேசியதாவது, "நான் யார் மனதையும் புண்படுத்த நினைக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை அவமதிக்கவும் நினைக்கவில்லை. என் வார்த்தைகள் புரிந்துகொள்ளப்பட்ட விதம் வருத்தமளிக்கிறது. நான் அங்கு பேசியது என் கருத்து மட்டுமல்ல. உடன் இருந்த நடுவர்களின் எண்ண ஓட்டங்களை பிரதிபலிப்பதாகவே நான் பேசினேன்.‛தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் பிரசார தன்மை கொண்டதாக உள்ளது என்பதை மீண்டும் மீண்டும் சொல்வேன்" என்று பேசினார்.
- மதிப்புமிக்க திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் இந்த படம் வந்தது சரியானது அல்ல என கருத்து.
- இது குறித்து அவமானம் இப்போ அதிகாரப்பூர்வமானது என்று பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்திருந்தார்.
53வது சர்வதேச கோவா திரைப்பட விழா கோலாகலமாக நடைபெற்று நிறைவடைந்தது. திரைப்பட விழாவில் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய 'தி காஷ்மீர் பைல்ஸ்' படம் திரையிடப்பட்டது. இப்படத்திற்கு விருதுகள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும் நிறைவு நாளில் பேசிய தேர்வுக்குழு தலைவரும் இஸ்ரேலிய திரைப்பட இயக்குனருமான நாடவ் லேபிட், தி காஷ்மீர் பைல்ஸ் படம் திரையிடப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்தார்.
அவர் பேசுகையில், ‛தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம். பிரசார தன்மை கொண்டதாக உள்ளது. இது போன்ற மிகவும் மதிப்புமிக்க திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் இந்த படம் வந்தது சரியானது அல்ல. இத்திரைப்படத்தை திரையிடப்பட்டதற்கு அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என்றார். அவரது பேச்சு விழாவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்வுக்குழுவின் நாடவ் லேபிட்டுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளும் ஆதரவும் தெரிவித்தனர்.
நாடவ் லேபிட் தெரிவித்த கருத்து குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், அவமானம் இப்போ அதிகாரப்பூர்வமானது என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் அனுபம் கேர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், பொய் எவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தாலும் அது வீழ்ந்துவிடும். உண்மையின் முன்னால் அது தாக்குப் பிடிக்காது என்றார்.
தேர்வுக்குழு தலைவரின் கருத்துக்கு தி காஷ்மீர் பைல்ஸ் பட இயக்குனர் அக்னிஹோத்ரி, ‛உண்மை எப்போதும் பேராபத்தானது. அது சிலரை பொய் பேசவைத்துவிடும்' என அவர் காட்டமாக கூறியது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்