search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The thief was arrested"

    • 2 கார் பறிமுதல்
    • போலீசார் விசாரனை

    கண்ணமங்கலம்:

    சந்தவாசல் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்த போது திருடப்பட்ட கார் என்பதுதெரியவந்தது.

    விசாரணையில் அவர் முனியந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 24) என்பதும்,திருடப்பட்ட கார் வெள்ளூர் குஜால்பேட்டையில் வசிக்கும் சத்துணவு அமைப்பாளர் மணிவண்ணனுக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் இருந்து மற்றொரு காரையும்

    திருடியது தெரியவந்தது. இதையடுத்து 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்தை கைப்பற்றினர்

    ராணிப்பேட்டை:

    வாலாஜாவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 60) இவர் கடந்த 12-ந் தேதி வங்கிக்கு சென்று ரூ.5 லட்சத்தை எடுத்தார். பின்னர் அந்த பணத்தை தனது பைக்கின் பெட்டியில் வைத்து கொண்டு வீட்டிற்கு சென்றார்.

    அப்போது வழியில் சோளிங்கர் சாலையில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றுள்ளார். வெளியே வந்து பார்த்தபோது பைக் பெட்டியில் இருந்த ரூ.5 லட்சத்தை யாரோ மர்ம நபர் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வாலாஜா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் வாலாஜாவை சேர்ந்த பிரதீப்குமார் (22) என்பவர் கோவிந்தராஜின் பணத்தை திருடியது தெரிந்தது.

    இதையடுத்து போலீசார் பிரதீப்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்தை கைப்பற்றினர்.

    • மேலும் 2 பேருக்கு வலைவீச்சு
    • கண்காணிப்பு கேமரா பதிவால் சிக்கினார்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் ஊராட்சி லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சுகுமார். இவர் அதே பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் பூஜை செய்து வருகிறார்.

    கடந்த 14-ந் தேதி காலை சுகுமார் முத் துமாரியம்மன் கோவிலை திறக்க சென்ற போது கோவிலில் வைத்திருந்த உண்டியல் திருடு போனது தெரிய வந்தது. இதனை அடுத்து சுகுமார் ஜோலார் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்மன் கோவில் உண்டியலை திருடிய நபர்களை கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து தேடி வந்தனர்.

    அதில் ஒரே மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் உண் டியலை திருடிக் கொண்டு செல்லும் காட்சி பதிவாகி இருந் தது. இந்த நிலையில் நேற்று ஜோலார்பேட்டை அருகே உள்ள தாமலேரி முத்தூர் மேம்பால பகுதியில் இன்ஸ்பெக்டர் மங் கையர்கரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த வாலிபரை நிறுத்தியபோது சி.சி.டி.வி. கேமராவில் பதிவானவர் அடையாளம் இருந்தது.

    விசாரணையில் அம்மன் கோவிலில் உண்டியலை திருடிச் சென்ற வாலிபர் அவர்தான் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் திருப்பத்தூர் போஸ்கோ நகர் பகுதியை சேர்ந்த அர்ஜுன் என்பவரின் மகன் ஜிவித்கு மார் (வயது 24) என்பதும் இவருடன் வினோத்குமார், ஆனந்த குமார் ஆகியோர் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    திருடிய பணத்தை மது குடிக்க பயன்படுத்தியுள்ளனர். இதனையடுத்து ஜிவித்குமார்போலீசார் கைது செய்து திருப் பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்த னர். மேலும் தலைமறைவாக உள்ள வினோத்குமார் மற்றும் ஆனந்தகுமார் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வரு. கின்றனர்.

    • 15 வாகனங்கள் பறிமுதல்
    • ெஜயிலில் அடைத்தனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்டவர்களை போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் போலீஸ் துணை கண்காணிப்பாளர் செந்தில் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தனிப்படை போலீசார் திருப்பத்தூர் தாம லேரிமுத்தூர் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சந்தேகப்படும்படியான நபரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் மாடப்பள்ளி ஊராட்சி கோனேரிகுப்பத்தை சேர்ந்த பாலாஜி (வயது 20) என்பது தெரியவந்தது. தொடர்ந்துவிசாரணையில் அவர் ஜோலார்பேட்டை, குசிலாப்பட்டு, ஆலங்காயம், நாட்டறம்பள்ளி உள்ளிட்ட

    சுற்றுவட்டார பகுதிகளில் இரு சக்கர வாகனம் திருடியதாக ஒப்புக்கொண்டார்.

    அவரிடம் இருந்த 15 இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து குரிசிலாப்பட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து பாலாஜியை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த மோரணம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 40). இவரது மனைவி கோமதி. இவர்கள் சொந்தமாக அதே பகுதியில் ஹாலோ பிளாக் கடை நடத்தி வருகின்றனர்.

    நேற்று காலை கடையை திறப்பதற்காக கணவன், மனைவி சென்றனர். அப்போது வாலிபர் ஒருவர் ஹாலோ பிளாக் செய்யும் மெஷினை திருடி கொண்டு ஓட முயன்றார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன் மனைவி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் ஓடிவந்து வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.

    அவர் செய்யாறு அடுத்த சின்ன செங்காடுவை சேர்ந்த தனசேகர் (40)என்பது தெரியவந்தது. பின்னர் பொதுமக்கள் உதவியுடன் பிடிபட்ட தனசேகரை மோரணம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசிடம் ஒப்படைத்தனர். போலீசார் தனசேகர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    மேலும் திருட்டு சம்பந்தமாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினார்
    • கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் பறிமுதல்

    வேலூர்:

    வேலூர் சேண்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 37).இவர் தோட்டப்பாளையம் காட்பாடி மெயின் ரோட்டில் செல்போன் கடை வைத்துள்ளார்.

    இவரது கடையில் சிமெண்ட் கூரையை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். கடையில் இருந்த 5 செல்போன் மற்றும் செல்போன் சம்பந்தப்பட்ட ரூ.15,000 மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இதுகுறித்து மணிகண்டன் வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜந்தா தலைமையிலான போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

    மேலும் தோட்டப்பா ளையம் காட்பாடி ரோட்டில் பகுதியில் உள்ள கண்கா ணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அதில் செல்போன் கடையில் கொள்ளையடித்து விட்டு சென்ற மர்ம நபர்கள் படம் பதிவாகி இருந்தது.

    இதன் மூலம் விசாரணை நடத்தியதில் கொள்ளையில் ஈடுபட்டது மக்கான் அம்பேத்கர் நகரை சேர்ந்த விஜய் (வயது 26) மற்றும் சதீஷ் என்பது தெரியவந்தது. இதில் விஜயை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து கடையில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ள சதீஷை போலீசார் தேடி வருகின்றனர்.

    • அலுமினிய பொருட்கள் அபேஸ்
    • போலீசுார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டைமாவட்டம் மேல்விஷாரம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் கயூம் (வயது 39). இவர் அதேப் பகு தியில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார்.

    கடந்த சில மாதங்களாக பயிற்சி பள்ளியை திறக்காமல் மூடியே வைத்துள்ளார். பின் னர் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் திறந்து உள்ளார். அப்போது பயிற்சி பள்ளியின் உள்ளே வைக்கப்பட்டிருந்த அலுமினிய பொருட்கள், ஒயர் மற்றும் கருவிகள், இரும்பு கம்பிகள் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து அப்துல் கயூம், ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேல்விஷாரம் பகுதியை சேர்ந்த அன்சாரி (21) என்ற வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர்.

    விசா ரணையில் அவர் ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் திருடியது தெரியவந்தது. அதைத்தொ டர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • போலீசார் விசாரணை
    • ஜெயிலில் அடைப்பு

    ஜோலார்பேட்டை:

    திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நல்ல தண்ணீர் குளம் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 35). இவர் போத்தனூர் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 27 -ந் தேதி விடுமுறையில் பள்ளிப்பட்டுக்கு வந்துள்ளார்.

    பின்னர் விடுமுறை முடித்து 29-ந் தேதி மீண்டும் பணிக்கு செல்ல ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொதுப்பெட்டியில் கணேசன் பயணம் செய்து கொண்டிந்தார்.

    அப்போது சிறிது நேரம் அசந்து தூங்கினார். ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் வரும்போது விழித்துப் பார்த்தபோது மேல்பாக்கெட்டில் வைத்து இருந்த சுமார் ரூ.10,000 மதிப்புள்ள செல்போன், மாயமானது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கணேசன் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் சுற்றி திரிந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வேடல் பெரிய தெரு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சங்கர் (34) என்பவர் கணேசன் செல்போனை திருடியது ெதரிந்தது.

    பின்னர் செல்போன் பறிமுதல் செய்தனர். மேலும் செல்போன் திருடிய சங்கரை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ரோந்து பணியில் ஈடுபட்டபோது சிக்கினார்
    • தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய லட்சுமி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீ சார் அரக்கோணம், புளியமங்க லம் மற்றும் மோசூர் ஆகிய ரெயில் நிலையங்களிளில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது புளியமங்கலம் ரெயில் நிலையத்தில் நின்றிருந்த 2 வாலிபர்கள் போலீசார் வருவதை கண்டதும் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டி சென்று ஒருவரை மடக்கி பிடித்த னர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர் அரக்கோ ணம் பழனிபேட்டை பகுதியை சேர்ந்த செல்வம் மகன் வசந்த ராஜ் (வயது 30), என்பதும், ரெயில் பயணிகளிடம் செல் போன் திருட்டில் ஈடுபட்டு வந்த தும் தெரியவந்தது.

    இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து செல் போன் மற்றும் ரூ.1000 பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பி ஓடிய மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • 15 பவுன் தங்க நகை பறிமுதல்
    • திருடனை பிடித்த போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு

    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஹபிப் ரஹ்மான் மகன் அப்துல் பாஷா (33). இவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் பெண்களை குறி வைத்து தொடர் வழிப்பறி மற்றும் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில் திருப்பத்தூர் அருகே பாச்சல் மேம்பாலத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்க நகை பறித்து சென்றது மற்றும் ஜோலார்பேட்டை, பெரி யகரம், கண்ணாலபட்டி, உள்ளிட்ட பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணம் நகைகளை கொள்ளை அடிப்பது உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த வழக்குகளில் தொடர்பு டைய குற்றவாளியை பிடிக்க திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பெயரில் தனிப்படை அமைத்து தீவிரமாக குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் சந்தேகமான முறையில் சுற்றித்திரிந்த அப்துல் பாஷாவை டவுன் போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

    அவரை திருப்பத்தூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவத்தில் ஈடு பட்டதை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து 15, பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி மற்றும் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய பலே திருடன் அப்துல் பாஷாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்,

    தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பல திருடனை பிடித்த போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பாராட்டுகளை தெரிவித்தார்.

    • 12 பவுன் நகை அபேஸ்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டைமாவட்டம் தக்கோலம் பகுதியை சேர்ந்த முனுசாமி (வயது 68) என்பவ ரது வீட்டில் 12 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் தக்கோலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இந்த நிலையில் நேற்று காலை புதுகேசாவரம் பகுதி யில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழி யாக பைக்கில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், பாணாவரம் பகுதியை சேர்ந்த மதன் (30) என்பதும், முனுசாமி வீட்டில் நகைகள் திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மதனை கைது செய்தனர்.

    ×