என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Thef"
- ரங்கம்மாள் கோவில் வீதியில் மோட்டார் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார்.
- லேப்டாப், 2 செல்போன்கள், ரூ. 4 ஆயிரத்தை மர்ம நபர் திருடி சென்றனர்.
கோவை:
கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 33). இவர் பாப்பநாயக்கன்பாளையம் ரங்கம்மாள் கோவில் வீதியில் மோட்டார் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றனர். மறுநாள் காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ரமேஷ்குமாரை தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.
அவர் கடைக்கு சென்று பார்த்த போது கடையில் வைத்திருந்த ஒரு லேப்டாப், 2 செல்போன்கள், ரூ. 4 ஆயிரத்தை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. மேலும் மர்ம நபர் தனது அடையாளம் தெரியாமல் இருக்க கடையில் இருந்த சி.சி.டி.வி காமிராவை உடைத்து சென்றார்.
இது குறித்து ரமேஷ்குமார் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கடையின் பூட்டை உடைத்து லேப்டாப், செல்போன்களை திருடி சென்றது அம்மன்குளம் ஏரிமேட்டை சேர்ந்த முருகன் (எ) குண்டு முருகன் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
- மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் வியாபாரி-பெண்ணிடம் 43 பவுன் நகைகள் திருட்டு நடந்துள்ளது
- தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை தெற்கு வாசல் எழுத்தாணிக்கார தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர் (44). இவர் அந்த பகுதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார். அவருக்கு தேனியில் இருந்து 24 பவுன் நகை செய்து தரும்படி ஆர்டர் வந்துள்ளது.
ராஜசேகர்அந்த நகைகளுடன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். மோட்டார் சைக்கிள் முன்பு உள்ள பையில், 24 பவுன் நகையை வைத்திருந்தார். அதனை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரப்பாளையம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த பழனிச்சாமி மனைவி பூமதி (வயது 47). சம்பவத்தன்று மாலை இவர் ஷேர் ஆட்டோவில் அவனியாபுரத்தில் இருந்து, ஆரப்பாளையத்துக்கு வந்து கொண்டிருந்தார்.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் பூமதியின் நகைப்பையை பறித்துக்கொண்டு தப்பி விட்டனர். அதில் 19 பவுன் தங்க நகைகள் இருந்தன.இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்