என் மலர்
நீங்கள் தேடியது "theri"
- வருண் தவான் நடித்து வரும் திரைப்படம் ‘பேபி ஜான்’.
- இந்த படத்தை இயக்குனர் அட்லீ தயாரிக்கிறார்.
இயக்குனர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'பேபி ஜான்'. தமிழில் வெளியான 'தெறி' திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் கீர்த்தி சுரேஷ், நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். ஆக்ஷன் எண்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் முராத் கெடானி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் பிரியா அட்லீ ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பேபி ஜான் போஸ்டர்
இந்நிலையில், 'பேபி ஜான்' திரைப்படத்தில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற மே மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
Hold on tight, the ride is about to get wild. #BabyJohn coming to your nearest theaters on May 31st!@Varun_dvn @Atlee_dir @priyaatlee @GabbiWamiqa @kalees_dir @MuradKhetani #JyotiDeshpande @bindasbhidu @rajpalofficial @sumitaroraa @MusicThaman @jiostudios @aforapple_offcl… pic.twitter.com/AjAraKlM7r
— Keerthy Suresh (@KeerthyOfficial) February 7, 2024
- ஷாருக்கானை வைத்து அவர் இயக்கிய ஜவான் படம் சர்வதேச அளவில் வெளியாகி வரவேற்பை பெற்றது
- விஜய் நடித்த தெறி படத்தை இந்தி மொழியில் நடிகரான வருண் தவான் வைத்து ரீமேக் செய்துவருகிறார்.
அட்லி தமிழ் திரை உலகத்தில் ஒலித்துக் கொண்டிருந்த பெயர் இன்று இந்திய திரை உலகமே உச்சரிக்கும் பெயராக உயர்ந்து நிற்கிறது.
ரஜினி நடித்த எந்திரன், விஜய் நடித்த நண்பன் ஆகிய படங்களில் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜாராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. தொடர்ந்து விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார்.
இந்த படங்களுக்கு கிடைத்த வெற்றியை அடுத்து அட்லியின் மார்க்கெட் உச்சத்தை அடைந்தது. இந்த நிலையில் பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட அட்லி இந்தி திரை உலகில் தடம் பதித்தார்.
ஷாருக்கானை வைத்து அவர் இயக்கிய ஜவான் படம் சர்வதேச அளவில் வெளியாகி வரவேற்பை பெற்றதுடன் ரூ.1,200 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்தது. ஜவானுக்காக பல புகழையும் பல விருதுகளையும் அட்லீக்கு பெற்றுக் கொடுத்தது.
இதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக மும்பையில் அலுவலகம் தொடங்கியுள்ளார். விஜய் நடித்த தெறி படத்தை இந்தி மொழியில் நடிகரான வருண் தவான் வைத்து ரீமேக் செய்துவருகிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ராஜ்பால் யாதவ், வமிக்கா கபி போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
அடுத்ததாக ஹாலிவுட் படங்களை அட்லி இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. என் வெற்றிக்கு முக்கிய காரணமே எனது மனைவி பிரியாதான் என பல மேடைகளில் பேசி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆர்வம் கொண்ட அட்லியும், பிரியாவும் விதவிதமான ஸ்டைலில் உடைகளில் 'போட்டோ சூட்' எடுத்து சமீப காலமாக வெளியிட்டு வருகின்றனர்.
அதில் அவரது மனைவியான பிரியா இன்று அவரது குழந்தையை தூக்கி கொஞ்சிய படியே வாரிசு படத்தை பார்ப்பதுப்போல் இருக்கும் வீடியோவை அட்லி அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சில காலம் இடைவெளி விட்ட சமந்தா நோய் குணமான நிலையில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
- இந்நிலையில் சமந்தா நேற்று நடந்த ”எல்லே சஸ்டேய்னபிலிட்டி' விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் சமந்தா. நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்களுக்குள் விவாகரத்து ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய சமந்தா திடீரென மயோசிடிஸ் என்ற அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக சினிமா நடிப்புக்கு சில காலம் இடைவெளி விட்ட சமந்தா நோய் குணமான நிலையில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் சமந்தா நேற்று நடந்த "எல்லே சஸ்டேய்னபிலிட்டி' விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். விழாவுக்கு 2016-ஆம் ஆண்டு நாகசைதன்யாவுடன் நடந்த திருமணத்தின் போது அணிந்திருந்த கவுனை அணிந்து வந்தார். அந்த கவுனில் என்ன சிறப்பு என்று நீங்கள் கேட்கலாம். அந்த கல்யாண கவுனை மீண்டும் ஆடை வடிவமைப்பு செய்து அதை கருப்பு நிறமாக மாற்றியுள்ளார் சமந்தா.

இதுக்குறித்து ஆடைவடிவமைப்பாளர் கிரேஷா பஜாஜ் எப்படி சமந்தாவின் கல்யாண கவுன் மாற்றி வடிவமைக்கப்பட்டது என்ற வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் எப்போதும் புதிய நினைவுகளை உருவாக்க வேண்டும். நடக்க எப்போதும் புதிய பாதைகள் உள்ளன. எப்பொழுதும் புதிய கதைகள் சொல்ல இருக்கிறது. சமந்தாவுடன் இணைந்து ஒரு புதிய நினைவை உருவாக்கவும், மற்றொரு கதையைச் சொல்லவும் நாங்கள் விரும்பினோம். அழகு எப்பொழுதும் நிரந்தரம் அது ஒவ்வொரு நாளும் புதிய வடிவத்தை எடுத்துக்கொள்கிறது. என்ரு பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா பகிர்ந்துள்ளார். இது பற்றி அவரது ஆடை வடிவமைப்பாளர் வெளியிட்டுள்ள பதிவில் சமந்தாவுடன் இணைந்து பணியாற்றுவதை நாங்கள் விரும்பினோம். அவருக்கு புதிய நினைவை ஏற்படுத்தவும் உதவினோம். அது அவரது திருமண கவுன்போன்று உருவாக்கப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டது என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'பேபி ஜான்'.
- இது குறித்து படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இயக்குனர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'பேபி ஜான்'. தமிழில் வெளியான 'தெறி' திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் கீர்த்தி சுரேஷ், நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். ஆக்ஷன் எண்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குனர் அட்லியின் தயாரிப்பு நிறுவனமான ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் முராத் கெடானி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் பிரியா அட்லீ ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டதை எட்டியுள்ளது.
தற்பொழுது படத்தின் புதிய அப்டேட்டாக படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 வெளியாகவுள்ளது. இது குறித்து படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் வருண் தவானை சுற்றி ஒரு கூட்டமே கத்தியுடன் சூழ்ந்துள்ளது. இவர் ஒற்றையாளாக முறைத்துக் கொண்டே நிற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர் படத்தின் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
அதே டிசம்பர் 25 அன்று அமீர்கான் மற்றும் ஜெனிலியா நடித்திருக்கும் சிதாரே சமீன் பர் படமும் அன்று வெளியாகவுள்ளதால், எந்தப்படம் பாக்ஸ் ஆபிஸ் கலெகஷனில் அதிகம் வசூலிக்கும் ஒரு போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
- சிகிச்சை பலனின்றி ஜெயசீலன் உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தனுஷ் நடித்த 'புதுப்பேட்டை', 'பிகில்', 'விக்ரம் வேதா' உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்தவர் ஜெயசீலன்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த 'தெறி' படத்தில் பள்ளிக்கூடத்தில் இருக்கும் ரவுடிகளை விஜய் பாடம் நடத்தி விரட்டி அடிக்கும் காட்சியில் "ட்விங்கிளு ட்விங்கிளு சூப்பர் ஸ்டாரு.. அவ்வையார்.. வாத்தியார்" என தப்புத் தப்பாக ரைம்ஸ் பாடி காமெடி செய்யும் அடியாளாக நடித்து இருந்தார்.

இந்த நிலையில், மஞ்சள் காமாலை பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த ஜெயசீலன் (40) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் திருமணம் செய்துகொள்ளாமல் வசித்த வந்த ஜெயசீலன், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி ஜெயசீலன் உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
