search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thingaloor"

    • தேவரப் பாடல்பெற்ற தலம் இது. 63 நாயன்மார்களில் ஒருவரான “அப்பூதி அடிகளார்” வாழ்ந்த தலம் இது.
    • இன்றளவும் இத் தலத்தில் பாம்பு தீண்டி உயிர் பிரிந்தவர்கள் இல்லை என்பது உண்மை.

    கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை, கபிஸ்தலம் வழியில் திருவையாற்றின் அருகில் உள்ளது சந்திரனுக்குரிய தலமான "திங்களூர்".

    தஞ்சாவூரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

    தேவரப் பாடல்பெற்ற தலம் இது. 63 நாயன்மார்களில் ஒருவரான "அப்பூதி அடிகளார்" வாழ்ந்த தலம் இது.

    திருநாவுக்கரசர் ஒரு சமயம் உழவாரப் பணி செய்ய திங்களூர் சென்றிருந்தார்.

    அச் சமயம் அங்கு அப்பூதி அடிகள் என்பவர், நாவுக் கரசர் பெயராலே பல தர்ம காரியங்களை செய்து வரு வதைக் கண்டு அவர் இல்லம் சென்றார்.

    நாவுக்கரசரை கண்ட அப்பூதி அடிகள் உள்ளம் மகிழ்ந்து விருந்தோம்பலுக்கு ஆயத்தமானார்.

    தனது மகனை வாழை இலை பறிக்க தோட்டத் திற்கு அனுப்ப, அங்கு அந்த சிறுவனை பாம்பு தீண்ட உயிரிழந்தான்.

    இந்த செய்தியை அறிந்தால் எங்கே நாவுக்கரசர் விருந்து உண்ண மாட்டாரோ என்றெண்ணிய அப்பூதி அடிகள் மகன் இறந்ததை மறைத்து நாவுக்கரசருக்கு அமுது படைத்தார்.

    இதனை அறிந்த நாவுக்கரசர், இறந்த அப்பூதி அடிகளின் மகனை இத் திருத் தலத்திற்கு எடுத்து சென்று, "ஒன்று கொலாம் அவர் சிந்தை"எனத் தொடங்கும் பதிகம் பாடி இறந்த பிள்ளையை உயிர்ப்பித்தார். இத்தகைய பெரும் பேறு பெற்ற தலம் இது.

    இன்றளவும் இத் தலத்தில் பாம்பு தீண்டி உயிர் பிரிந்தவர்கள் இல்லை என்பது உண்மை.

    சந்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத் திருத் தலம் வந்து கைலாச நாதரையும், பெரியநாயகி அம்பாளையும், பின்னர் சந்திர பகவானையும் தரிசித்து தோஷ நிவர்த்தி பெறலாம்.

    ×