என் மலர்
நீங்கள் தேடியது "Thriller"
- கர்மா என்ற வார்த்தை இந்தியாவில் மிக பிரபலம்
- கர்மா டீசர் இன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தென்கொரிய படங்களுக்கும் வெப் சீரிஸ்களுக்கும் இந்தியாவில் பெரும் வரவேற்பு உள்ளது. குறிப்பாக தென்கொரிய திரில்லர் திரைப்படங்களுக்கு இங்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
அவ்வகையில் கர்மா என்ற புதிய தென்கொரிய வெப் சீரிஸ் ஏப்ரல் 4 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தலத்தில் வெளியாகவுள்ளது. இதன் டீசர் இன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கர்மா என்ற வார்த்தை இந்தியாவில் மிக பிரபலம். அதாவது கடந்த பிறவி அல்லது இந்த பிறவியில் நாம் செய்யும் செயல்களின் விளைவு ஆகும்.
- பிளாக் மேஜிக்கை வைத்து, ஒரு ஃபீல் குட் ஹாரர் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஹாருன்.
- இப்படத்தின் காட்சிகள், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.
Dream House நிறுவனம் சார்பில், இயக்குநர் ஹாருன் தயாரித்து, எழுதி, இயக்க, சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், மாறுபட்ட மிரட்டலான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள 7G திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், ஒரு அதிரடியான போஸ்டர் மூலம் படம் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ஹாரர் என்றாலே காமெடி என்றாகிவிட்ட தமிழ் சினிமாவின் விதிகளை உடைத்து, ஒரு முழுமையான திரில் அனுபவம் தரும் வகையில், பிளாக் மேஜிக்கை வைத்து, ஒரு ஃபீல் குட் ஹாரர் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஹாருன்.
புதிதாக தனக்குச் சொந்தமாக புதிய வீட்டை வாங்கி குடியேறும் இளம்பெண் அந்த வீட்டில் சில அமானுஷ்யங்களை உணர்கிறாள், அந்த அமானுஷ்யங்களுக்குப் பின்னால் பிளாக் மேஜிக் இருப்பதை அறியும் அவள், அதன் பின்னால் இருக்கும் உண்மைகளைத் தேட, பல எதிர்பாராத முடிச்சுகள் அவிழ்கின்றன. ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும் வகையில், பரபரவென நகரும் திரைக்கதையுடன், அனைவரும் ரசிக்கும் வகையிலான ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.


இப்படத்தின் காட்சிகள், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோருடன் சித்தார்த் விபின், சினேகா குப்தா, சுப்ரமணியம் சிவா, கல்கி ராஜா உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு இசையமைப்பாளர் சித்தார்த் விபின் படத்திற்கு இசையமைக்க, கண்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிஜு V டான் பாஸ்கோ எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார். ஃபயர் கார்த்திக் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.