என் மலர்
நீங்கள் தேடியது "Thugs of Hindostan"
தங்கல், தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் படங்களில் இணைந்து நடித்த அமீர்கான் - பாத்திமா சனா சேக் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து பாத்திமா விளக்கம் அளித்துள்ளார். #AamirKhan #FatimaSanaShaikh
அமீர் நடிப்பில் உலகம் முழுக்க வெளியாகி நல்ல வரவேற்புடன் வசூலை குவித்த படம் தங்கல். இந்த படத்தில் ஆமீர்கானின் மூத்த மகளாக நடித்தவர் பாத்திமா சனா ஷேக். அந்த படத்திற்கு பிறகு ஆமீர்கானுடன் சேர்ந்து தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் என்ற படத்திலும் நடித்தார்.
ஆமீர்கானின் பரிந்துரையின்பேரில் தான் பாத்திமாவுக்கு இந்த பட வாய்ப்பு கிடைத்தது என்று கூறப்பட்டது.
பாத்திமா சனா ஷேக்கிற்கும், ஆமீர்கானுக்கும் இடையே கள்ளக்காதல் என்று பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. இந்த கள்ளக்காதலால் ஆமீர்கானுக்கும், அவரின் மனைவி கிரண் ராவுக்கும் இடையே பிரச்சினையை உருவாகிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால்ஆமீர்கான் இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.
பாத்திமாவின் விஷயத்தில் ஆமீர்கான் அதிக அக்கறை காட்டுவதாகவும், அவருக்கு பட வாய்ப்புகள் வாங்கித் தருவதாகவும் பேச்சு கிளம்பியது. நாளுக்கு நாள் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்து வருவதாகவும் பாலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டது. இதை சம்பந்தப்பட்ட இருவரும் கண்டுகொள்ளவில்லை.

ஆமீர்கானுடனான காதல் பேச்சு குறித்து பேட்டி ஒன்றில் பாத்திமாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது,
இந்த வதந்தி மிகவும் வித்தியாசமானது. என் அம்மாவும் டி.வி பார்த்துக் கொண்டே இருக்கிறார். ஒருநாள் அவர் என்னிடம் 'உன் புகைப்படம் வந்து இருக்கிறது' என்று எனக்குக் காட்டினார். 'என்ன எழுதியிருக்கிறார்கள் என்று தலைப்பைப் படித்து காட்டினார். நான் கலங்கினேன், இந்த வதந்தி குறித்து நானே விளக்க வேண்டும் என நினைத்தேன்.
யாராவது உங்களை ஏதாவது குற்றம்சாட்டினால், முதல் உள்ளுணர்வு வெளியே வந்து இதுபோன்று ஏன் நினைக்கிறீர்கள் என்று கேட்க வேண்டும். நீங்கள் ஒரு கோபக்கார நபராக இருந்தால், நீங்கள் அவரை தாக்குவீர்கள். நீங்கள் அமைதியானவராக இருந்தால் நீங்களும் அதைப் பற்றி பேசுவீர்கள் என கூறினார்.
நான் இந்த வதந்தியால் பாதிக்கப்பட்டேன். மக்கள் எதையாவது கூறிக் கொண்டே தான் இருப்பார்கள். அதனால் இந்த விவகாரம் குறித்து நான் எதுவும் விளக்கம் அளிக்கப் போவது இல்லை. நான் ஏன் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டார்.
தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான் படத்தில் ஆமீரின் பரிந்துரையால் பாத்திமாவுக்கு வெயிட்டான கதாபாத்திரம் கிடைத்ததை பார்த்து கத்ரீனா கைப் கடுப்பானாராம். அவருக்கு கவர்ச்சி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தக்ஸ் ஆப் இந்துஸ்தான் படம் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #AamirKhan #FatimaSanaShaikh
சீன பல்கலைக்கழகத்தில் அமீர்கான் நடித்த ‘தக்ஸ் ஆப் இந்துஸ்தான்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்கு தி்டீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. #AamirKhan
அமீர்கான், அமிதாப்பச்சன் ஆகிய இருவரும் நடித்துள்ள ‘தக்ஸ் ஆப் இந்துஸ்தான்’ இந்தி படம் கடந்த மாதம் இந்தியா முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது. அதிக பொருட்செலவில் எடுத்த இந்த படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் படம் தோல்வி அடைந்தது.
தோல்விக்கு பொறுப்பு ஏற்று அமீர்கான் மன்னிப்பு கேட்டார். இந்த படத்தில் ரசிகர்களை திருப்திபடுத்த முடியாமல் போனதற்காக வருந்துகிறேன் என்றார். தக்ஸ் ஆப் இந்துஸ்தான் படம் அடுத்த வாரம் சீனாவில் வெளியாகிறது. படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகள் அங்கு தொடங்கி உள்ளன. இதற்காக அமீர்கான் சீனா சென்றார். சீனாவின் குவாங்சோவில் உள்ள குவாங்டாங் பல்கலைக்கழகத்தில் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்து இருந்தனர். இதில் பங்கேற்பதற்காக அமீர்கானும் ஓட்டலில் இருந்து புறப்பட தயாரானார். ஆனால் கடைசி நேரத்தில் விழா நடத்த பல்கலைக்கழகம் தடை விதித்தது.

இதுகுறித்து பல்கலைக்கழகம் தரப்பில் கூறும்போது, “படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி என்று எங்களுக்கு தெரியவில்லை. முறையான அனுமதி பெறாததால் விழாவுக்கு தடை விதித்தோம்” என்றனர். இதனால் நிகழ்ச்சியை நட்சத்திர ஓட்டலுக்கு மாற்றினர். அங்கு அமீர்கான் கலந்துகொண்டார்.
விஜய் கிருஷ்ண ஆச்சர்யா இயக்கத்தில் அமீர் கான், அமிதாப் பச்சன் - கேத்தரீனா கெய்ஃப், பாத்திமா சனா சைக் நடிப்பில் வெளியாகி இருக்கும் `தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' படத்தின் விமர்சனம். #ThugsOfHindostanReview #AamirKhan
1795-ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவில் வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பல்வேறு இடங்களை கைப்பற்றி, அவர்களது ஆட்சி அதிகாரத்தை பலப்படுத்தி வந்தார்கள். அப்போது ஆங்கிலேயர்களிடம் அடிமைப்படாமல் இருந்த குறுநில ராஜ்ஜியம் ரோனக்பூரை ஆங்கிலேயர்கள் கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள்.
இதற்கு அடிபணியாத ஆங்கிலேயர்கள் அவர்கள் மீது போர் தொடுத்து அந்நாட்டு மன்னர், ராணி, மன்னரின் மகன் ஆகியோரை கொன்று விடுகிறார்கள். இதில் மன்னரின் மகள் பாத்திமா சனா சைக்கை புரட்சியாளரான அமிதாப்பச்சன் ஆங்கிலேயர்களிடம் இருந்து காப்பாற்றுகிறார்.

11 வருடங்கள் கழித்து மன்னரின் மகளை வீரமங்கையாக வளர்த்து ஆங்கிலேயருக்கு எதிராக போராட வைக்கிறார் அமிதாப்பச்சன். இவர்கள் தனிப்படையாக உருவாகி, தாங்கள் இழந்த நாட்டை கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள். இதையறிந்த ஆங்கிலேயர்கள், ஊரில் சின்ன சின்ன திருட்டு, ஏமாற்று வேலைகளை செய்து வரும் அமீர்கானை, அவர்களுடன் இணைந்து காட்டிக்கொடுக்க சொல்லி அனுப்புகிறார்கள்.
இறுதியில் ஆங்கிலேயர்கள் அமிதாப்பச்சனின் படைகளை அழித்தார்களா? பாத்திமா சனா சைக் தனது பகையை தீர்த்து கொண்டாரா? அமீர்கான் காட்டி கொடுக்கும் வேலையை செய்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் ஆசாத் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அமிதாப்பச்சன், பாகுபலி படத்தின் சத்யராஜ் கதாபாத்திரத்தை ஞாகப்படுத்துகிறார். வயதானாலும் அவரது சுறுசுறுப்பான நடிப்பு வியக்க வைக்கிறது. பணத்திற்கு ஆசைப்பட்டு ஆங்கிலேயருக்கு உளவு சொல்லும் உளவாளியாக நடித்திருக்கிறார் அமீர்கான். வித்தியாசமான தோற்றத்தில் கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தை கலகலப்பாக கொண்டு சென்றிருக்கிறார் அமீர்கான். ஆங்கிலேயர் ஆதிக்கத் திமிரை தன் பார்வை மூலமே மிரட்டி இருக்கிறார் லாயிட் ஓவன்.
புரட்சிக்கார பெண்ணாக நடித்திருக்கும் பாத்திமா சனா ஷேக், ஆங்கிலேயர்களை எதிர்த்து தாக்குவதும், வாள் வீசுவதும் என நடிப்பில் அசத்தி இருக்கிறார். இரண்டு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார் கேத்ரினா கைப். அழகாலும், கவர்ச்சியாலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

வரலாற்று படத்தை மிகவும் பிரம்மாண்டமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய் கிருஷ்ண ஆச்சர்யா. சண்டைக்காட்சிகளை பிரம்மாண்டமாக படமாக்கி இருக்கிறார். பல இடங்களில் சுவாரஸ்யமான காட்சிகளை வைத்து தொய்வில்லாமல் கொடுத்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில் மற்ற படங்களின் ஞாபகம் வந்தாலும் பெரியதாக தெரியவில்லை.
ஹேமந்த்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. பிரம்மாண்டமான அரங்கில் படமாக்கப்பட்ட பாடல் காட்சிகளை நமக்கு அழகாக காண்பித்திருக்கிறார். அஜய்யின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக அமைந்திருக்கிறது. தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு அமைத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ பிரம்மாண்டம். #ThugsOfHindostanReview #AamirKhan #AmitabhBachchan #KatrinaKaif
அமிதாப்பச்சன், அமீர்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்’ படத்தின் டிரைலரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டிருக்கிறார். #Kamal #ThugsOfHindostan
வட மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்திப்படங்களை தயாரித்த நிறுவனம், யாஷ்ராஜ் பிலிம்ஸ். இந்த நிறுவனம் தயாரித்து அடுத்து வெளிவர இருக்கும் இந்திப்படம், ‘தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்.’ இது, அதிரடியான சண்டை காட்சிகளை கொண்ட படம். இது, தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் கத்ரினா கைப், பாத்திமா சனாசேக் ஆகிய இருவரும் நடித்துள்ளனர். விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா டைரக்டு செய்திருக்கிறார். நவம்பர் முதல் வாரத்தில் படம் வெளியாக இருக்கிறது.
இந்திப்பட உலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களான அமிதாப்பச்சன் மற்றும் அமீர்கான் ஆகிய இருவரும் முதன்முதலாக இணைந்து நடித்துள்ளனர். படத்தை பற்றிய தகவலை அமிதாப்பச்சன், அமீர்கான் இருவரும் வீடியோ ஒன்றில் பேசி, வெளியிட்டனர்.
இந்த படத்தின் டிரைலர், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாகி இருக்கிறது. தமிழ் டிரைலரை கமல்ஹாசன் வெளியிட்டார்.
விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கத்தில் அமிதாப் பச்சன், அமீர் கான் இணைந்து நடித்துள்ள ‘தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்’ படத்தின் புரமோஷனுக்காக தமிழில் பேசியுள்ளனர். #ThugsofHindostan #AamirKhan #AmitabhBachchan
யாஷ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் இந்தியில் உருவாகி இருக்கும் படம் ‘தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்’. விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கியிருக்கும் இந்த படத்தில் அமீர் கான் நாயகனாக நடித்திருக்கிறார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.
இந்த படத்தின் மூலம் அமீர்கானும், அமிதாப்பச்சனும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். இதில் அமிதாப் பச்சன் ராஜா வேடத்தில் வருகிறார். அவரது முதல் தோற்றம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

கத்ரினா கைப், பாத்திமா சனா சேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ரூ.210 கோடியில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற நவம்பர் 8-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
T 2944 - Tamil:
— Amitabh Bachchan (@SrBachchan) September 26, 2018
pic.twitter.com/gqh2Bn8Pqr
The world will witness a unique experience, this Diwali! #ThugsOfHindostan releasing on 8th November in Tamil@TOHTheFilm | @yrf | @aamir_khan | #KatrinaKaif | @fattysanashaikh
இந்தியில் ரிலீசாகும் இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் டப் செய்து ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்கான புரமோஷன் வீடியோவில் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அமீர்கான் ஆகியோர் தமிழ் மற்றும் தெலுங்கில் பேசியுள்ளனர். #ThugsofHindostan #AamirKhan #AmitabhBachchan