search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thukkada"

    காரசாரமான மொறு மொறுப்பான இத்துக்கடாவை தேனீருடன் உண்ண நாவிற்கு இனிமையாக இருக்கும். இன்று இந்த சுவையான கோதுமை துக்கடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கோதுமை மாவு - 400 கிராம்
    மிளகாய் தூள் - 3 ஸ்பூன்
    பெருங்காயத்தூள் - ½ ஸ்பூன்
    வெள்ளைப் பூண்டு - 5
    க‌ல் உப்பு - தேவையான அளவு
    தண்ணீர் - தேவையான அளவு
    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு


     
    செய்முறை

    வெள்ளைப் பூண்டினைத் தோல் நீக்கி சுத்தம் செய்து தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.

    கல் உப்பில் தண்ணீர் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் மிளகாய் தூள், பெருங்காயத்தூள், மையாக அரைத்த வெள்ளைப் பூண்டு விழுது, உப்பு கலந்த தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சிறிது எண்ணெய் தடவி அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.
     
    பின் அதிலிருந்து எலுமிச்சை அளவு மாவினை எடுத்து சப்பாத்தி போல் திரட்டவும். சப்பாத்தியானது மிகவும் மெல்லியதாகவோ, கடினமானதாக இருக்கக் கூடாது. பின் சப்பாத்தியைக் கத்தியால் சதுரத் துண்டுகளாக வெட்டவும். இவ்வாறு எல்லா மாவினையும் சதுரத் துண்டுகளாக்கவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சதுர துண்டுகளாக்கிய மாவினை போடவும். அவ்வப்போது சதுரத்துண்டுகளை போட்டு கிளறி விடவும். சதுரத் துண்டுகள் வெந்து எண்ணெய் அடங்கியதும் எடுத்து விடவும்.

    சுவையான கோதுமை துக்கடா தயார்.

    இது ஆறியதும் காற்று புகாத டப்பாவில் போட்டு ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×