என் மலர்
நீங்கள் தேடியது "Thulasi"
- திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் நடைபெறும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
- ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசியில் ஆடி கோபத்ம விரதம் கடைபிடிக்கப்படுவது,
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம்.
ஆடி செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை படைத்து
வழிபட்டால், பக்தர்கள் நினைத்த காரியம் நடைபெறும் என்பது ஐதீகம்.
அம்மனுக்கு பிடித்தமான கூழ், கொழுக்கட்டையை படைத்து வழிபட்டால்
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும்.
மேலும், திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் நடைபெறும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
துளசியை வழிபடுங்கள்...
ஆடி மாதம் துளசி வழிபாடு அரிதான பல பலன்களைத் தரும்.
ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் (துவாதசி வரையில்) துனமும் தவறாமல் துளசியை வழிபட்டு வந்தால்
குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.
ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசியில் ஆடி கோபத்ம விரதம் கடைபிடிக்கப்படுவது,
இந்த தினத்தில் பெண்கள் பசுவை வழிபடுவதால், லட்சுமி கடாட்சம் கிட்டும்.
அதேபோல், ஆடி வெள்ளிக் கிழமைகளில் புற்றுக்கு பால் தெளித்து, பூஜை செய்தால்,
பெண்களின் சாதகத்தில் காணப்படும் நாகதோஷம் நிவர்த்தியாகும்.
- ஆடி மாதம் துளசி வழிபாடு அரிதான பல பலன்களைத் தரும்.
- இந்த தினத்தில் பசுவை வழிபடுவதால், லட்சுமி கடாட்சம் கிட்டும்.
ஆடி மாதம் துளசி வழிபாடு அரிதான பல பலன்களைத் தரும்.
ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் (துவாதசி வரையில்) துளசியை வழிபட்டு வந்தால், ஐஸ்வர்யம் பெருகும்.
நீண்ட ஆயுள் கிடைக்கும்.
ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசியில் கடைப் பிடிக்கப்படுவது, ஆடி கோபத்ம விரதம்.
இந்த தினத்தில் பசுவை வழிபடுவதால், லட்சுமி கடாட்சம் கிட்டும்.
அதேபோல், ஆடி வெள்ளிக் கிழமைகளில் புற்றுக்கு பால் தெளித்து, பூஜை செய்வதால், நாகதோஷம் நிவர்த்தியாகும்;
குடும்பம் சுபிட்சமாக இருக்கும்.
மேலும், ஆடி மாதப் பிறப்பில், ஆடிப்பால் தயாரிப்பார்கள்.
புதிதாக திருமணம் ஆன மணமகனை அழைத்து, ஆடியில் ஆடிப்பால் கொடுப்பது வழக்கம்.
- கார்த்திகை மாதம் துவாதசி நாளில், துளசி தேவி மகா விஷ்ணுவைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம்.
- ஒவ்வொரு துளசி தளைக்கும் ஒவ்வொரு அஸ்வமேதயாகம் செய்த பலன் உண்டு என்பர்.
கார்த்திகை மாதம் துவாதசி நாளில், துளசி தேவி மகா விஷ்ணுவைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம்.
எனவே, கார்த்திகை மாதம் முழுவதும் துளசி தளைகளால் மகா விஷ்ணுவை அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால்,
ஒவ்வொரு துளசி தளைக்கும் ஒவ்வொரு அஸ்வமேதயாகம் செய்த பலன் உண்டு என்பர்.
துளசி மாலை அணிபவர்களிடம், மகாலட்சுமி எப்போதும் வாசம் செய்வாள் என்று சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.
கார்த்திகை மாத துவாதசி நாளில், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால்,
கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும்.
- தாமரை ஏழு நாட்கள், அரளி மூன்று நாள், வில்வம் ஆறுமாதம், துளசி ஒரு வருடம் வைத்து பூஜிக்கலாம்
தாமரை ஏழு நாட்கள், அரளி மூன்று நாள், வில்வம் ஆறுமாதம், துளசி ஒரு வருடம் வைத்து பூஜிக்கலாம் என்றும்,
ஒருமுறை அர்ச்சித்த துளசி, வில்வம், கருஊமத்தை, நீலோத்பல் ஆகியவற்றைப் பொன் மலரைப் போல கழுவிச் சாற்றலாம் என்றும் சிவபூஜா பத்ததி என்ற நூல் கூறுகிறது.
எடுத்தபின் மலர்ந்த பூ, பழம், எருக்கு மற்றும் ஆமணக்கு இலையில் கட்டிவைத்த பூ,
கட்டிய ஆடையிலும் கையிலும் வைத்த பூ, கீழே உதிர்ந்த பூ, இடுப்புக் கீழ் உள்ள உறுப்புகளில் பட்ட பூ,
புழுகடித்த பூ, சிலந்தி மற்றும் பறவைகள் எச்சமிட்ட பூ, மயிர்பட்ட பூ, இரவில் எடுத்த பூ, நீரில் மூழ்கிய பூ, அசுத்தரால் எடுக்கப்பட்ட பூ முதலானவை பூஜைக்கு ஏற்காதவை.
- அதிலும் செடி, கொடிகள் நம் வாழ்வோடு ஒன்றிய காலம் நோயற்ற காலமாகவே இருந்துள்ளது.
- ஆயுர்வேத சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான மூலிகையாக இது விளங்குகிறது.
இயற்கைக்கு ஈடு இவ்வுலகில் ஏதுமில்லை.
அதிலும் செடி, கொடிகள் நம் வாழ்வோடு ஒன்றிய காலம் நோயற்ற காலமாகவே இருந்துள்ளது.
அந்த வகையில் மற்ற செடிகளுக்கு இல்லாத சிறப்பு ஏன் இந்த துளசி செடிக்கு மட்டும் என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா?
அதற்கு காரணம் துளசி செடியை தெய்வமாக பார்க்கின்றனர் இந்து மக்கள்.
எந்த ஒரு சடங்கும் துளசி செடிகள் இல்லாமல் நடைபெறாது என்று கூறலாம்.
துளசி செடியில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.
ஆயுர்வேத சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான மூலிகையாக இது விளங்குகிறது.
இதுபோக சளி, இருமல் மற்றும் இதர நோய்களை குணப்படுத்தவும் இது பயன்படுத்தப்படுகிறது.
சுற்றுச்சூழலை தூய்மையாக்கி கொசு விரட்டியை போல் செயல்படுகிறது இந்த துளசி செடி.
சரி, இந்த அதிசயமான செடியை பற்றிய கதையை இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆவலாக உள்ளதா?
அப்படியானால் மேலும் படியுங்கள்.
- மிகுந்த கவனத்துடன் சிந்தாமல், சிதறாமல் பாத்திரத்தில் வைத்து மாலை தொடுக்க வேண்டும்.
- அப்போது ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா என்றும், நாராயணாய நம என்றும் சொல்லிக் கொண்டே கட்ட வேண்டும்.
பூமி பெற்றெடுத்த பாக்கியமே! மோட்சமே நிரந்தரமானது என்பதால் அதை அடைவதற்கு ஸ்ரீமன் நாராயணன் முதலான
எல்லா தேவதைகளையும், எல்லா ஆச்சார்ய புருஷர்களையும் போதிப்பதற்காக துளசி பத்திரத்தை பறிக்கிறேன்
என் செயலை மன்னிப்பாயாக! என்று சொன்ன பிறகே துளசியை நாம் பறிக்கவேண்டும்.
பறித்த துளசியை கிள்ளி கிள்ளி எறியக்கூடாது.
மிகுந்த கவனத்துடன் சிந்தாமல், சிதறாமல் பாத்திரத்தில் வைத்து மாலை தொடுக்க வேண்டும்.
அப்போது ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா என்றும், நாராயணாய நம என்றும் சொல்லிக் கொண்டே கட்ட வேண்டும்.
- லட்சுமியின் சொரூபமான அவள் பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்தாள்.
- அவள் பிறந்த இடத்தில் இப்போது துளசிமாடம் வைக்கப்பட்டுள்ளது.
108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் துளசி தோட்டமான நந்தவனத்தில் தான் பிறந்தாள்.
லட்சுமியின் சொரூபமான அவள் பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்தாள்.
அவள் பிறந்த இடத்தில் இப்போது துளசிமாடம் வைக்கப்பட்டுள்ளது.
இதில் கொட்டப்பட்டிருக்கும் மணலை பக்தர்கள் தங்கள் பர்சில் போட்டுக் கொள்கின்றனர்.
லட்சுமி தேவியின் பார்வை பட்ட இடம் என்பதால் தங்களுக்கு செல்வம் சேரும் என்ற நம்பிக்கையில் இப்படி செய்கிறார்கள்.
கல்லால் ஆன இந்த துளசி மாடத்தின் கீழே ஆண்டாளின் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.
துளசி தோட்டத்தின் முகப்பில் ஆண்டாளின் பிறப்பை சித்தரிக்கும் சுதை வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.
- சமயத்திரு நூல்களில், துளசியை வ்ரிந்தா என்று அழைக்கின்றனர்.
- வ்ரிந்தாவை மணந்த பின், வெல்ல முடியாதவனாக மாறினான் ஜலந்தர்.
சமயத்திரு நூல்களில், துளசியை வ்ரிந்தா என்று அழைக்கின்றனர்.
அசுர அரசரான கால்நேமியின் அழகிய இளவரசி தான் இந்த துளசி.
சிவபெருமானின் சக்தி வாய்ந்த பகுதியாக விளங்கிய ஜலந்தரை அவர் மணந்தார்.
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வந்த தீயில் இருந்து பிறந்தவன் என்பதால் ஜலந்தருக்கு அதிக சக்தி இருந்தது.
பத்தினியாகவும், ஈடுபாடுள்ள பெண்ணாகவும் இருந்ததால், வ்ரிந்தா மீது காதலில் விழுந்தார் ஜலந்தர்.
விஷ்ணு பகவானின் தீவிர பக்தையாக விளங்கினார் வ்ரிந்தா.
ஆனால் ஜலந்தருக்கோ கடவுள்கள் என்றாலே வெறுப்பு தான்.
இருப்பினும் விதி அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்தது.
வ்ரிந்தாவை மணந்த பின், வெல்ல முடியாதவனாக மாறினான் ஜலந்தர்.
வ்ரிந்தாவின் தூய்மையும் கடவுள் பக்தியும் அதற்கு காரணமாக விளங்கி, அவனின் சக்தியை பலமடங்கு அதிகரித்தது.
சிவபெருமானாலேயே ஜலந்தரை வெல்ல முடியவில்லை.
அவனின் ஆணவம் அதிகரித்தது.
சிவபெருமானை வீழ்த்தி, அண்ட சராசரத்திலேயே சக்தி வாய்ந்த கடவுளாக திகழ வேண்டும் என்பதே அவனின் லட்சியமாக இருந்தது.
ஜலந்தரின் சக்தி அதிகரித்து கொண்டிருந்தது அனைத்து கடவுள்களுக்கும் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தியது.
உதவியை நாடி அனைவரும் விஷ்ணு பகவானிடம் சென்றனர்.
வ்ரிந்தா அவரின் தீவிர பக்தை என்பதால் விஷ்ணு பகவானுக்கு குழப்பம் உண்டாயிற்று.
அவளுக்கு அநீதி வழங்க அவர் மனம் இடம் கொடுக்கவில்லை.
ஆனால் ஜலந்தரால் அனைத்து கடவுள்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்ததால்,
விஷ்ணு பகவான் ஒரு விளையாட்டை அரங்கேற்றிட நினைத்தார்.
அதன்படி, சிவபெருமானுடன் ஜலந்தர் போரில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, ஜலந்தர் போல் வேடமிட்டு வ்ரிந்தாவிடம் வந்தார் விஷ்ணு பகவான்.
முதலில் அவரை அடையாளம் காண முடியாமல், ஜலந்தர் தான் வந்துவிட்டான் என்று நினைத்து அவரை வரவேற்க சென்றாள் அவள்.
ஆனால் விஷ்ணு பகவானை அவள் தொட்ட மறு வினாடியே, அது அவளின் கணவன் இல்லை என்பதை அவள் உணர்ந்தாள்.
அவளுடைய தூய்மை கெட்டுப்போனதால், ஜலந்தர் தாக்குதலுக்கு உள்ளானான்.
தவறை உணர்ந்த அவள், தன் சுயரூபத்தை காட்டுமாறு விஷ்ணு பகவானிடம் கேட்டுக் கொண்டாள்.
தன் கடவுளே தன்னிடம் விளையாடியுள்ளார் என்பதை அறிந்த அவள் உடைந்து போனாள்.
தன்னுடைய தூய்மையை கெடுக்க தன் கணவன் போல் விஷ்ணு பகவான் வேடமிட்டு வந்ததை அறிந்த வ்ரிந்தா அவரை சபித்தார்.
விஷ்ணு பகவான் ஒரு கல்லாக மாற வேண்டும் என்று அவர் சபித்தார்.
அந்த சாபத்தை ஏற்றுக்கொண்ட விஷ்ணு பகவான், கண்டக்கா நதி அருகே ஷாலிகிராமத்தில் கல்லாக மாறினார்.
அதன் பின், தன் மனைவியின் தூய்மை என்ற பாதுகாப்பு ஜலந்தரை விட்டு போனதால், சிவபெருமானால் அவன் கொல்லப்பட்டான்.
மனம் உடைந்த வ்ரிந்தா, தன் வாழ்க்கையை முடிக்க முடி வெடுத்தாள்.
வ்ரிந்தா இறக்கும் முன், இனி அவள் துளசியாக அறியப்படுவாள் என விஷ்ணு பகவான் அவருக்கு வரம் அளித்தார்.
அதன்படி, இனி விஷ்ணு பகவானை வழிபடும் போது துளசியும் வழிபடப்படும்.
துளசி இலை இல்லாமல் விஷ்ணு பகவானுக்கு செய்யப்படும் பூஜை முழுமை பெறாது.
அதனால் தான் இந்து சடங்குகளின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக விளங்குகிறது துளசி.
நல்ல ஆரோக்கியத்துடன் அனைவரையும் ஆசீர்வதிக்க அனைத்து மக்களின் வீட்டில் வளரும் ஒரு செடியாக அருளளிக்கப்பட்டார்.
என்னை மனதில் வைத்து
என்றும் தொழுதெழுவாரென்
கண்ணின் கருணையினால்
கவலையின்றி வாழ்ந்திடுவார்!
மின்னல் இடி மலைகள்
மேல் வருநற் தீவினைகள்
மெல்ல விலகி நின்று
மேன்மை கனியச் செய்வேன்!
எண்ணும் பிணி நீக்கி
என்றென்றும் காத்திடுவேன்
எண்ணரிய ஐஸ்வர்யம்
இவர்க்காக நான் கொடுப்பேன்!
மண்ணில் கிடைக்காத
மகத்துவமும் தான் கிடைக்க
மானாத வாழ்வழிப்பேன்
மகிழ்வில் வைப்பேன்!
தாரித்ர்யம் நீக்கித்
தக்க வரம் தந்திடுவேன்
தன்னேரில்லாத மணம்தான்
நடத்தி வைத்திடுவேன்!
கன்னியர் பூஜை செய்யக்
கஷ்டம் தவிர்ப்பேனே
எண்ணுகிற மணவாளர்
இவர்க்கு கிடைப்பாரே!
கண்ணியமே மிக்குடைய
கிரகஸ்தர் எனைத் தொழுதால்
காட்சிக்கு எளிமை எனக்
கனிந்து நான் காத்திடுவேன்!
மும்மூர்த்தி போற்றி நிற்க
மோட்சப் பதம் தருவேன்
முழுதாக காத்து நிற்கும்
முதல்வியும் நானாவேன்!
மோட்சப் பதம் தருவேன்
முக்தியும் நான் தந்திருப்பேன்
மோக மழை ஆன என்னை
முழுதாய் உணர்ந்திருக்க
கோடி காராம் பசுவை
கொண்டு வந்து கன்றுடனே
கொம்புக்கு பொன்ன மைத்துக்
குளம்புக்கு வெள்ளி கட்டி
கங்கைக் கரையினிலே
கரதுகிரண காலத்திலே
கருதியே வாலுருவி
அந்தணர்க்கு மகாதானம்
செங்கையில் செய்த பலன்
கீர்த்தியெல்லாம் நான் தருவேன்!
அங்கே சிவப்பான
அரியவன் தான் ஆணையிது
மங்கைத் துளசியெனை
மகிழ்ந்தே தொழுதேத்த
மாதவத்தோர் வாழ்ந்திருப்பார்
மாறாத தன்னருளால்
எங்கள் திருக்கோலம் இல்லின்
மணக்கோலம்
கங்கைக்கரை கோலம் காரளந்தான்
பொற்கோலம்
மங்காப் பழமையெங்கள்
மகிமை உரைத்துவிட்டேன்!
இப்பாரில் எப்போதும்
இருந்து தவம் செய்யும்
மங்கை துளசியின்று மனம்
வைத்துத் திருவிளக்கில்
வந்து படிந்து விட்டேன்
வாடாமலர் சூட்டேன்.
- அக்னியில் துளசி இலையினால் ஹோமம் செய்கிறவர்களுக்கு அந்த யாகத்தினுடைய முழுமையான பலன் கிடைக்கும்.
- ஆன்மீக வழிபாட்டிற்கு உகந்ததாகவும் கருதப்படுகிறது.
காடுமேடுகளில் எல்லாம் வளரும் தன்மை கொண்டது துளசி.
இது ஒரு நல்ல கிருமி நாசினியாக செயல்படுவதோடு மட்டுமல்லாமல், ஆன்மீக வழிபாட்டிற்கு உகந்ததாகவும் கருதப்படுகிறது.
துளசி தேவியை தினமும் யார் பூஜை செய்கிறார்களோ அவர்கள் இந்த உலகில் விரும்பிய சுகங்களை அனுபவித்து முடிவில் மோட்சத்தை அடைகிறார்கள்.
எந்த இடத்தில் துளசி செடி பிடி அளவேனும் இருக்கிறதோ அந்த இடத்தில் நாராயணன் போன்ற தேவர்கள் நித்யாவாசம் செய்கிறார்கள்.
யாருடைய உடலானது துளசியினால் கொளுத்தப்படுகின்றதோ அவருடைய உடலானது சகல பாவங்களையும் நீக்கி கொள்கிறது.
துளசி மாலையை அணிந்து கொண்டு யார் பிராணனை விடுகின்றாரோ அவருடைய உடல் தொடர்பான பல பாவங்களும் போய் விடுகின்றன.
அக்னியில் துளசி இலையினால் ஹோமம் செய்கிறவர்களுக்கு அந்த யாகத்தினுடைய முழுமையான பலன் கிடைக்கும்.
- மாலை நேரமும், ஏகாதசிக்கும், செவ்வாய், வெள்ளி நாட்களிலும் துளசிப்பூ பறிக்கலாகாது என்று விதி உண்டு.
- வீட்டின் தரையை விட தாழ்ந்த மட்டத்தில் ஆகாமல் குறிப்பிட்ட அளவில் துளசி தரை அமைக்க வேண்டும்.
வழக்கமாக ஆன்மிக அன்பர்கள் தங்களது பக்தியின் வெளிப்பாடாக காதுக்கு பின்புறம் துளசி மற்றும் பூக்களை வைத்துக் கொள்வது இயல்பான ஒன்று.
காதுக்குப்பின் துளசி கதிர் அல்லது இலை சூடுவதற்கு இக்காலத்தில் யாரும் தயாராக மாட்டார்கள்.
அப்படி சூடுபவர்களை காதில் பூ வைத்தவன் என்று ஏளனமாக கூறுவது உண்டு.
ஆனால் காதுக்குப்பின் துளசி வைப்பதனால் பெரும் பயனடைந்தனர் பண்டைய மக்கள்.
மனித உடலில் மிகக் கூடுதலாக உறிஞ்சும் சக்தி உடையது காதுக்கு பின்புறம் உள்ள பகுதி ஆகும்.
இதை விஞ்ஞானம் நிரூபித்து இருக்கிறது. துளசியின் மருத்துவ குணங்களை நாம் நன்கு அறிவோம்.
இந்த மருத்துவ குணங்கள் காதுக்குப்பின் உள்ள சருமம் வழியாக ஊடுருவி செல்லும்.
இதுவே பழங்காலத்து மக்கள் காதுக்குப்பின் துளசி இலையைச் சூடி வந்ததும், பின் சந்ததிக்கு அதை கற்பித்ததும் ஆகும்.
பழங்காலத்தில் உள்ள வீடுகளில் துளசி மாடம் கட்டி துளசியை ஒரு புனித செடியாக பராமரித்து வளர்த்து வந்தனர்.
சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் கிழக்குப் பக்கத்தில் வாசலுக்கு நேராக துளசி மாடம் கட்ட வேண்டும் என்று நம் முன்னோர்கள் போதித்துள்ளனர்.
வீட்டின் தரையை விட தாழ்ந்த மட்டத்தில் ஆகாமல் குறிப்பிட்ட அளவில் துளசி தரை அமைக்க வேண்டும்.
துளசி தரையில் நடுவதற்காக கிருஷ்ண துளசியை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது.
துளசி செடிக்கு பக்கம் அசுத்தமாக செல்வது ஆகாது. ஜெபம் செய்து கொண்டே அதன் பக்கம் செல்ல வேண்டும்.
துளசியை தினமும் மூன்று வேளை வலம் வர வேண்டும். அவ்வாறு வலம் வரும்போது,
''பிரசீத துளசி தேவி
பிரசீத ஹரி வல்லையே
க்ஷீ ரோதமத நோத்புதே
துளசி த்வாம் நமாம்யஹம்"
என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும்.
துளசிப்பூ பறிக்க கூடாது,
துளஸ்வமுத சம்பூதா
சதா த்வாம் கேசவப்ரியே
கேச வார்த்தம் லுனமி த்வாம்
வரதா பவ சோபனே"
என்று சொல்ல வேண்டும்.
மாலை நேரமும், ஏகாதசிக்கும், செவ்வாய், வெள்ளி நாட்களிலும் துளசிப்பூ பறிக்கலாகாது என்று விதி உண்டு.
அதேபோல பூஜை செய்யாமல் துளசியை பறிக்கக்கூடாது.
- கிருஷ்ண பகவான் பாமா, ருக்மணி இருவர் மீதும் சமமாக அன்பு வைத்திருந்தார்.
- இதில் ருக்மணி கிருஷ்ணன் மீது அளவில்லாத அன்பும், ஆழமான பக்தியும் கொண்டிருந்தாள்.
கிருஷ்ண பகவான் பாமா, ருக்மணி இருவர் மீதும் சமமாக அன்பு வைத்திருந்தார்.
இதில் ருக்மணி கிருஷ்ணன் மீது அளவில்லாத அன்பும், ஆழமான பக்தியும் கொண்டிருந்தாள்.
அத்துடன் கிருஷ்ணனை தன் மனதில் வைத்து எப்போதும் பூஜித்து வந்தாள்.
ஆனால் பாமாவோ விஷ்ணு தன்னை மார்பில் சுமந்து இருப்பதாலும் கண்ணனுக்கு தேரோட்டியாக இருந்ததாலும் தனது திருமணத்தின் போது ஏராளமான செல்வம் கொண்டு வந்தாலும் நாரதரின் உதவியோடு கண்ணனை தனக்கே உரிமையாக்கிக் கொள்ள நினைத்தாள்.
இதற்காக கண்ணனை துலாபார தராசு தட்டின் ஒரு புறமும் மற்றொரு தட்டில் தனது செல்வம் முழுவதையும் வைத்தாள்.
ஆனால் தராசு சமமாகவில்லை.
அப்போது அங்கு வந்த ருக்மணி கண்ணனுக்காக கொடுக்க தன்னிடம் ஒன்றுமில்லையே என வருந்தி கண்ணனுக்கு பிடித்த துளசி இலை ஒன்றை தராசு தட்டில் வைத்தாள்.
அப்போது தராசு சமமாகியது. இது கண்ணன் புன் முறுவலுடன் நான் இப்போது யாருக்கு சொந்தமானவன் என்பது உங்களுக்கே புரிந்திருக்கும்.
நான் எனது என்ற அகந்தையை ஒழித்து உண்மை யான பக்தியுடன் என்னை சரண் அடைபவருக்கே நான் சொந்தம் என்றார்.
தனது அகந்தை நீங்கிய நிலையில் கண்ணனின் பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாமா அந்த துளசி இலையை தன் தலையில் சூட்டிக் கொண்டாள்.