என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tihar inmate
நீங்கள் தேடியது "Tihar inmate"
டெல்லி திகார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதியின் முதுகில், பழுக்க காய்ச்சிய கம்பியால் ஓம் என எழுதியது தொடர்பாக டெல்லி நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. #DelhiCourt #TiharInmate
புதுடெல்லி:
டெல்லி திகார் சிறைச்சாலையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கைதி ஒருவர், சிறையில் மனிதாபிமானமற்ற முறையில் கடுமையாக துன்புறுத்தப்பட்டுள்ளார். 2 நாட்களாக சாப்பாடு எதுவும் கொடுக்காமல் பட்டினி போட்டதுடன், அவரது முதுகில் பழுக்க காய்ச்சிய கம்பியால் ஓம் என்று எழுதி உள்ளனர். சிறை கண்காணிப்பாளர் ராஜேஷ் சவுகான் இந்த செயலை செய்துள்ளார்.
மேலும், சிறையில் உள்ள அனைத்து சிசிடிவி பதிவுகள் மற்றும் மற்ற கைதிகளின் வாக்குமூலங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட கைதிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறை கண்காணிப்பாளரை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #DelhiCourt #TiharInmate

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட விசாரணைக் கைதி, தனது வழக்கறிஞர் மூலம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக சிறைத்துறை டிஜிபி மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினார். சிறையில் நடந்த கொடூர சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி 24 மணி நேரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சிறையில் உள்ள அனைத்து சிசிடிவி பதிவுகள் மற்றும் மற்ற கைதிகளின் வாக்குமூலங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட கைதிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறை கண்காணிப்பாளரை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #DelhiCourt #TiharInmate
×

X