என் மலர்
நீங்கள் தேடியது "TM Karthick"
புவன் நல்லன் இயக்கத்தில் யோகி பாபு, யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் `ஜாம்பி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #Zombie #YogiBabu
எஸ் 3 பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் `ஜாம்பி'. இந்த படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 15 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் படப்பிடிப்புடன் மொத்த காட்சிகளையும் படமாக்கி முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது.
யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், சித்ரா அக்கா உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள்.

ஜாம்பிகள் மற்றும் முக்கிய நட்சத்திரங்கள் சந்திக்கும் கிளைமாக்சுக்கு முந்தைய முக்கிய காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது. இந்த படத்தின் ஹைலைட்டான காட்சியான இதை ஹீலியம் விளக்கொளியில் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் புவன் நல்லன். சென்னை முதல் பாண்டிச்சேரி வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் நடக்கும்படியாக காட்சிப்படுத்தப்படும் இந்த படத்தின் கதை ஒரு நாள், ஓர் இரவில் நடப்பது போல் உருவாகி வருகிறது. படத்தை கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். பிரேம்ஜி இந்த படத்துக்கு இசையமைக்கிறார். #Zombie #YogiBabu #YashikaAannand