என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Assembly session"

    • கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்காக ரூ. 3,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 1,122 கோடி ரூபாயில் 3 ஆயிரம் பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

    தமிழக சட்டசபையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஐ. பெரியசாமி அளித்த பதில் பின்வருமாறு:-

    * கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்காக ரூ. 3,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    * இதுவரை 25,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ரூ. 2,418 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

    * அடுத்த மார்ச் மாதத்திற்குள் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் 2 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும்

    * திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 1,122 கோடி ரூபாயில் 3 ஆயிரம் பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

    * 4 ஆயிரம் கோடி ரூபாயில் 10,545 கிலோ மீட்டர் தூரம் சாலைகள் போடப்பட்டுள்ளன.

    * தமிழ்நாட்டில் இன்னும் 8 கிராமங்கள்தான் இணைக்கப்படாமல் உள்ளன.

    இவ்வாறு ஐ. பெரியசாமி தெரிவித்தார்.

    • இயற்கை வளங்கள் துறை மீதான விவாதம் நடக்க உள்ளது.
    • நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலுரை வழங்குகிறார்.

    தமிழக சட்டசபையில் கடந்த 14ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்த மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றது. இந்த விவாதத்தில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க்களின் கருத்துக்கள், கோரிக்கைகளுக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த 21-ந்தேதி சட்டசபையில் பதில் அளித்து பேசினர்.

    இதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சட்டசபைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்கிடையே சட்டசபையில் இன்று (திங்கட்கிழமை) முதல் துறைவாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடக்க இருக்கிறது. இதில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று தங்கள் தொகுதி சார்ந்த வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கவும், புதிய திட்டங்கள் கொண்டு வரவும் வலியுறுத்தி பேச உள்ளனர்.

    அவற்றுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிட இருக்கின்றனர். அதன்படி, மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் முதல் நாளான இன்று நீர்வளத்துறை, இயற்கை வளங்கள் துறை மீதான விவாதம் நடக்க உள்ளது.

    இன்றைய கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பேசிய பிறகு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலுரை வழங்கி துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் வெளியிடுகிறார்.

    • தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கும் கூட்டத்தில், கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துவார்.
    • கவர்னர் உரையுடன் தொடங்கும் முதல் கூட்டத்தில், அரசின் ஒராண்டுக்கான செயல்திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகும்.

    சென்னை:

    தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 17ம் தேதி முதல் 19ம் தேதிவரை நடைபெற்றது. அந்த கூட்டத் தொடரை கவர்னர் இன்று முடித்து வைத்துள்ளார். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் முதல் வாரம் கவர்னர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும். இந்த முறை மழை பாதிப்பு தொடர்பான நிவாரணப் பணிகளை அரசு மேற்கொண்டு வருவதால் 2023ஆம் ஆண்டுக்கான சட்டசபை கூட்டத்தொடரை பொங்கலுக்கு பின்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கும் கூட்டத்தில், கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துவார். தொடர்ந்து அவரது உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசிப்பார். அத்துடன் அன்றைய சட்டசபை கூட்டம் நிறைவடையும். கவர்னர் உரையுடன் தொடங்கும் முதல் கூட்டத்தில், அரசின் ஒராண்டுக்கான செயல்திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகும்.

    இந்தி திணிப்பிற்கு எதிரான கருத்துகள், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாகவும் உரையில் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

    • தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்ற இருக்கிறார்.
    • சபாநாயகர் அப்பாவு ஆளுநர் உரையை தமிழில் வாசிப்பார்.

    ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் துவங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. இதே நடைமுறை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று (ஜனவரி 6) துவங்குகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்ற இருக்கிறார்.

    இதற்காக அவர் இன்று காலை 9.20 மணிக்கு தலைமை செயலகம் வருகிறார். அவரை வரவேற்க பேண்டு வாத்தியங்கள் மற்றும் காவல் துறை அணிவகுப்புடன் மரியாதை அளிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என். ரவியை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை முதன்மை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்றனர்.

    இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்குகிறது. இதன்பிறகு, ஆளுநர் ஆர்.என். ரவி சுமார் 45 நிமிடங்கள் உரையாற்றுவார் என்று தெரிகிறது. இவரைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு ஆளுநர் உரையை தமிழில் வாசிப்பார். இத்துடன் இன்றைய கூட்டம் நிறைவடையும்.

    ஆளுநர் உரையைத் தொடர்ந்து சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் அறையில் நடைபெறும்.

    இந்தக் கூட்டத்தொடரில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து அ.தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பாக கொண்டு விவாதிக்க கடிதம் கொடுத்துள்ளன. துறை வாரியாக மானியக்கோரிக்கை விவாதத்துடன் இந்தக் கூட்டத்தொடர் சுமார் ஒன்றரை மாதங்கள் வரை நடைபெறும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றுகிறார்.
    • சபாநாயகர் அப்பாவு ஆளுநர் உரையை தமிழில் வாசிக்கிறார்.

    ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் துவங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. இதே நடைமுறை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டுக்கான கூட்டம் துவங்கியது. இந்தக் கூட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்ற இருந்தார்.

    இதற்காக தலைமை செயலகம் வந்த ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பேண்டு வாத்தியங்கள் மற்றும் காவல் துறை அணிவகுப்புடன் மரியாதை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என். ரவியை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை முதன்மை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    இதன் பிறகு சட்டசபை கூட்டம் தொடங்கியது. இதன்பிறகு, ஆளுநர் ஆர்.என். ரவி சுமார் 45 நிமிடங்கள் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மூன்றே நிமிடங்களில் அவர் அவையில் இருந்து வெளியேறியுள்ளார். 


    சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர திமுக சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. #TNAssembly #DMK
    சென்னை:

    தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் முடிந்த நிலையில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்தி அந்தந்த துறைக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது.

    காலை 10 மணிக்கு அவை கூடியதும், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செ.மாதவன், கே.கே.ஜி.முத்தையா, சா.கணேசன், பி.அப்பாவு, ஆர்.சாமி, ஜெ.குரு என்கிற குருநாதன், பூபதி மாரியப்பன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் கேள்வி நேரம் தொடங்கியது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது.



    இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர திமுக சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை விதி 56-ன் படி ஸ்டெர்லைட் விவகாரம், துப்பாக்கிச்சூடு ஆகியவற்றை பற்றி நாள் முழுவதும் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கோரி  ஸ்டாலின் நோட்டீஸ் கொடுத்தார்.

    ஸ்டெர்லைட் விவகாரம் மற்றும் அது தொடர்பான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பிரச்சினைகளால் தமிழக சட்டப்பேரவையில் இன்று அமளி ஏற்படலாம் என்பதால், தலைமைசெயலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #TNAssembly #DMK
    சட்டசபை கூட்டத்தொடர் 29-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கு முந்தைய நாள் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. #TNAssembly #DMKMLAs
    சென்னை:

    தமிழக சட்டசபையில் பட்ஜெட் கடந்த மார்ச் 15-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதத்திற்குப் பிறகு சபை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் துறை வாரியான மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக வருகிற 29-ந் தேதி சட்டசபை மீண்டும் கூடுகிறது. அப்போது, துறை வாரியாக நிதி ஒதுக்குவதற்கு மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும்.



    இந்த கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி விவாதிக்க அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் நேற்று நடந்தது. இதில், மே 29-ந் தேதி முதல் ஜூலை 9-ந் தேதி வரை கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 28 ஆம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. அண்ணா அறிவாலயத்தில் 28 ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில் திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என கொறடா சக்கரபாணி அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்த கூட்டத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க. சார்பில் முன்வைக்க வேண்டிய கருத்துக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவு செய்யப்படும்.

    தமிழகம் சந்தித்து வரும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக இந்த கூட்டத் தொடரில் தி.மு.க. பிரச்சனை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. #TNAssembly #DMKMLAs

    ×