என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Chief Qazi"

    • தமிழகத்தில் கீழக்கரை, காரைக்கால் போன்ற பகுதிகளில் பிறை பார்க்கப்பட்டது.
    • ஷவ்வால் பிறை 31/03/2025 (திங்கள் கிழமை) ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தினமாகும்.

    ரம்ஜான் பண்டிகை வானில் தோன்றும் பிறையின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று தமிழகத்தில் பிறை தென்பட்டதை தொடர்ந்து நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழகத்தில் ரமலான் மாத பிறை தேட வேண்டிய நாளான 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் கீழக்கரை, காரைக்கால் போன்ற பகுதிகளில் பிறை பார்க்கப்பட்டது.

    நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டுதல் அடிப்படையில் ரமலான் மாதம் நிறைவுபெற்று 30/03/2025 ஞாயிற்றுக்கிழமை மக்ரிபிலிருந்து ஹிஜ்ரி 1446 ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை ஆரம்பானது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம். ஷவ்வால் பிறை 31/03/2025 (திங்கள் கிழமை) ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தினமாகும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் 21-ந் தேதி முகரம் பண்டிகை கடைபிடிக்கப்படுவதாக தலைமை காஜி முப்தி காஜி டாக்டர் சலாவூதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். #Muharram
    சென்னை:

    தமிழ்நாடு அரசு தலைமை காஜி முப்தி காஜி டாக்டர் சலாவூதீன் முகமது அயூப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முகரம் மாதத்திற்கான பிறை கடந்த 10-ந்தேதி (திங்கட்கிழமை) தென்பட்டது. இதனை தொடர்ந்து வரும் 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முகரம் பண்டிகை தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #Muharram
    ×