search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TNelectricity"

    • மின் கட்டணம் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிப்பு.
    • வணிக பயன்பாட்டிற்கு 50 கிலோ வாட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் உயர்வு.

    தமிழ்நாட்டில் வீடுகளுக்கான மின் இணைப்பில் 400 யூனிட் பயன்பாட்டாளர்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ளது.

    இந்த புதிய மின் கட்டணம் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    இதேபோல், வணிக பயன்பாட்டிற்கு 50 கிலோ வாட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மின்கட்டண உயர்வால் தமிழக மக்கள் மிகவும் சிரமப்படுவார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேலும் அவர், " 24 மணி நேரம் மின்சாரம் கொடுக்க முடியாத நிலையில், மின்கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளது.

    இப்போது மின்சார கட்டணத்தை உயர்த்திய அரசு அடுத்து பேருந்து கட்டணத்தை உயர்த்தும்" என்றார்.

    இதேபோல், மின்கட்டணத்தை அரசு உயர்த்தியது கண்டனத்திற்குரியது என பாமக வழங்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.

    இதுகுறத்து மேலும் அவுர், " விக்கிரவாண்டி தேர்தலுக்கு பிறகு மின் கட்டணத்தை அரசு உயர்த்தும் என முன்பே நாங்கள் கூறி வந்தோம்.

    இந்த மின் கட்டண உயர்வு தமிழக மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்" என்றார்.

    தொடர்ந்து, மின்கட்டண உயர்வு என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர், "மின் கட்டண உயர்வால் திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டை உணர முடிகிறது" என்றார்.

    ×