என் மலர்
நீங்கள் தேடியது "to contest"
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார். #LSpolls #Congress #RahulGandhi #Wayanad
திருவனந்தபுரம்:
பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதையடுத்து, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட வேலைகளில் துரித கதியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் கட்சியின் முக்கிய தலைவர்கள் வேட்பாளர்களாக போட்டியிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவார் என தகவல் வெளியானது.

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதை அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, உத்தரபிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுவது உறுதியாகியது. #LSpolls #Congress #RahulGandhi #Wayanad