search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tom and jerry"

    • 90 ஸ் கிட்ஸ் -களின் பிரியத்துக்குரிய டாம் அண்ட் ஜெரி கார்ட்டூனில் உள்ளது காமெடி அல்ல வன்முறை என்று தெரிவித்துள்ளார்.
    • ராஜமவுலி இயக்கிய பாகுபலி 2 , ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட படங்களில் உள்ள பிரபல காட்சிகள் டாம் அண்ட் ஜெரியை ஒத்திருப்பதாக இணையத்தில் டிரோல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

    பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் அக்சய் குமார், 90 ஸ் கிட்ஸ் -களின் பிரியத்துக்குரிய டாம் அண்ட் ஜெரி கார்ட்டூனில் உள்ளது காமெடி அல்ல வன்முறை என்று தெரிவித்துள்ளார்.

    கேல் கேல் மெய்ன் என்ற புதிய படத்தின் அக்சய் குமார் நடித்து முடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக ஆகா கல்யாணம் புகழ் வாணி கபூர், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சக நடிகர் பரீத் கான், தனக்கு டாம் அண்ட் ஜெரி மிகவும் பிடிக்கும் என்று பேசிக்கொண்டிருந்தார் .

    அப்போது இடைமறித்த அக்சய், டாம் அண்ட் ஜெரி என்பது காமெடி அல்ல அது வன்முறை, இன்று உங்களுக்கு ஒரு ரகசியத்தைச் சொல்கிறேன். நான் நடித்த படங்களில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் டாம் அண்ட் ஜெரியில் இருந்து இன்ஸ்பயர் ஆகி எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

     

     ராஜமவுலி இயக்கிய பாகுபலி 2 , ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட படங்களில் உள்ள பிரபல காட்சிகள் டாம் அண்ட் ஜெரியை ஒத்திருப்பதாக சமீப நாட்களாக இணையத்தில் விவாதம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வார்னர் ப்ரோஸ்-க்கு சொந்தமானது அமெரிக்க கேபிள் தொலைக்காட்சி சேனலான கார்ட்டூன் நெட்வொர்க்.
    • டாம் அண்ட் ஜெரி, ஸ்கூபி டூ, பவர் கர்ல்ஸ் , ஜானி பிராவோ கார்ட்டூன்களை பார்த்து மகிழ்ந்திருப்போம்.

    வார்னர் ப்ரோஸ்-க்கு சொந்தமானது அமெரிக்க கேபிள் தொலைக்காட்சி சேனலான கார்ட்டூன் நெட்வொர்க். அனைவரும் சிறுவயதில் டாம் அண்ட் ஜெரி, ஸ்கூபி டூ, பவர் கர்ல்ஸ் , ஜானி பிரேவோ கார்ட்டூன்களை பார்த்து மகிழ்ந்திருப்போம். இதை அனைத்தும் தயாரித்து அனைவரும் மகிழ்ச்சிக்கு வழிவகையாக இருந்தது கார்ட்டூன் நென்வொர்க் சேனல் ஆகும்.

    ஆனால் நாளடைவில் இதற்கு போட்டியாக பல தொலைக்காட்சி சேனல்கள் வந்தன. ஆனாலும் கார்ட்டூன் நெட்வொர்க்கின் உச்சம் குறையவில்லை. 2021 ஆம் ஆண்டு கோவிட் வந்த போது பல நிறுவனத்தில் இருந்து பணியிடை நீக்கம் நடந்தது. ஆனால் கோவிட் காலத்தில் எந்த ஒரு நட்டமும் இல்லாமல் இயங்கியது இந்த அனிமேஷன் துறை மட்டுமே ஆனால் பணத்தாசை பிடித்த முதலாளிகளுக்கு பலியாகும் விதமாக பல அனிமேஷன் நிபுணர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    இதனால் அடுத்த சில ஆண்டுகளில் பல பிரபல அனிமேஷன் ஸ்டூடியோக்களில் இருந்து பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் பல டிசைனர்ஸ் ஒன்றிணைந்து ஒரு கார்ட்டூன் நெட்வொர்க்கை கிண்டல் செய்யும் விதமாக எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில் உங்களுக்கு பிடித்தமான கார்ட்டுன் நெட்வொர்க் சேனலின் பிடித்த ஷோவின் கிலிப்பை #ripcartoonnetwork என்று பதிவிடமாறு கூறியிருந்தனர்.

    இதன் விளைவாக இந்த ஹேஷ்டாக் டிவிட்டரில் வைரலாகி , இன்று முழுவதும் டிரெண்டிங்கில் உள்ளது. இதனால் பலரும் கார்ட்டூன் நெட்வொர்க் நிறுவனம் மூடப்பட்டது என தவறான கண்ணோட்டத்தில் புரிந்துக்கொண்டனர்.

    ×