என் மலர்
நீங்கள் தேடியது "Tom Holland"
- ஸ்பைடர் மேன் 4 ஆம் பாகம் உருவாகி வருகிறது.
- இப்படத்திலும் ஸ்பைடர் மேனாக டாம் ஹாலண்ட் தான் நடித்துள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாலண்ட் நடிப்பில் உருவான ஸ்பைடர் மேன் திரைப்படம் வசூல் வேட்டையை நடத்தியது. இதனை தொடர்ந்து அதன் 2 மற்றும் 3 ஆம் பாகங்கள் வெளியாகி வசூலில் சக்கைபோடு போட்டன.
தற்போது ஸ்பைடர் மேன் 4 ஆம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்திலும் ஸ்பைடர் மேனாக டாம் ஹாலண்ட் தான் நடித்துள்ளார்.
இந்நிலையில், ஸ்பைடர் மேன் 4ஆவது பாகமான 'Spider Man: Brand New Day' படம் அடுத்தாண்டு ஜூலை 31ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
மேலும் அனிமேஷன் படமான Beyond the Spider Verse படம் 2027 ஆம் ஆண்டு ஜூன் 4ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஸ்பைடர் மேன் 4 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக டாம் ஹாலண்ட் தெரிவித்துள்ளார்.
- ஸ்பைடர் மேன் 4 படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கவுள்ளது
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாலண்ட். அன்சார்டட், டெவில் ஆல் த டைம், தி இம்பாசிபிள் உட்பட பல படங்களில் நடித்துள்ள இவர், ஸ்பைடர்மேன் வரிசை படங்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார். இவருக்கு இந்தியா உட்பட உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், டாம் ஹாலண்ட் 'ஸ்பைடர் மேன் 4 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் கூறியிருந்தார்.
ஸ்பைடர் மேன் 4 படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கும் என்றும் அதற்காக ஆவலடன் காத்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் டாம் ஹாலண்ட் நடிப்பில் உருவாகவுள்ள ஸ்பைடர் மேன் 4ஆவது பாகம் 2026-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ஸ்பைடர் மேன் படத்தின் 3 ஆம் பாகம் உலகம் முழுவதும் வசூலை வாரிக் குவித்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
