என் மலர்
நீங்கள் தேடியது "topsee"
தமிழில் முக்கிய கதாநாயகியாக வலம்வந்த டாப்சி தற்போது இந்தி படங்களில் பிசியாக இருப்பதால், தமிழ் பட வாய்ப்புகளை மறுத்து வருகிறார்.
தமிழை மறந்து முழு இந்தி நடிகையாக மாறிவிட்டார் டாப்சி. நாம் சபானா படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு டாப்சி ஆக்ஷன் வேடங்களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
தற்போது பட்வா என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கும் டாப்சி அடுத்து அமிதாப்புடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். சுஜாய் கோஷ் இயக்கும் இந்த படம் திரில்லராக உருவாகிறது. டாப்சி ஏற்கனவே பிங்க் படத்தில் அமிதாப்புடன் நடித்திருந்தார்.
டாப்சிக்கு வரிசையாக இந்தி வாய்ப்புகள் குவிவதால் தென்னிந்திய மொழிகளில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் மறுத்துவிடுகிறார். முக்கியமாக டாப்சியை ஆரம்ப காலங்களில் வளர்த்த தமிழிலும் நடிக்க மறுக்கிறார்.
இந்தியில் மட்டும் டாப்சியின் கையில் 4 படங்கள் இருக்கின்றன. சமீபத்தில் தமிழ் இயக்குனர் ஒருவர் அணுகியதற்கு கதை கேட்கவே மறுத்துவிட்டாராம் டாப்சி.